Friday, February 11, 2011

தீராத விளையாட்டு நினைவுகள்

என்னுடைய பொறியியல் கல்லூரி நாட்களில் (2003 - 2007) எனக்கு ஒரே ஆறுதல் கால்பந்து மட்டும் தான். பள்ளியிலிருந்தே கால்பந்து ஆடிவந்த எனக்கு கல்லூரியின் அணியில் இடம் பிடிப்பது கடினமானதாக இருக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், நான் கல்லூரியில் சேரும் போது கால்பந்து அணியே சரி வர உருவாகவில்லை. சீனியர் அண்ணாக்கள், பாசமாக மிரட்டி தான் முதல் செமஸ்டரில் டீமில் சேர செய்தார்கள். 

அது என்னவோ வாட்ட சாட்டமாக இருப்பதால் இவன் டெஃபன்ஸ்க்கு (defence) தான் லாயக்கு என பள்ளி பருவம் முதலே முடிவு செய்துவிட்டார்கள். ப்ளேயிங் 11 இல் முக்கியமான நபர் தான் என்றாலும், நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடேக்கர் அல்ல என்பது எனக்கே தெரியும். இருந்தாலும் உடன் ஆடும் சக நண்பர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகமே.

அணியில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களில், வேலூர் VIT பொறியியல் கல்லூரியில் Rivera நடைபெற்றது. ராணிபேட் பொறியியல் கல்லூரியுடன் நடந்த முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி விழுப்புரம் திரும்பினோம். அடுத்து செங்கல்பட் CMC  யில் நடைபெற்ற ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவினோம்.

பிறகு தொடர்ச்சியாக அண்ணா பல்கலைகழகத்தின் zonal - 4 பிரிவில் சென்னை வள்ளியம்மை கல்லூரியில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்குபெற்றோம். 

முதல் சுற்று எங்களுக்கு க்ரேசென்ட் (Crescent) பொறியியல் கல்லூரியுடன் இருந்தது. 

எங்க விளையாட்டு வாத்தி எங்களை அழைத்து, "டேய் நமக்கு இப்போ மேட்ச் க்ரேசென்ட் காலேஜ் டீம் கூட டா.. செமயா ஆடுவானுங்க. பார்த்து ஆடுங்க" என்றார்.

முதல் சுற்றிலேயே கேவலமாக ஆடி க்ரேசென்ட் பொறியியல் கல்லூரியிடம் தோல்வியடைந்தோம். ஆக முதல் வருடம் முற்றிலும் நாங்கள் தோல்வி எனும் மந்திர சொல்லையே முணுக செய்தோம்.

பின்னர் எங்கள் கல்லூரியின் விளையாட்டு வாத்தி, தன் நண்பரான குட்டியை எங்கள் அணியின் பயிற்சியாளராக நியமித்தார். குட்டி அவர்கள், பாண்டிச்சேரி தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்து ஆடியவர். எங்களுக்கு விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர் எங்களுக்கு பயிற்சியளிக்க இசைந்தார்.

அவர் தனது முயற்சியால் புதுவையிலிருந்து சில அணியினரை எங்கள் கல்லூரிக்கு வர செய்து அவர்களுடன் நட்பு ரீதியல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற செய்தார். சிறந்த அணியினுடன் நாங்கள் ஆடிய ஆட்டங்கள மூலம் எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு எங்களை தயார் படுத்திக் கொண்டோம். விழுப்புரம் நகரில் நடைபெற்ற பல சிறிய போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினோம். 

இப்படியாக எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொண்டிருக்கும் போது, எனது இரண்டாம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் Zonal ஆட்டங்களை எங்கள் கல்லூரியில் நடத்த அனுமதி கிட்டியது.

