டேய் பிடி டா...
மாட்டேன் என்ன கட்டாயபடுத்தாதீங்க ..
டேய் சொன்னா கேளுடா.. எனக்காக ப்ளீஸ்..
நீங்களே இப்படி சொன்னா நான் என்ன செய்ய ??
டேய் இப்படி சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி?? நீ என் பையன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடா..
காலையில இருந்து போன் மேல போன்..நான் பையன் கிட்ட பேசி சமாதான படுத்துறேன்னு சொல்லி இருக்கேன் அவங்ககிட்ட..
உன்ன நாலு பேரு பாராட்டனும்னு எண்ணம் இருந்தா சிகரெட் பிடிச்சி தான் ஆகணும்.. அதான் டா பந்தா..
தண்ணி கூட வேணாம்னு விட்டுடலாம்,ஆனா தம் விஷயத்துல முடியாது டா...
நீ ஸ்டைலா தம் அடிச்சி நடிக்கனும், உனக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகணும்.. வாழ்க்கைல என்ன மாதிரி பெரிய எடத்துக்கு போகணும் ..
இது தான் எனக்கு சந்தோசம்..
Saturday, July 31, 2010
தலைக்கு மேல் கத்தி
லட்டுக்கு பிரியப்பட்டு, உலகில் சுயநலவாதிகள் இரண்டாவதாக அதிகம் வரும் இடம் அது.
அங்கே ஒரு முக்கியமான பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.. தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த நபர் பேசி கொண்டிருந்தார்..
அங்கே மயான அமைதி நிலவியது..
"தினமும் நம்மை நம்பி,பல பேரு பல எடத்துல இருந்து வராங்க. நாமும் அவங்களுக்காக நம்ப நேரத்த முழுசா செலவழைக்கிறோம்.
இதுல நமக்கு கிடைப்பது ரொம்ப சொற்பமான தொகை தான்.மத்தவங்க சுயநலத்துகாக நாம் கஷ்ட படுகிறோம்,இன்று முதல் நம்ப சுயநலத்தோட இருந்தா தான் நம்ப புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

கைல கத்தி எடுக்கணும்னா இனி நம்ப கேட்கறத அவங்க கொடுத்தே ஆகணும்.
எவ்ளோ பெரிய மயிரா இருந்தாலும் நம்ப கத்திக்கு பதில் சொல்லி தான் ஆகணும் ..
அரசாங்க தரப்பில் நிச்சயம் எதிர்ப்பு எழும்,அதுக்கு நாம அவங்க கழுத்துல வைக்கும் கத்தி தான் பதில் சொல்லணும்.
நம் கொள்கையில் இருந்து நாம் பின் வாங்கவே கூடாது..
நமக்காக,நம்ப குடும்பத்துக்காக, நாம தான் போராடனும்..
இதையெல்லாம் மீறி எனக்கு தெரியாம யாரவது ஆயுதத்த கைல எடுத்தீங்க, அவங்களுக்கு நானே மொட்ட போட வேண்டியது வரும்.. புரியுதா ?? "
என்று கூறி அவர் உரையை முடிச்சதும் பலமான கரகோஷம் எழுந்தது ...
Thursday, July 29, 2010
ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்
இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.
வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.
பார்த்ததும்,அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வகையில் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.
அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.
மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.
அதை கண்டவர், ஒரே வாரத்தில் மூன்று வித்தாயசமான வகையில் விளம்பர பலகையை தயாரித்த ஊழியர்களுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள எண்ணினார்.
அன்று அலுவலகத்தில், தனது விளம்பர குழுவின் ஊழியர்களை அவரது அறைக்கு அழைத்தார்.
ஏன் எதற்கு என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் நிற்க,

யார் இந்த விளம்பர பலகைக்கான வித விதமான ஐடியா கொடுத்தது. எதனை பேரு இந்த விளம்பர பலகைக்கான வேளையில் இருந்தீர்கள்
என்று ராஜசேகர் கேட்டார்.
