Tuesday, August 17, 2010

விழுப்புரம் டூ சென்னை-எக்ஸ்பிரஸ் (ஒரு காதல் பிரயாணம்)

வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.

அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில் வரும் நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில் வருவதில்லைபனி புரியும் பலருள் நானும் ஒருவன்.

சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்  சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான்  தேவை படும் என நான் நம்புகிறேன்).
 
வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று இல்லத்தையடைந்தேன். இரண்டு நாட்கள் உண்டு உறங்கிவிட்டு,திங்களன்று சென்னை நோக்கி புறப்பட தயாரானேன். 

தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்த என் முகத்தில் சற்றே எரிச்சல். காரணம் சென்னை நோக்கி பயணம் செய்ய காத்திருந்த மக்கள் கூட்டம்.

(எப்புடி தான் சீட் போடுறாங்களோ தெரியல. ஆனால் கஷ்டப்பட்டு ஏறி சீட்ட போட்டுட்டு,ஜென்னல் கதவை திறந்து பேருந்தில் ஏற திண்டாடி கொண்டிருக்கும் மக்களை ஏளனமாக (நாங்க சீட்ட சீட்டுல  வச்சிட்டோம்ல)   ஒரு பார்வை பார்க்கும் போது ஏற்படும் திருப்தி இருக்கே, அட அதொன்றே போதும்.)

இப்பொழுது என்ன செய்வது என்பதைப்போல தந்தை என்னை பார்க்க, வேறு வழியே இல்லை சட்டையை கிழித்துக்கொண்டாவது பேருந்தில் இடம் பிடித்தே ஆக வேண்டும் என்றொரு முடிவுக்கு வந்தேன்.

அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தோம்,அப்பொழுது ஒரு குரல்,
"சார் எப்படி இருக்கீங்க??" என்றது.

(சந்தேகமே வேண்டாம், இப்படி மரியாதையோடு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள்)

 திரும்பி பார்த்தால்,அந்த குரலுக்கு சொந்தக்காரரான வெங்கடபதி எங்களை நோக்கி நடந்து வந்தார்.

(வெங்கடபதி என் தந்தைக்கு நன்கு பழக்கப்பட்டவர், எனக்கும் அவரை தெரியும் .எங்காவது என்னை பார்த்தால் ஒரு அழகான புன்னைகையை வெளிபடுத்துவார்.அமைதியான தோற்றம் உடையவர் அவர்.அவரை உறவினர் என்றும் கூறிவிட முடியாது, இல்லை என்றும் மறுத்துவிட முடியாது. கொஞ்சம் தூரம் தான் (உறவு முறையை சொன்னேன்))

அருகில் வந்தவர்,என்னை பார்த்து, "சென்னைக்கா" என்றார்

அவருக்கு நான் சொல்ல போகும் பதில் தெரிந்திருக்ககூடும் போல, சென்னைக்கு கூட்டம் அதிகமா இருக்கே எப்படி போக போற என்றார்

வேறு வழியில்லை,அலுவலகம் சென்றாக வேண்டும்,அடித்துபிடித்தாவது  சீட்டு போட்டுதான் ஆக வேண்டும் என்றேன்.

சிரித்துகொண்டே அப்படியே ரெண்டா போடேன் என்றார்.

நான் என் தந்தையை நோக்கி முறைத்தேன்.

(நானே சீட்டு போடும் போது சட்டை கசங்கிடும், முடி கலைந்துவிடும், வேர்த்து கொட்டலாம் என்ற கவலையில் இருக்கேன்,இதுல இவருக்கு வேற போடணுமாம்)

மேலும் பேச தொடங்கிய வெங்கடபதி,"என் பெண்ணும் அலுவலகம் போயாகனும்,அதுக்குதான்" என்றார்

தந்தையை நோக்கி முறைத்துக்கொண்டிருந்த  நான்,வெங்கடபதியை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நிச்சயமா போடுறேன் என்றேன்.  (இப்பொழுது என் தந்தை என்னை முறைத்தார்)
 
அந்நேரம் சரியாக ஒரு பேருந்து வந்தது,நானும் ஓடினேன், வெங்கடபதியும் ஓடினார். மிகுந்த போராட்டதிற்கு பின் பேருந்தினுள் ஏறினேன்.ஏமாற்றமே மிஞ்சியது.