முதன் முறையாக எங்கள் கல்லூரியில் நடைபெறும் போட்டி என்பதால் மகிழ்ச்சி கலந்த டென்ஷனில் இருந்தோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம். 
இரண்டு முறை தொடர்ந்து zonal 4 போட்டிகளில் வெற்றிப் பெற்ற க்ரேசென்ட் அணியினருடன் கடந்த வருடத்தின் தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் களத்தில் இறங்கினோம்.
ஆனால் அன்று எங்கள் கல்லூரியின் ஃபிகர்களுக்கு முன்னாடி எங்களை வென்று முகத்தில் கறியைப் பூசிவிட்டு சென்றார்கள் க்ரேசென்ட் அணியினர். அன்று முதல் அவர்களை நாங்கள் வெறுப்புடனே காண ஆரம்பித்தோம். அவர்களை வீழ்த்துவதே வாழ்க்கையின் லட்சியம் என்பது போல் வெறித் தனமான பயிற்சியில் இருந்தோம். மிரட்டலான ஆட்டத்தினை வெளிபடுத்த தொடங்கினோம்.

பின்னர் எனது இறுதியாண்டில் B.S. Abdur Rahman Trophy நடத்திய க்ரேசென்ட் கல்லூரி, அதில் பங்கெடுத்துக் கொள்ள எங்கள் கல்லூரிக்கு அழைப்பு விடுத்தனர். எங்கள் மண்ணில் எங்கள் ஃபிகர்களுக்கு முன் எங்களை வீழ்த்திச் சென்ற அவர்களை அவர்கள் மண்ணில் அவர்கள் ஃபிகர்களுக்கு முன் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். 
இந்தப் போட்டியில் சிறப்பான பல அணியினர் அங்கே கலந்துக் கொண்டனர். முகமது சதக், புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். கல்லூரி, சத்யபாமா, அண்ணா பல்கலைகழகம்(கிண்டி), MIT சென்னை என ஏகப்பட்ட கல்லூரிகள். முதலில் knock-out முறையில் தொடங்கிய போட்டி, பிறகு league  மேட்ச் முறையில் சென்றது.

Knock-out சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று லீக் சுற்றுக்கு புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, க்ரேசென்ட் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம்-கிண்டி அணிகளுடன் மோதினோம். 

லீக் சுற்றில் புனித ஜோசஃப் அணியினரை 1-0 என்கிற கணக்கில் வென்றோம். அண்ணா பல்கலைகழகத்துடனும் வென்றோம்.

இருபினும் மீண்டும் ஒரு தலை பட்சமான நடுவர் மூலம் க்ரேசென்டிடம் 2-1 என தோல்வியைத் தழுவினோம். போட்டிகளின் முடிவில் க்ரேசென்ட் அணியினரை விட ஒரு புள்ளி குறைந்திருந்தால் அவர்கள் முதலிடத்தையும், நாங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தோம். இம்முறையும் எங்கள் விருப்பம் நிறைவேறவில்லை. அவர்களை எங்களால் வெல்ல முடியவில்லை. 

என்னுடைய இறுதி ஆண்டிற்கான Zonal ஆட்டங்கள் மீண்டும் க்ரேசென்ட் கல்லூரியில் நடைபெற்றது. ஒரு முறை கிட்டிய வாய்ப்பை நழுவ விட்டோம் மீண்டும் விடுவதாக இல்லை.

ஆம் நீங்கள் நினைப்பது சரி தான். நாங்கள் அவர்கள் கல்லூரியில் அவர்களை வென்று சரித்திரம் படைத்தோம் (கொஞ்சம் ஓவர் பில்டப் தான், ஆனா பொறுத்துக்கோங்க ப்ளீஸ்).

ஒரு வழியாக நாங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டினோம். பிறகு INTER-ZONAL அளவில் அரை இறுதிக்கு சென்று சில அரசியல் காரணங்களால் எங்கள் அணியை ஆட விடாமல் வெளியேற்றினார்கள். 
அடுத்து மீண்டும் தேசிய அளவில் நடைபெற்ற VIT கல்லூரியின் RIVERA விற்கு சென்றோம். அந்த வருடம் VIT அணியை அவர்கள் மண்ணில் வீழ்த்தி, இறுதி வரை முன்னேறி இரண்டாமிடத்தை பிடித்தோம். 
பின்னர் களத்தில் இறங்கினாலே, "டேய் இது விழுப்புரம் வி.ஆர்.எஸ் காலேஜ் டீம் டா.. செமயா ஆடுவானுங்க" என்று எதிரணியினர் மிரளுமளவுக்கு எங்கள் கல்லூரியின் பெயரை நிலை நாட்டினோம். 