குழப்பத்தில் இருந்தவர்களுக்கு மேலும் குழப்பமே உண்டானது.
"அய்யா எந்த விளம்பர பலகை பத்தி கேட்குறீங்க" என்று மேனேஜர் கேட்க, "மவுண்ட் ரோடு ல இருக்கே அத தான் சொன்னேன்" என்றார் ராஜசேகர்.
அப்படி எதுவும் பலகை நாம அங்க வைகலையே என்றார் மேனேஜர்.
சிரித்துகொண்டே ராஜசேகர்,
"யோவ் உன்ன போய் என் மேனேஜரா வச்சி இருக்கேன் பாரு, தினமும் அந்த வழியா வரேன், எனக்கு தெரியாதா" என்றார் அவர்.
"ஐயோ சார் உண்மையா சொல்றேன்,நம்ம ஆளுங்க வைக்கல அந்த பலகையை" என்று கூறியதும் ராஜசேகர் குழப்பத்தின் உச்சிக்கு சென்றார்.
சரி அப்படி என்றால் அத அந்த எடத்துல வச்சது யார்னு எனக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க என்றார்.
எப்படியோ கண்டு பிடிச்சி ரவி என்ற ஒருவன் தான் இந்த வேலைய பண்ணி இருக்கான் சார் என்று மேனேஜர் ராஜசேகரிடம் கூறினார்.
உடனே அவர், நான் அவனை பார்க்கணும், அவன கொஞ்சம் வர சொல்லுங்க ஆபீஸ்கு என்றார்.
அன்று மாலை 4 மணிக்கு ரவி அவர் அறைக்கு வந்தான்..
வா உட்கார் என்றார் ராஜசேகர்.
அவரது அழைப்பு வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது போல மிடுக்குடன் இருந்தான் ரவி.
நீ யார் ? என் கம்பெனி தயாரித்த வாகனத்திற்கு நீ ஏன் விளம்பர பலகை தயாரித்து நகரத்தின் முக்கியமான எடத்துல வைக்கணும் ? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு தயாராக பதில் வைத்திருந்த ரவி,
சார் ஒரு மாதத்திற்கு முன்பு உங்க கம்பெனில விளம்பர குழுவிக்கு (advertisement team) ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க.
MBA முடிச்ச நானும் அதற்காக அப்லை பண்ணினேன்.
ஆனால் முன் அனுபவம் இல்லாத ஒரே காரணத்தினால எனக்கு வேளை இல்லன்னு சொல்லி அனுபிட்டாங்க.
முன் அனுபவம் மட்டும்தான் முக்கியம் என்றில்லை... திறமையும்,உழைப்பும் கூட முக்கியம் தான்..

என்னோட திறமையை நிருபிக்க தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று அவன் சொல்ல,நாளை முதல் காலை 10 மணிக்கு மறக்காம ஆபீஸ்க்கு வந்துடனும் என்று கூறி அனுப்பினார் ராஜசேகர் ..
Wednesday, July 28, 2010
என்ன மரியாதை..என்ன மரியாதை
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..
பாபு என்று பெயர் கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை..
"இவரு எதிர்ல நடந்து வந்தா,அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்".
இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு..
பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.
மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.
ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.
இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேளை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான்.
தெலுங்கான பிரச்சனை தலைவிரித்து ஆடிய நேரமது.
நம்ம ஹீரோ ஹைதராபாத் போய் லேன்ட் ஆனாரு...
ரயில் விட்டு இறங்கியதும், பேருந்து ஒன்றில் ஏறினான்.
அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த ஒரு பெண்மணி நம்ம ஹீரோவை பார்த்து
"பாபு டிக்கெட் தீசிகுன்னாவா (தம்பி டிக்கெட் வாங்கிட்டியா)" என்று கேட்டார்.
