வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் திங்களன்று காலை சென்னைக்கு பி ரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.
அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில் வரும் நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில் வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.
அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில் வரும் நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில் வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.
சென்னையிலிருந்து புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில் விழுப்புரம் சென்றடை
வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று இல்லத்தையடைந்தேன். இரண்டு நாட்கள் உண்டு உறங்கிவிட்டு,திங்களன்று சென்னை நோக்கி புறப்பட தயாரானேன்.
தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்த என் முகத்தில் சற்றே எரிச்சல். காரணம் சென்னை நோக்கி பயணம் செய்ய காத்திருந்த மக்கள் கூட்டம்.
(எப்புடி தான் சீட் போடுறாங்களோ தெரியல. ஆனால் கஷ்டப்பட்டு ஏறி சீட்ட போட்டுட்டு,ஜென்னல் கதவை திறந்து பேருந்தில் ஏற திண்டாடி கொண்டிருக்கும் மக்
இப்பொழுது என்ன செய்வது என்பதைப்போல தந்தை என்னை பார்க்க, வேறு வழியே இல்லை சட்டையை கிழித்துக்கொண்டாவது பேருந்தில் இடம் பிடித்தே ஆக வேண்டும் என்றொரு முடிவுக்கு வந்தேன்.
அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தோம்,அப்பொழுது ஒரு குரல்,
"சார் எப்படி இருக்கீங்க??" என்றது.
(சந்தேகமே வேண்டாம், இப்படி மரியாதையோடு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள்)
திரும்பி பார்த்தால்,அந்த குரலுக்கு சொந்தக்காரரான வெங்கடபதி எங்களை நோக்கி நடந்து வந்தார்.
(வெங்கடபதி என் தந்தைக்கு நன்கு பழக்கப்பட்டவர், எனக்கும் அவரை தெரியும் .எங்காவது என்னை பார்த்தால் ஒரு அழகான புன்னைகையை வெளிபடுத்துவார்.அமைதியான தோற்றம் உடையவர் அவர்.அவரை உறவினர் என்றும் கூறிவிட முடியாது, இல்லை என்றும் மறுத்துவிட முடியாது. கொஞ்சம் தூரம் தான் (உறவு முறையை சொன்னேன்))
அருகில் வந்தவர்,என்னை பார்த்து, "சென்னைக்கா" என்றார்.
அவருக்கு நான் சொல்ல போகும் பதில் தெரிந்திருக்ககூடும் போல, சென்னைக்கு கூட்டம் அதிகமா இருக்கே எப்படி போக போற என்றார்.
வேறு வழியில்லை,அலுவலகம் சென்றாக வேண்டும்,அடித்துபிடித்தாவது சீட்டு போட்டுதான் ஆக வேண்டும் என்றேன்.
சிரித்துகொண்டே அப்படியே ரெண்டா போடேன் என்றார்.
நான் என் தந்தையை நோக்கி முறைத்தேன்.
(நானே சீட்டு போடும் போது சட்டை கசங்கிடும், முடி கலைந்துவிடும், வேர்த்து கொட்டலாம் என்ற கவலையில் இருக்கேன்,இதுல இவருக்கு வேற போடணுமாம்)
மேலும் பேச தொடங்கிய வெங்கடபதி,"என் பெண்ணும் அலுவலகம் போயாகனும்,அதுக்குதான்" என்றார்.
தந்தையை நோக்கி முறைத்துக்கொண்டிருந்த நான்,வெங்கடபதியை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நிச்சயமா போடுறேன் என்றேன். (இப்பொழுது என் தந்தை என்னை முறைத்தார்)
அந்நேரம் சரியாக ஒரு பேருந்து வந்தது,நானும் ஓடினேன், வெங்கடபதியும் ஓடினார். மிகுந்த போராட்டதிற்கு பின் பேருந்தினுள் ஏறினேன்.ஏமாற்றமே மிஞ்சியது.
எல்லாமே போச்சி என்று என்னிக்கொண்டிருக்க,வெங்கடபதி என்னை நோக்கி கையை அசைத்தார். வாப்பா இங்க வந்து உட்கார் என்றார்.
ஜென்னலோரம் அந்த பெண் அமர்ந்திருக்க,அருகில் நானும் அமர்ந்தேன்.கீழே இருந்து என் தந்தை என்னை ஒரு பார்வை பார்த்தார் (மானத்தை வாங்கிடாத டா என் மவனே என்பதை போல் இருந்தது அது) அவரை கண்டும் காணாததை போல் இருக்கையில் அமர்ந்திருந்
பேருந்து புறப்பட்டதால் வெங்கடபதியும் புறப்பட தயாரானார்.
மணி 6.20, பேருந்து நான்கு வழி சாலையில் அதன் வேகத்தில் இயங்கிகொண்டிருந்தது.
பேருந்தின் ஹார்ன் சப்தம் மட்டும் காதில் கேட்டது.
