"நீ இல்லாத வாழ்வில் ருசி இல்லை" ---- நீ இல்லாத ஒரு வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியாது..
"உன்னை வெறுப்போர் யவரும் இல்லை" ----அனைத்து
பெண்களும் உன் பின்னால் தானே அலைகிறார்கள்
"உன்னை சேதப்படுத்த முயன்றால் அவ்ளவுதான் " ---- கண்ணுல இருந்து தார தாரையா கண்ணீர் கொட்டும்.. முக்கியமா பெண்களுக்கு
"உன்னால் மத்தியில் நடக்கும் ஆட்சியை கூட மாற்ற இயலும்"
---அதான் ஒரு முறை பார்த்தோமே. அவ்ளோ பவர் உனக்கு
"உன் பெயரை சொல்லியே ஊருக்குள் ஒரு பெரியவர் பிரபலம் ஆனார்".
---- உன் பெயரை சொல்லும் அவருக்கே ஊருக்குள் அவ்ளோ மரியாதை
இப்படி உன்னை பத்தி சொல்லிகிட்டே போகலாம் என்று அவள் கூறி கொண்டேயிருக்க,
"ஏய் வாயாடி,சமையல் அறையில என்ன முனு முனுன்னு சத்தம்..ரெண்டு வெங்காயம் கட் பண்ண உனக்கு இவ்ளோ நேரமா" என்றால் அவள் தாய்..
5 comments:
அட இது அதில்ல.... நல்லாருக்குங்க.
//அணைத்து பெண்களுக்கும்//????
சரி செய்யவும்.
Changes done .. Thanks a lot :)
பிரதர், சமையல் செய்யும் போது அதே கவனமா செய்யனும். வெங்காயம் உரிக்கறத கூட ஒரு பதிவா எழுதுவதைத் தான் பெரியார் "வெங்காயம்"னு சொல்வார்.
அட அவனேதான் , கண்ணு ரெண்டுலயும் தண்ணி தாரைதாரையா போகும் போது கூட யோசனைய பாரு ?
pengal samaiyal araiyul irukkum pothu etti paarunga .. thanukku thaane pesikolvathai unarveergal :P
Post a Comment