மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயி லில் படர்ந்திருந்த கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன. 
மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.
நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.
குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.
கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது,அருகே  இருந்த  மலர்  கூட் டத்தில்  ஒரு ஆச்சர்யத்தை கண்டேன்.
வீசும்  தென்றலின் திசைக்கேற்ப மெல்ல  தலையசைக்கும்  மலர்களுக் கு நடுவே, ஒரு  மலர்  மட்டும்  அந்த  தென்றலை எதிர்த்து  வேறெங்கோ  பார்த்து க் கொண்டிருந்தது .
அந்த நொடி வரை  மலரின்  நண்பனாக  இருந்த தென்றல், அப்பொழுது  மட்டும் எதிரியானது  வியப்பை  அளித்தது எனக்கு .
எதையோ எண்ணி தவித்துக் கொண்டிருந்த அந்த மலர்,என் பக்கம்   திரும்பி   என்னை அருகே  வருமாறு தலையசைத்தது.
அழைப்பை  ஏற்று  அருகே சென்றேன்.
“எனக்கு  உன்  உதவி  வேண்டும்” என்றது ஏக்கத்துடன். 
என்ன செய்ய என்று நான் கேட்கும் முன்பே என் காதில் மெல்லிய குரலில்,
அங்கே நீல நிற ஆடை அணிந்து செல்லும் தேவதையிடம் தன்னை சேர்க்க வேண்டும் என்றது. 
அது கோரிய உதவியை மீற முடியாமல், அதனை தாங்கிக் கொண்டிருந்த செடியில் இருந்து பறித்தேன்.
என் கையில் மலரை தாங்கியபடி அந்த தேவதையை நோக்கி நடந்தேன்.
அருகே சென்ற நான், அவள் அழகில் திகைத்துநின்றேன்.
என் கண்களை சிமிட்டாதபடி சில நொடிகள் அவள் கண்களை பார்த்த நான், என் கையில் இருந்த சிவப்பு ரோஜாவை அவள் முன் நீட்டினேன். 
இங்கே அந்த மலருக்கு  நான் தூதுவனா அல்ல அந்த மலர் என் காதலுக்கு தூதா ??  
 வீசும் தென்றலின் திசைக்கேற்ப
மெல்ல தலையசைக்கும் மலர்களுக்கு  நடுவே
ஒரு மலர்  மட்டும்  அந்த தென் றலை எதிர்த்து  
நீ செல்லும் திசை நோக்கி தலையசைத்தது ..
 ஏனோ !?! 
No comments:
Post a Comment