முதல் 15 நிமிடங்கள் நான் அமைதியாக தான் இருந்தேன்,அவள் என்னிடம் தண்ணீர் வேண்டுமா என கேட்கும் வரை.
தண்ணியில கண்டம் போல பாவம். (அவளுக்கு சொன்னேன்)
அவள் என் பள்ளி பருவத்தில் எனக்கு இரண்டு வரு
உன் பெயர் மறந்து போச்சி என்றேன்.
சாந்தி என்றாள்.
என் பெயர் உனக்கு தெரியுமா ??
தெரியும் ரகு தானே..
சிரித்துக்கொண்டேன்.
தந்தையின் பார்வை ஞாபகத்துக்கு வந்தது, இருக்கையில் எங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. பயணத்தின் இறுதி வரை அந்த இடைவெளி தொடர்ந்தது.
எங்க வேலை செய்கிறீர்கள் என்றாள்.
நான் பனி புரியும் நிறுவனம் பற்றி கூறினேன்.
நீ எங்கே என்றேன்.
அவள் பனி புரிவது என் நிறுவனத்தின் போட்டி நிறுவனம்.
எனக்கு அதை பற்றி மேலும் பேச விருப்பமில்லை. அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.
மீண்டும் பேருந்தின் சப்தமே காதுக்கு கேட்டது.
இதற்குள் திண்டிவனம் தாண்டியாயிற்று.
என் மனதுள் இவ்ளோ சீக்கிரமா என்ற ஆச்சர்யம். நேரம் கழிவது கொஞ்சமும் தெரியவில்லை.
மீண்டும் அவள் பேச தொடங்கினாள்.
"உங்க பொழுதுபோக்கு என்ன?"
(ஒன்னும் இல்லாததையும் ஓவரா பில்டப் பண்ண நமக்கு சொல்லியா கொடுக்கணும்.)
நானும் புத்தகம் படிப்பேன், பாடல் கேட்பேன், அப்போ அப்போ கொஞ்சம் கதையும் எழுதுவேன் என்று சொல்லிவைத்தேன்.
கதையா ?? என்றாள் ஆச்சர்யத்துடன். (அவள் கேட்டதில் எனக்கு ஆச்சர்யமில்லை, அவள் கேட்கவேண்டும் என்பதற்காக தானே சொன்னேன்)
ஆமாம்,இப்போ தான் ஒரு வருஷமா எழுதிட்டு இருக்கேன்.
நீங்க எழுதியதில் எதாவது ஒரு கதையை சொல்லுங்களேன்.. ஆர்வமாக கேட்டாள்அவள்.
"விதி யாரை விட்டது".
நானும் அவள் கதற கதற ஒரு கதையை சொல்லி முடித்தேன்.
ரொம்ப நல்லா இருக்குங்க என்றாள் அவள். (வழக்கமாக என் கதையை கேட்பவர்கள் வேறு வழியின்றி சொல்லும் பதில் தான் இது. அனால் அவள் சொன்னது அழகாகவே இருந்தது. பெண்கள் பொய் சொன்னாலும் அழகா தான் இருக்கும் போல)
மீண்டும் அமைதி நிலவியது. அடுத்து என்ன கேட்கலாம் என்று அவள் யோசித்துகொண்டிருந்தாள் போலும்.
இப்பொழுது நாங்கள் செங்கல்பட்டை தாண்டிவி
சிறிது நேரம் அவள் பள்ளி படிப்பை முடித்து,சென்னையில் பொறியியல் பயின்ற கல்லூரியை பற்றி பேசிகொண்டிருந்தாள்.
அது ஒரு பிரபலமான கல்லூரி தான், சீட் கிடைப்பது கொஞ்சம் கடினமே. இருப்பினும் இவளது 12th மதிப்பெண்கள் காரணமாக இவளுக்கு எளிதில் அங்கே சீட் கிடைத்தது போலும்.
அங்கிருந்து campus recruitment மூலமாக அந்த தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததை பற்றி பேசினாள்.
இப்பொழுது தாம்பரமும் தாண்டியாகிவிட்டது. அவள் கத்திபாரவில் இறங்கிவிடுவாள், நான் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.
இப்பொழுது வேறு எதாவது கதை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டாள்.
நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். (இருக்காதா பின்னே,என்னிடம் ஒருமுறை கதை கேட்ட எவரும் மறுமுறை கதை சொல்லுங்களேன் என்று கேட்டதே கிடையாது.)
நானும் ஒரு கதையை சொன்னேன். பொறுமையாக கேட்டுகொண்டிருந்தவள் பிரமாதமாக இருக்குது என்றாள்.
என்னிடம் நன்றியை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
இன்னும் ஐந்து நிமிடங்களில் அவள் இறங்கும் இடம் வந்துவிடும் என்று எனக்கு தோன்றியது .
என் கைபேசியை வேகமாக எடுத்தேன், அதில் நியூ மெசேஜ் ஒன்று டைப் செய்து அவளிடம் உங்க நம்பர் ப்ளீஸ் என்றேன்.