எல்லாமே போச்சி என்று என்னிக்கொண்டிருக்க,வெங்கடபதி என்னை நோக்கி கையை அசைத்தார். வாப்பா  இங்க வந்து உட்கார் என்றார்.

ஜென்னலோரம் அந்த பெண் அமர்ந்திருக்க,அருகில் நானும் அமர்ந்தேன்.கீழே இருந்து என் தந்தை என்னை ஒரு பார்வை பார்த்தார் (மானத்தை வாங்கிடாத டா என் மவனே என்பதை போல் இருந்தது அது) அவரை கண்டும் காணாததை போல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.அவரும் வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினார்

பேருந்து புறப்பட்டதால் வெங்கடபதியும் புறப்பட தயாரானார்.

மணி  6.20, பேருந்து நான்கு வழி சாலையில் அதன் வேகத்தில்  இயங்கிகொண்டிருந்தது. 

பேருந்தின் ஹார்ன் சப்தம் மட்டும் காதில் கேட்டது.

முதல் 15 நிமிடங்கள் நான் அமைதியாக தான் இருந்தேன்,அவள் என்னிடம் தண்ணீர் வேண்டுமா என கேட்கும் வரை. 

தண்ணியில கண்டம் போல பாவம். (அவளுக்கு சொன்னேன்)

அவள் என் பள்ளி பருவத்தில்  எனக்கு இரண்டு வருடங்கள் ஜூனியர். அவளை முன்பே தெரியும். ஆனால் அவளுக்கு என்னை தெரியுமா ?? 

உன் பெயர் மறந்து போச்சி என்றேன்

சாந்தி என்றாள்

என் பெயர் உனக்கு தெரியுமா ??

தெரியும் ரகு தானே.. 

சிரித்துக்கொண்டேன்.

தந்தையின் பார்வை ஞாபகத்துக்கு வந்தது, இருக்கையில் எங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. பயணத்தின் இறுதி வரை அந்த இடைவெளி தொடர்ந்தது.

எங்க வேலை செய்கிறீர்கள் என்றாள்

நான் பனி புரியும் நிறுவனம் பற்றி கூறினேன்.

நீ எங்கே என்றேன்
அவள் பனி புரிவது என் நிறுவனத்தின் போட்டி நிறுவனம்

எனக்கு அதை பற்றி மேலும் பேச விருப்பமில்லை. அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.

மீண்டும் பேருந்தின் சப்தமே காதுக்கு கேட்டது.

இதற்குள் திண்டிவனம் தாண்டியாயிற்று.

என் மனதுள் இவ்ளோ சீக்கிரமா என்ற ஆச்சர்யம். நேரம் கழிவது கொஞ்சமும் தெரியவில்லை.

மீண்டும் அவள் பேச தொடங்கினாள்.

"உங்க பொழுதுபோக்கு என்ன?"

(ஒன்னும் இல்லாததையும் ஓவரா பில்டப் பண்ண நமக்கு சொல்லியா கொடுக்கணும்.)

நானும் புத்தகம் படிப்பேன், பாடல் கேட்பேன், அப்போ அப்போ கொஞ்சம் கதையும் எழுதுவேன் என்று சொல்லிவைத்தேன்.

கதையா ?? என்றாள் ஆச்சர்யத்துடன். (அவள் கேட்டதில் எனக்கு ஆச்சர்யமில்லை, அவள் கேட்கவேண்டும் என்பதற்காக தானே சொன்னேன்)

ஆமாம்,இப்போ  தான் ஒரு வருஷமா எழுதிட்டு இருக்கேன்.

நீங்க எழுதியதில் எதாவது ஒரு கதையை சொல்லுங்களேன்.. ஆர்வமாக கேட்டாள்அவள்

"விதி யாரை விட்டது".   

நானும் அவள் கதற கதற ஒரு கதையை சொல்லி முடித்தேன்.  

ரொம்ப நல்லா இருக்குங்க என்றாள் அவள். (வழக்கமாக என் கதையை கேட்பவர்கள் வேறு வழியின்றி  சொல்லும் பதில் தான் இது. அனால் அவள் சொன்னது அழகாகவே இருந்தது. பெண்கள் பொய் சொன்னாலும் அழகா தான் இருக்கும் போல)

மீண்டும் அமைதி நிலவியது. அடுத்து என்ன கேட்கலாம் என்று அவள் யோசித்துகொண்டிருந்தாள் போலும். 