அட என் பேரு பாபுனு உங்களுக்கு எப்படி தெரியும் என்றான் ஆச்சர்யமாக.
பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, உடன் வந்தவன் பாபுவிடம்,
"தெலுங்கான தெலுங்கானானு சொல்றாங்களே அந்த பேரு எப்படி வந்துச்சி ??" என்று கேட்டான் பாபுவிடம்.
நமக்கு பதில் தெரியாட்டியும் தெரியாதுன்னு எப்போ உண்மைய சொல்லி இருக்கோம்??
"தெலுங்கு கானா பாட்டு எல்லாம் இங்க இருந்து தான் பரவ ஆரமிச்சிது அதனால தெலுங்கானானு வச்சிடாங்க" என்றான் பாபு.
அடுத்து பேருந்தை விட்டு இறங்கியவன்,ஹோட்டல் சென்று
அரை ஒன்றை புக் செய்துவிட்டு,உணவு உன்ன சென்றான்.
ஹோட்டலில் ஆர்டர் எடுக்க வந்தவர் இவனை பார்த்து,
"பாபு ஏண்டி தின்டாறு (தம்பி என்ன சாப்பிட வேணும்) " என்றார்.
அட இவருக்கு கூட என் பேரு தெரிஞ்சி இருக்கு பாரேன் என்றான் உடன் வந்தவனை பார்த்து..
உடன் இருந்த எடுபுடி,
உங்களுக்கு எங்க போனாலும் மரியாதை தான் போங்க, எல்லாருக்குமே உங்கள தெரிஞ்சி இருக்கு என்று சொல்ல பாபு முகத்தை பார்க்கணுமே,அடேங்கப்பா...
பிறகு வந்த வேலைய பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஒரு டாக்ஸி புடிச்சி போயிட்டு இருந்தபோது, வழியில ஒரே கலவரம்..
கலவர காரன் ஒருத்தேன் பாபு போன கார வழி மறைச்சி..
"எந்த ஊருடா நீ" என்றான் தெலுகில்.
பாபுவுடன் வந்திருந்த நண்பன்,
"நேனு ஹைதராபாத் (நான் ஹைதராபாத்)" என்று கூறிமுடிக்க,
" பாபு நுவ்வு ?? (தம்பி நீ ?? ) " என்றார் பாபுவை பார்த்து..
உடனே நம்ம அறிவாளி பாபு,
"அட என் பேரு தெரிஞ்சி இருக்கு, ஆனா நான் தமிழ்நாடுனு மட்டும் தெரியாதா ?? " என்றான் அவரிடம்..
ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானானு கடுப்புல இருந்தவன், தமிழ்நாடு பேர கேட்டதும் வெறுத்துபோக, அப்புறம் என்ன சொல்லவா வேணும்,
"என்ன மரியாதை..என்ன மரியாதை" ...
பாபு என்று பெயர் கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை..
"உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்".

Tuesday, July 27, 2010
சுயம்வரம் - பகுதி 3
ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு.
பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ்.
அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவனது நண்பன் அருண்,
"உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம்.
"ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்.
"அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கினான் ராஜேஷ்.
அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் அலுவலகம் விடுமுறை என்பதால் நிம்மதியாக உறங்கினான்.
எழுந்து மின்னஞ்சலை பார்த்தால், ஞாயிறன்று இரண்டு சுற்றுக்கும் தேர்வு நடக்கவிருப்பதாகவும் அதற்கு வருமாறு வந்திருந்த அழைப்பைப் பார்த்து மலைத்தான்.
ஐந்து நாள் கசங்கி போய் வீட்டில் வந்து சாய்பவர்களின் சுயத்திற்கு தூக்கம் தானே வரம். அந்த பொக்கிஷமான நேரத்தில் போய் தேர்வு அது, இதுவா என யோசிக்க கொட்டாவி தான் வந்தது ராஜேஷுக்கு.