"ஐ யாம் சாரி" , நான் நம்பர் யாரிடமும் கொடுபதில்லை என்றாள்.
முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.
இப்பொழுது அவள் என்னை பற்றி என்ன நினைத்து கொண்டிருப்பால்?
அவள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, உங்களுக்கு வேண்டுமா என்றால்.
தண்ணியில கண்டம் போல பாவம். (இப்போ எனக்கு சொல்லிக்கிட்டேன்)
இருப்பினும் பதட்டத்தை முகத்தில் காட்டாமல், நான் டைப் செய்து வைத்திருந்ததை அவளிடம் காட்டினேன்.
அதிலிருக்கும் லிங்கை அவள் பார்த்தாள்.
என்னை தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், கதையை ஆர்வமாக கேட்டதால் என்னுடைய blog லிங்கை தான் உனக்கு அனுப்பலாம் என்றிருந்தேன், மற்றபடி தவறான எண்ணம் எதுவுமில்லை என்றேன்.
அவள் உடனே தனது கைபேசி எடுத்து அதில் அந்த blog லிங்கை டைப் செய்து drafts இல் சேவ் செய்து கொண்டாள்.
மறுபடியும் மன்னிப்பு கோரினாள்.
நான் தலையை தொங்க போட்டு கொண்டிருந்தேன்.
அவள் இறங்கும் இடம் வந்தது, இருக்கையை விட்டு எழுந்தவள்,
“லக் இருந்தால் அடுத்த திங்கள் காலை சந்திப்போம்” என்று கூறி இறங்கிவிட்டாள்.
சென்றவள் அவள் கொண்டுவந்த பையை மட்டும் கொண்டு செல்லவில்லை, என் இதயத்தையும் சேர்த்து தான்.
மூன்று வாரங்கள் கடந்துவிட்டன,இதுவரை அவளை காணும் அதிர்ஷ்டம் எனக்கு அமையவில்லை.
இனி அமையுமா ?? இதற்கும் என்னிடம் பதிலில்லை.
இந்த பதிவை அவள் படிப்பாளா ??
இதற்க்கு என்னிடம் பதில் இருக்கிறது, நிச்சியம் படிக்க மாட்டாள்.
அப்படி மீறி படித்தாள் ??
மீறி படித்தாள்,இந்த வாரம் வீட்டில் சோறு கிடையாது நமக்கு..
வீட்டுக்கு போய் தான் பார்ப்போமே ...
6 comments:
வார இறுதி , 3 .3 0 மணி நேரத்தில் வீடு கொஞ்சம் அதிகமா தெரியல இந்த பீலிங்க்ஸ் ? அதுவும் வரும்போது துண்டு போட்டாவது சீட் கிடைக்குதே சந்தோசப் படனும் . நான்கு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்கு போய் நாலு நாள் மட்டும் வீட்டில் இருக்கும் எங்களை என்ன சொல்வீங்க ? அதுவும் அந்த பயணத்துக்கு 90 முன்னாடியே டிக்கெட் புக் செஞ்சு அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்னாடியாவது போய் வர என்று 2 டிக்கெட் கன்பார்ம் ஆனாதான் பயணத்தையே ஆரம்பிக்க முடியும் . வாரா வாரம் வீட்டுக்கு போயிட்டு நல்லா மூக்கு பிடிக்க ............. எத்தனை வருத்தம் ?
தந்தையை நோக்கி முறைத்துக்கொண்டிருந்த நான்,வெங்கடபதியை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நிச்சையமா போடுறேன் என்றேன். (இப்பொழுது என் தந்தை என்னை முறைத்தார்)
---------------------------------------------
எப்படி தல இப்படி பின்றிங்க?
@ மதார் - அவன் அவன் கவலை அவன் அவனுக்கு .. உங்களுக்கு பார்க்கும்படியா பஸ் ல எவனும் சிக்கலையோ :P
@ நவீன் - நெசமாவா சொல்லுறீங்க.. மிக்க நன்றி :)
சென்றவள் அவள் கொண்டுவந்த பையை மட்டும் கொண்டு செல்லவில்லை, என் இதயத்தையும் சேர்த்து தான்.
mmm
பாஸ் உங்க பக்கத்துல உக்காந்ததால நீங்க சென்னை வர்றதுக்குள்ள ரெண்டு கதை சொல்லிட்டீங்க. உண்மைத்தமிழன் அண்ணன் பக்கத்துல உக்காந்திருந்தா யோசிச்சுப் பாருங்க??
ஏங்க ரகு, முடிவே பண்ணிட்டீங்க போல. "ஒரு காதல் பிராயாணம்" அவங்க படிக்கலைன்னா என்ன. உங்க அப்பாவுக்கு ஒரு லிங்க் அனுப்பறது... மேட்டர் சீக்கிறம் முடிஞ்சிடும்ல...
Post a Comment