இப்பொழுது நாங்கள் செங்கல்பட்டை தாண்டிவிட்டோம்

சிறிது நேரம் அவள் பள்ளி படிப்பை முடித்து,சென்னையில் பொறியியல் பயின்ற கல்லூரியை பற்றி பேசிகொண்டிருந்தாள்

அது ஒரு பிரபலமான கல்லூரி தான், சீட் கிடைப்பது கொஞ்சம் கடினமே. இருப்பினும் இவளது 12th  மதிப்பெண்கள் காரணமாக இவளுக்கு எளிதில் அங்கே சீட் கிடைத்தது போலும்

அங்கிருந்து campus recruitment மூலமாக அந்த தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததை பற்றி பேசினாள்

இப்பொழுது தாம்பரமும் தாண்டியாகிவிட்டது. அவள் கத்திபாரவில் இறங்கிவிடுவாள், நான் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும்

இப்பொழுது வேறு எதாவது கதை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டாள்

நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். (இருக்காதா பின்னே,என்னிடம் ஒருமுறை கதை கேட்ட எவரும் மறுமுறை கதை சொல்லுங்களேன் என்று கேட்டதே கிடையாது.)

நானும் ஒரு கதையை சொன்னேன். பொறுமையாக கேட்டுகொண்டிருந்தவள் பிரமாதமாக இருக்குது என்றாள்

என்னிடம் நன்றியை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை

இன்னும் ஐந்து நிமிடங்களில் அவள் இறங்கும் இடம் வந்துவிடும் என்று எனக்கு தோன்றியது .

என் கைபேசியை  வேகமாக எடுத்தேன், அதில் நியூ  மெசேஜ் ஒன்று டைப் செய்து அவளிடம் உங்க நம்பர் ப்ளீஸ் என்றேன்

" யாம் சாரி" , நான் நம்பர் யாரிடமும் கொடுபதில்லை என்றாள்

முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.  

இப்பொழுது அவள்  என்னை பற்றி என்ன நினைத்து  கொண்டிருப்பால்?? நம்பர் கேட்டது தவறோ ?? கொஞ்சம் அவசர பட்டுடேனோ ?? என்னுள் ஆயிரம் கேள்விகள்.

அவள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுஉங்களுக்கு வேண்டுமா என்றால்.

தண்ணியில கண்டம் போல பாவம். (இப்போ எனக்கு சொல்லிக்கிட்டேன்

இருப்பினும் பதட்டத்தை முகத்தில் காட்டாமல், நான் டைப் செய்து வைத்திருந்ததை அவளிடம் காட்டினேன்

அதிலிருக்கும் லிங்கை அவள் பார்த்தாள். 

என்னை தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், கதையை ஆர்வமாக கேட்டதால் என்னுடைய  blog லிங்கை தான் உனக்கு அனுப்பலாம் என்றிருந்தேன், மற்றபடி தவறான எண்ணம் எதுவுமில்லை என்றேன்.  

அவள் உடனே தனது கைபேசி எடுத்து அதில் அந்த blog லிங்கை டைப் செய்து drafts இல் சேவ் செய்து கொண்டாள்

மறுபடியும் மன்னிப்பு கோரினாள்

நான் தலையை தொங்க போட்டு கொண்டிருந்தேன்.  

அவள் இறங்கும் இடம் வந்தது, இருக்கையை விட்டு எழுந்தவள்

“லக் இருந்தால் அடுத்த திங்கள் காலை சந்திப்போம் என்று கூறி  இறங்கிவிட்டாள்.  

சென்றவள் அவள் கொண்டுவந்த பையை மட்டும் கொண்டு செல்லவில்லை, என் இதயத்தையும் சேர்த்து தான்

மூன்று வாரங்கள் கடந்துவிட்டன,இதுவரை அவளை காணும் அதிர்ஷ்டம் எனக்கு அமையவில்லை.

இனி அமையுமா ?? இதற்கும் என்னிடம் பதிலில்லை

இந்த பதிவை அவள் படிப்பாளா ??

