Friday, March 26, 2010

எந்தன் அழகி

தோழிகள் ஐவரும் வழியில் பிரிந்துச்செல்ல,அவள் மட்டும் தனியாக சென்றுக்கொண்டிருந்தாள்.

இரவு மணி 2, எனது அறையில் இருந்து அவளை பார்க்கும் ஆசையில் தயாராக,உடன் இருந்த என் தாய் "டேய் இத்தன மணிக்கு எங்க டா போகற ?? " என்றா
ள்..

தயங்கியபடியே "அவளை இப்பவே பார்க்கணும் போல தோன்றுகிறது" என்றேன்.


முகத்தில் சிறிது புன்னகையுடன் "சரிடா பார்த்து போயிட்டு வா" என்றா
ள்.

மகிழ்ச்சியுடன் அறையில் இருந்து வெளியேற முற்பட "டேய் நானும் உன்னோடு வருகிறேன்" என்றது என் தந்தையின் குரல். சற்றே யோசித்த நான், "சரி வாங்க" என்றேன்.

இருவரும் அவளை காணச்சென்றோம். பத்து நிமிட நடைபயணத்திற்கு பிறகு அவள் எங்கள் கண்களுக்கு தென்பட நான் அவள் அழகில் திகைத்து நின்றேன்.

நீண்ட தூரம் பயணத்தின் களைப்பு கூட அவளை பார்த்த பிறகு பறந்து சென்றது. எனக்காகவே அவள் இருப்பது போல் ஒரு எண்ணம் தோன்றியது.

அந்த கும்மிரிட்டிலும் வெள்ளை நிற ஆடை அணிந்து கொள்ளை அழகுடன் அவள் வந்துகொண்டிருக்க, தனது கையினை எனது தோலில் இருந்து எடுத்துவிட்டு ஒரு பார்வை பார்த்தார் எனது தந்தை.

அந்த பார்வையில் "இன்னும் ஏனடா அமைதியாக நிற்கிறாய்,உடனே செல் அவளிடம்" என்று அவர் கூறுவதை புரிந்துகொண்டேன் .

இனியும் தயங்கி நிற்க வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு அந்த குற்றால அழகியை கட்டியணைக்க ஆசையுடன் செல்ல,முந்திக்கொண்டு அவள் என்னைத்தொட்டா
ள் "சாரலாக".

9 comments:

பனித்துளி சங்கர் said...

வித்தியாசமான சிந்தனை!!

{{{கட்டியணைக்க ஆசையுடன் செல்ல,முந்திக்கொண்டு அவள் என்னைத்தொட்டால்
"சாரலாக".}}}}
அழகான வரிகள்!!!

வாழ்த்துகள் !

நிகழ்காலத்தில்... said...

பட்டைய கிளப்புறீங்க..))

வாழ்த்துகிறேன்..

மணிஜி said...

அருவி படம் போடாம இருந்தால் சஸ்பென்ஸ்

Anonymous said...

நல்லா இருகுங்க.

ஆனா இரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 4 மனிவரைதான் சுகமாகக் குளிக்க்லாம்.

ஒரு தடவை நனையணும். தலையமட்டும் துவட்டிட்டு வந்து 4 இட்லி 2 தோசை சாப்பிடணும். அருமையாக இருக்கும்.

மறுபடியும் நனையணும். தலையமட்டும் துவட்டிட்டு வந்து 4 இட்லி 2 தோசை சாப்பிடணும்.

சும்மா சூப்பரா இருக்கும். கூட ஒரு சேக்காளி இரும்தாம்னா சொர்க்கம்லா அது.

Unknown said...

நல்லா இருக்குங்க.. அருமையா எழுதறீங்க...

தமிழ் அமுதன் said...

அருமை ..!!! நான்கூட அவள் ரசிகன்தான் ..! படத்தை கடைசியில் போட்டு இருக்காலாம்..!

vinthaimanithan said...

அப்போ இது அவ இல்லீங்களா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்

இரகுராமன் said...

anaivarukkum nandri :)