இருந்தாலும் அந்த பெண்ணை பார்க்கும் ஆவல் ஒருபுறம் சில்லென்று உணர வைத்தது.
"ஐயோ.. முதல் சுற்று எழுத்து தேர்வாமே!! ச்சே.. பதினெட்டு வருஷமா சுத்தி சுத்தி அடிச்சுது. திரும்பியுமா?" என்று ஏதோ பழைய புத்தகங்களை எல்லாம் தேடத் தொடங்கினான்.
"என்னடா ஆச்சு. தூங்காம ஒட்டடை எல்லாம் அடிக்கிற?" என்று ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மாவை பார்த்து,
"நீங்க வேற.. ஞாயித்துக் கிழம அந்த பொண்ணு டெஸ்ட் எழுத வர சொல்லியிருக்கு அம்மா. அதுக்காக தான் புக் எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன்" என்றான் ராஜேஷ்.
சிறிது நேரத்தில் நண்பரை காண சென்றிருந்த பத்மநாபன் வீடு திரும்பினார். அவனது அம்மா நடந்ததை அவரிடம் கூற நேராக அவனை நோக்கி நடந்தார்.
அவனது கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார்.
அந்த புத்தகத்தின் அட்டையில் ஏதோ "ஆர்.எஸ்.அகர்வால்" என்று ஆசிரியரின் பெயர் பதிந்திருந்தது.
சிரித்துகொண்டே, "என்ன புக் டா இது? நீ ஆளு மட்டும் தான் மாடு மாதிரி வளர்ந்திருக்க. அறிவு கொஞ்சம் கூட இல்ல" என்று அவர் கூறியவுடன் முகம் சிவந்தது ராஜேஷிற்கு.
"நாளைக்கு ரிட்டன் டெஸ்ட்க்கு நான் வேற என்ன தான் படிக்க?" என்றான் அவரிடம்.
"நீ இதுக்காக புதுசா எதையும் படிக்க வேணாம். போய் நிம்மதியா தூங்கு" என்றார் அவர்.
ராஜேஷின் இத்தனை வருட அனுபவத்தில் அவர் இப்படி சொன்னதே கிடையாது.
ஆனால் அதை நினைத்து மகிழ முடியாத நிலையில் இருந்தான். அவனாலும் படிக்க முடியவில்லை.
புத்தகத்தில் படிந்திருந்த தூசி அவனை பார்த்து சிரித்து வெறுப்பு வேறு ஏற்றியது.
மறுநாள் காலை எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே தேர்வு நடக்கவிருக்கும் ஹோட்டலுக்கு சென்றான்.
வாகனத்தை பார்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். எத்தனை பேர் வந்திருப்பார்கள் என தோராயமாக எண்ணிப் பார்த்த பொழுது சுமார் 100 பேரு வந்திருந்து பயமுறுத்தினார்கள்.
அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த நபரை நோக்கி பின்புறத்திலிருந்து சென்ற ராஜேஷ், தலையில் ஓங்கி அடித்தான்.
யார் அது தலையில அடிக்கறது என்று கோவத்துடன் அந்த நபர் திரும்ப,
"டேய் அருண் நாயே, நீ இங்க என்னடா பண்ற?" என்றான் ராஜேஷ்.
"நீயா?? ம்ம்.. நீ எதுக்கு வந்தியோ அதுக்கு தான்" என்று கண் சிமிட்டினான் அருண்.
"டேய் உனக்கு தான் உன் ஆளு நேஹா இருக்காளே? பின்ன ஏன்டா வந்த.. இங்க!!" என்று ராஜேஷ் கேட்க, "அதெல்லாம் நீ கேட்க கூடாது" என்றான் அருண்.
"என்னமோ பண்ணு. எப்படியும் உனக்கு ஊத்திக்க தான் போவுது."

"பொறாமையில் வெம்பாதடா."
இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, ஒரு குரல் அனைவரையும் அறைக்குள்ளே வருமாறு அழைத்தது.
இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, ஒரு குரல் அனைவரையும் அறைக்குள்ளே வருமாறு அழைத்தது.
இருவரும் அறைக்குள் சென்றனர். அருணும், ராஜேஷும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர்.
அருண் ராஜேஷிடம் செய்கையில்,
"எனக்கு கொஞ்சம் அப்போ அப்போ காமி டா" என்று கேட்க, அவனை முறைத்தவாரே அனைத்து விரல்களையும் மடக்கி கொண்டு நடு விரலை மட்டும் உயர்த்தி காட்டினான் ராஜேஷ்.
பெரியவர் ஒருவர் அறையிலிருந்த மேடையில் நின்றுக் கொண்டு, ஏதோ ஆங்கிலத்தில் ரொம்ப நேரம் ஆற்றிக் கொண்டிருந்தார்.பாவம் யாருமே கவனித்தது போல் தெரியவில்லை.
அந்த பெண் அங்கே வருவாளா என்ற எண்ணம் அனைவர் இடையேயும் இருந்தது. ஆனால் அவள் வருவது போல் தெரியவில்லை.
தேர்வுக்குரிய வினாத் தாளும், விடையளிக்க இரண்டு வெள்ளை தாள்களும் கொடுக்கப்பட்டன.
பரீட்சைக்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது. தேர்வு தொடங்கியது என்று அறிவித்ததும், வெள்ளை காகிதங்களில் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்த அனைவரும் வினாத் தாளை திறந்தனர்.
தொடரும்...
Wednesday, July 21, 2010
காதல் தூதன்
மாலை நேரம், சில்லென்று வீசும் தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள் நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த கொடிகள் புன்னகைத்தவாறே வரவேற்றன.
மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.
நான் அருகிலிருந்த புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.
குழந்தையை பாசத்துடன் தனது மடியில் தாங்கிக்கொள்ளும் அன்னையை போல், இயற்கை அன்னை அவள் மடியில் என்னை தாங்கிக் கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான நொடிகள் அவை.
கண் திறந்து சுற்றும் முற்றும் பார்த்த போது,அருகே இருந்த மலர் கூட்டத்தில் ஒரு ஆச்சர்யத்தை கண்டேன்.
வீசும் தென்றலின் திசைக்கேற்ப மெல்ல தலையசைக்கும் மலர்களுக்கு நடுவே, ஒரு மலர் மட்டும் அந்த தென்றலை எதிர்த்து வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தது .
அந்த நொடி வரை மலரின் நண்பனாக இருந்த தென்றல், அப்பொழுது மட்டும் எதிரியானது வியப்பை அளித்தது எனக்கு .
எதையோ எண்ணி தவித்துக் கொண்டிருந்த அந்த மலர்,என் பக்கம் திரும்பி என்னை அருகே வருமாறு தலையசைத்தது.
அழைப்பை ஏற்று அருகே சென்றேன்.
“எனக்கு உன் உதவி வேண்டும்” என்றது ஏக்கத்துடன்.
என்ன செய்ய என்று நான் கேட்கும் முன்பே என் காதில் மெல்லிய குரலில்,
அங்கே நீல நிற ஆடை அணிந்து செல்லும் தேவதையிடம் தன்னை சேர்க்க வேண்டும் என்றது.
அது கோரிய உதவியை மீற முடியாமல், அதனை தாங்கிக் கொண்டிருந்த செடியில் இருந்து பறித்தேன்.
என் கையில் மலரை தாங்கியபடி அந்த தேவதையை நோக்கி நடந்தேன்.
அருகே சென்ற நான், அவள் அழகில் திகைத்துநின்றேன்.
என் கண்களை சிமிட்டாதபடி சில நொடிகள் அவள் கண்களை பார்த்த நான், என் கையில் இருந்த சிவப்பு ரோஜாவை அவள் முன் நீட்டினேன்.