இதற்க்கு என்னிடம்  பதில் இருக்கிறது, நிச்சியம் படிக்க மாட்டாள் 

அப்படி மீறி படித்தாள் ??  

மீறி படித்தாள்,இந்த வாரம் வீட்டில் சோறு கிடையாது நமக்கு..
வீட்டுக்கு போய் தான் பார்ப்போமே ...

Thursday, August 12, 2010

சுயம்வரம் - பகுதி 4

முதல் பகுதி.. 

இரண்டாம் பகுதி..

மூன்றாம் பகுதி  

 

வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.

1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?

2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?

3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?

4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?

5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?

'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். 

அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,

"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ்.

ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்"
என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்து என்று கத்தினான்.

"மச்சி.. இதோ கத்துதே இது யாருன்னு தெரியுமா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இவன் தான்டா என்னை இன்டர்வியூ பண்ணான். எல்லாரும் ரிசல்ட்ட மெயில் பண்றேன் என்று தான சொல்லுவாங்க. ஆனா இவன் 'கெட் ஒவுட் யூ இடியட்' என்று கத்தினான். 
அப்பவே இவனுக்கு நாப்பது வயசு இருக்கும். காதோரமா 'டை ஊத்துது பாரேன். தாத்தா இன்டர்வியூக்கு வந்ததே தப்பு. சவுன்ட பாரேன். நீ வேணா பாரு இவனுக்கு கல்யாணமே ஆகாது" என்றான் அருண்.

பெரியவர் புன்னகைத்தவாறே, "வெளியில் போக வழி அந்த பக்கம்" என்றார்.
அருணால் சபிக்கப்பட்டவன் தொடர் ஆங்கில வசையின் சுருதியை குறைத்துக் கொண்டே வெளியில் போனான். அவனை தொடர்ந்து மேலும் சிலர் வெளியில் சென்றனர்.

'எப்பா போய் தொலைங்கடா.. காத்து வரட்டும்' என்று நினைத்துக் கொண்டான் ராஜேஷ்.

 எல்லாரும் சென்றதும், 'ச்சே.. அவ்ளோ தானா?' என்று திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் அந்த 'டை ஆசாமி அறைக்கு வந்து அந்த பெரியவரைப் பார்த்து,  
"ஐ வில் ஃபைல் எ கேஸ் ஆன் யூ கைஸ் லீகலி" என்று சொல்லி விட்டு சென்றான். மீண்டும் சிலர் வெளியில் சென்றார்கள்.

ராஜேஷ் மகிழ்ச்சியாக அருணை பார்த்தான். ஆனால் அருண் வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான். 

'அடப்பாவி!! மாங்கு.. மாங்குன்னு எழுதுறான். முதல் வேளையா நேஹாவுக்கு போன் பண்ணி சொல்லனும்' என்று எண்ணியவாறே வினாத்தாளை மீண்டும் பார்த்தான்.

'எதுக்கு இந்த அஞ்சு கேள்விக்கு.. ஒரு மணி நேரம் கொடுத்திருக்காங்க? ஒருவேள யோசிக்கனுமோ!!நேத்து படிச்சிருந்தா எல்லாம் வேஸ்ட் தான் போல!!' என்று ராஜேஷ் வருத்தப்படும் பொழுது, வினாத் தாளில் இருந்து அவனது தந்தை பத்மநாபன் இவனை பார்த்து கண்ணடித்து கடுப்பேற்றினார். ராஜேஷ் பெரு மூச்சு விட்டவாறே வினாக்களை மீண்டும் படித்தான்.

'நான் சின்ன வயசுல லாலி பாப் சாப்பிட்டிருக்கேன்?' என்று தன்னை தானே கேள்விக் கேட்டுக் கொண்டான். 'இது வேலைக்கு ஆகாது போல'  கேள்வியை விட பதில் மொக்கையாக எழுதலாம் என தீர்மானித்துக் கொண்டான்.

1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?
     --- அன்னிக்கு என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கேனோ அந்த நிற லாலி-பாப் தான் பிடிக்கும்.

2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?
     --- அமெரிக்கா எப்படி இருக்கு?