2003- 2004  VIT Rivera                           - முதல் ஆட்டத்திலேயே  தோல்வி.
2003- 2004  CMC Chengalpet                   - முதல் ஆட்டத்திலேயே  தோல்வி.
2003-2004  Anna university Zonal           - முதல் ஆட்டத்திலேயே க்ரேசென்ட்                                                                                                         அணியினரிடம் தோல்வி.
2004 -2005  Anna university Zonal          -  இறுதி  சுற்றில்  க்ரேசென்ட் அணியினரிடம் தோல்வி.
2006-2007  BS Abdur Rahman Trophy    -  இரண்டாமிடம் ( ஒரு புள்ளி குறைவு)
2006 -2007 Anna university Zonal           -  இறுதி  சுற்றில் க்ரேசென்ட் அணியினருடன் வெற்றி.
2006 -2007 Anna university Inter-Zonal    - அரை-இறுதி  சுற்றில் அணி வெளியேற்றம்.
2006- 2007  VIT Rivera                             - இரண்டாவது பரிசு 

அடிமட்ட நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உச்சியை அடைந்தோம். இந்த நான்கு வருட கல்லூரி வாழ்கையில், விளையாட்டில் மட்டுமல்ல பொதுவாகவே என்னுள் confidence லெவல் அதிகமானது. எதையும் எதிர்கொண்டு நிற்கும் மனநிலை உருவானது.

"யாரைக் கண்டு நாம பயந்து பின்வாங்குகிறோமோ அவன் நம்மை கண்டு பின் வாங்கும் வரை ஓயாதே.. விடாமுயற்சி இருந்தால் அவனே ஒரு நாள் உனக்காக கை தட்டுவான்."

5 comments:

அகமது சுபைர் said...

எங்க காலேஜ்ல ஒருதலைப் பட்சமான தீர்ப்பா?? சான்ஸே இல்ல.. நடக்கவே முடியாது.. நீங்க அந்த சமயத்தில நடுவர் யாருன்னு சொல்லுங்க.. நான் இதை கம்ப்ளெயின்டா ரிஜிஸ்டர் பண்றேன்.

இப்படிக்கு,
முன்னாள் க்ரசண்ட் கல்லூரி மாணவன்
2000-2004 பேட்ச்.

இரகுராமன் said...

ஆஹ் ஹா....அண்ணே எத்தனையோ ஊருக்கு போய் எத்தனையோ மேட்ச் ஆடுறோம் ஒவ்வொரு ஆட்டதுளையும் நடுவர் யார்ன்னு விசாரிக்கவா அண்ணே முடியும்..

ஆனா இப்பவும் சொல்லுவேன் எங்களை Inter-Zone அரை இறுதியிலிருந்து (அதியமான் கல்லூரிக்கு எதிராக )ஆட விடாமல் வெளியேற்ற பட்டத்திற்கு நீங்கள் படித்த கல்லூரியின் PT வாத்தி தான் காரணம்.. ஒரு பெரியவரு அவர். அவர் பெயரும் எனக்கு தெரியாது.. இது உண்மையா இல்லையான்னு நீங்களே வேணும்னா கேட்டு தெரிஞ்சிகோங்க. :) :)

ram said...

avarukku sema periya sotta irukkum:-)

எல் கே said...

ரகு இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கொடுத்து இருக்கலாம் ... மற்றபடி அருமை

இரகுராமன் said...

@எல் கே - அண்ணே நிச்சையமா முயற்சி செய்யுறேன்..நன்றி :) :)