இங்கே அந்த மலருக்கு நான் தூதுவனா அல்ல அந்த மலர் என் காதலுக்கு தூதா ??
வீசும் தென்றலின் திசைக்கேற்ப
மெல்ல தலையசைக்கும் மலர்களுக்கு நடுவே
ஒரு மலர் மட்டும் அந்த தென்றலை எதிர்த்து
நீ செல்லும் திசை நோக்கி தலையசைத்தது ..
ஏனோ !?!
Monday, July 19, 2010
சுயம்வரம் - பகுதி 2
( இப்பதிவின் முதல் பகுதியை காண )
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்.
"வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.
மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".
ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??" என்று கேட்டார்.
அசடு வழிந்துகொண்டே,
"அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான்.
"அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,
"டேய்.. ராஜேஷ் என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக.
"அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்...
"அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதிரி ப்ராஜெக்ட் தகவல் எல்லாம் ஏன்டா அனுப்புற?"
"நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட போல!! லக்ஷ்மி இவனோட ஜாதகத்த கொஞ்சம் கொண்டு வா" என்றார்.
"ஐயோ.. அப்பா ஜாதகமா?? இவ்ளோ மாடர்னா விளம்பரம் கொடுத்தவங்க ஜாதகமா பார்க்க போறாங்க??"
"ஆமா இதெல்லாம் தெளிவா பேசு. வேலைக்கு போறவங்க தான் வேணும்னா மேட்ரிமோனியல் சைட்ல தான் போட்டோவோடு போட்டிருக்க போறாங்க."
"அப்புறம் என்ன அனுப்புறது?"
"ம்ம்.. "
"ம் னா?"
"உனக்கு ஒன்னும் இல்லன்னு.. மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட் அனுப்பி வையேன்."
"அப்பா. மூளைப்பா உங்களுக்கு" என்று ராஜேஷ் கட்டி பிடித்துக் கொண்டான் அப்பாவை.
எழுத்து தேர்வுக்கு எப்படியும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கை
ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு வித பதட்டத்துடனேயே காணப்பட்டான் ராஜேஷ்.
தொடரும் .....
Tuesday, July 13, 2010
சுயம்வரம் - பகுதி 1
வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.
திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,
"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி டா " என்றார்.
"இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க?? இப்போ நான் இருக்கும் கம்பெனி நல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.
ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.
அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.
26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroom
இப்படியும் ஒரு விளம்பரமா என்று ஆச்சர்யமாக பார்த்தான் ராஜேஷ்.
முழுமையாக படித்தவன் இறுதியில் அது என்ன "only for freshers" என்றான் தன் தந்தையிடம்.
அப்பா நான் செலக்ட் ஆகுறேனோ இல்லையோ, ஆனா இந்த பொண்ண ஒரு தடவையாவது பார்த்தே ஆகணும் என்று கூறி முதல் சுற்றுக்கு தயாரானான் ராஜேஷ்.
தொடரும் ....

Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds
1. Written test
2. Group Discussion
1. Written test
2. Group Discussion
Candidates clearing both the rounds would have a telephonic interview from the bride..
No of Vacancy : 1
*only for freshers
*only for freshers
இப்படியும் ஒரு விளம்பரமா என்று ஆச்சர்யமாக பார்த்தான் ராஜேஷ்.
முழுமையாக படித்தவன் இறுதியில் அது என்ன "only for freshers" என்றான் தன் தந்தையிடம்.
மணமாகாத பையனா இருக்க வேண்டும் என்பது தான் அது என்றார் அவர்.
அப்பா நான் செலக்ட் ஆகுறேனோ இல்லையோ, ஆனா இந்த பொண்ண ஒரு தடவையாவது பார்த்தே ஆகணும் என்று கூறி முதல் சுற்றுக்கு தயாரானான் ராஜேஷ்.
தொடரும் ....
Subscribe to:
Posts (Atom)