3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?
     --- கூன் விழுந்தா தான் நிமிர வைக்கனும். விவசாயம் எப்பவும் போல் தான் இருக்கு. ஆனால் விவசாயிகள் நிலைமை தான் கூன் விழுந்தது போல்  உள்ளது. இயற்கை வேளாண்மையை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, குறிப்பாக இளம் விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம். அல்லது விவசாயிகளுக்கு எல்லாம் ஐ.டி. பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி வச்சா கூட ஊக்கம் தானாக வரும்.

4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?
     --- ஹி..ஹி.. அதை நான் பொண்ணுங்க காதில் தான் சொல்லுவேன்.


5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?
      --- இது அந்த பொண்ணுக்கு வர வேண்டிய கவலை.

எழுதிய பதில்களை மீண்டும் படித்துப் பார்த்தான் ராஜேஷ். மீதம் அரை மணி நேரம் இருந்தது.

அருண் இன்னும் எழுதிக் கொண்டிருந்தான். அறையில் இருந்தவர்கள் சிலர் யோசித்துக் கொண்டும், சிலர் எழுதிக் கொண்டும் இருந்தனர். பெரியவர் ராஜேஷையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. ராஜேஷ் எழுந்து விடைத் தாளை கொடுத்தான். அவர் வினாத் தாளையும் சேர்த்து வாங்கிக் கொண்டார். 

'வெளியில் போய்,இந்த கொஸ்டின் பேப்பர மறுபடியும் யூஸ் பண்ணுவாங்களோ?' என்று யோசித்துக் கொண்டான் ராஜேஷ். 

அரை மணி நேரம் கழித்து அருணும், மற்றவர்களும் வந்தனர்.

"ச்சே.. டைம்மே பத்தலடா?" என்று நொந்துக் கொண்டான் அருண்.

"என்ன நீ கொலக்காரனா ஆக்காமா விட மாட்டேன்னு நினைக்கிறேன். சரி எப்ப ரிசல்ட்டாம்?" என்று கேட்டான் ராஜேஷ்.

"இன்னும் ஒரு மணி நேரத்துல சொல்வாங்களாம். அந்த பெருசு சொல்லுச்சு. அப்புறம் இந்த ஹோட்டலுல எல்லாருக்கும் மதிய சாப்பாடு அரேஞ்சு பண்ணியிருக்காங்களாம். வா."

இருவரும் ஹோட்டலில் ஒரு டேபிளில் இடம் பிடித்தனர்.

மேசை அடியில் செல்லிடப்பேசி எடுத்து, நேஹாவின் எண்ணிற்கு தொடர்புக் கொள்ள முயன்றுக் கோன்டிருந்தான் ராஜேஷ்.

மறுபுறம் அருணிடம்,

"சரி இவ்ளோ நேரம் நீ அப்படி என்ன எழுதி கிழிச்ச?" என்றான். 

முதல் கொஸ்டின்க்கு பிங்க். ஏன்னா அது "கேர்ளி (girly) கலர்". ப்ரீத்தி ஜிந்தா கூட ஒரு விளம்பரத்துல, 'பிங்க்கி கிட்ட வச்சுக்காத'ன்னு சொல்வாங்களே.

அப்புறம் அடுத்த கொஸ்டின். அமெரிக்கா எப்பவுமே அப்படி தான்.

மூணாவது,விவச்சாயத்திற்கு  திரும்பி ஒரு பசுமைப் புரட்சி வேண்டும்.

நெக்ஸ்ட், ரகசியம் ஒன்று இருப்பதை 

கடைசியா, பிடிக்கலன்னா ஒரு கப் காஃபி சாப்ட்டு, 'பில் பே பண்ணிடுங்க' என்று சொல்லிட்டு கை குலுக்கிட்டு வந்துடுவேன்."

"இதையா மாங்கு.. மாங்குன்னு எழுதின?"

"உங்கிட்ட சிறுசா சொன்னதா அங்க பெருசா எழுதினேன்" என்று சிரித்தான் அருண்.

"ம்ம்.. நீ பண்றது மட்டும் நேஹாவுக்கு தெரிஞ்சா?"


"தெரிஞ்சா என்னடா பண்ணிடுவா?"


"அத.. நீயே கேளேன். லைன்ல தான் இருக்கா" என்று ராஜேஷ் தனது செல்போனை அருணிடம் நீட்டினான்.

-அடுத்த பாகத்தில் முடியும்.

Wednesday, August 11, 2010

தேடி போய் வாங்கி கட்டிக்கிட்டது

எப்பவும் போல அவன் வண்டி ஓட்டுவான்,நம்ப வேடிக்க பார்த்துக்கிட்டே போகலாம்னு நெனைச்சேன்,ஆனா அன்னைக்கு பார்த்து தலவலிக்குது நீயே ஓட்டுடானு சொல்லிட்டான் என் நண்பன்..

சரின்னு நானும் வண்டிய ஆபீஸ்கு (office) விட்டேன்...பின்னாடி மேல சாஞ்சிக்கிட்டே தூங்கிகிட்டு வந்தான் என் நண்பன்.
 
அப்பொழுது ஒரு சிக்னலில் பச்சை விளக்கு மின்னுவதர்காக காத்துக்கொன்டிருந்தேன்...

அங்கே எதிரே நின்றுக்கொண்டிருந்த போக்குவரத்துதுறை காவல் அதிகாரி கையில் ஒரு கேமரா வைத்திருந்தார்.. 

திடிரென்று என்னை பார்த்ததும் என்னை படம்பிடிக்க தயாரானார்..
அட காலையில
கலக்கலா ஆபீஸ்கு போறோமே அத தான் அவரு போட்டோ எடுக்க போறாருன்னு நானும் என்னோட வலதுகையை உயர்த்தி உற்சாகமாக ஆட்டினேன்..
அதை பார்த்துவிட்டு என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தவர்,

" டேய் எதுக்கு டா இப்போ கையை உயர்த்தி ஆட்டின ?" என்றார்...
எனக்கு ஒன்னும் புரியல இருந்தாலும் அவரிடம்,



"நீங்க என்ன தான் போட்டோ எடுகரீங்கனு நெனைச்சி ஆட்டினேன்" என்றேன்..
அதற்கு அவர், "ஆமாம் உன்ன தான் எடுத்தேன் ஆனா ஏன் எடுத்தேன்னு தெரியுமா??" என்றார்..
அப்போ தான் புரிஞ்சிது...



"போக்குவரத்து விதியை மீறி சிக்னலில் எல்லை கோட்டை தாண்டி நிற்பதால் போட்டோ எடுத்து ஆதாரத்தோடு நம்மை அழைத்து அபராதத்தை பிடுங்குவார்கள் என்று" ... 

பிறகு என்ன வழக்கம் போல்,


"நீதிமன்றத்திற்கு போனால் 1000 அபராதம் கட்டனும் இல்லைனா எனக்கு ஒரு 300 ருபாய் கொடு என்று ஆரம்பித்தார்"...
ஐயோ சும்மா இருந்தா கூட விட்டிருப்பான்,கையை தூக்கி ஆட்டி நானே வம்புல சிக்கிட்டேன்னு எரிச்சலோட ஆபீஸ் போய் சேர்ந்தேன்.....

அட அவனா நீ !!

"நீ இல்லாத வாழ்வில் ருசி இல்லை" ---- நீ இல்லாத ஒரு வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியாது..
 
"உன்னை வெறுப்போர் யவரும் இல்லை" ----அனைத்து
பெண்களும் உன் பின்னால் தானே அலைகிறார்கள்
 
"உன்னை சேதப்படுத்த முயன்றால் அவ்ளவுதான் " ---- கண்ணுல இருந்து தார தாரையா கண்ணீர் கொட்டும்.. முக்கியமா பெண்களுக்கு
 
"உன்னால் மத்தியில் நடக்கும் ஆட்சியை கூட மாற்ற இயலும்"
---அதான் ஒரு முறை பார்த்தோமே. அவ்ளோ பவர் உனக்கு
 
"உன் பெயரை சொல்லியே ஊருக்குள் ஒரு பெரியவர் பிரபலம் ஆனார்".
---- உன் பெயரை சொல்லும் அவருக்கே ஊருக்குள் அவ்ளோ மரியாதை

இப்படி உன்னை பத்தி சொல்லிகிட்டே போகலாம் என்று அவள் கூறி கொண்டேயிருக்க,
 
"ஏய் வாயாடி,சமையல் அறையில என்ன முனு முனுன்னு சத்தம்..ரெண்டு வெங்காயம் கட் பண்ண உனக்கு இவ்ளோ நேரமா" என்றால் அவள் தாய்..