எனக்கு ஒரு சில காரணத்தினால் எனது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் தேவைப்பட்டது..
சார் இந்த பாஸ்போர்ட்ட ரெண்டு காபி (copy) ஜெராக்ஸ் போட்டு கொடுங்க என்றேன் நான் அந்த கடையில் இருந்தவரிடம்.
பாஸ்போர்ட்டை என்னிடமிருந்து வாங்கிய அந்த பெரியவர், "தம்பி இந்தாபா உள்ள நூறு ரூபா நோட் இருக்கு" என்று என்னிடம் திருப்பி கொடுத்தார்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்,நான் கவனிக்கவே இல்லை" என்று காசை எடுத்து சட்டை பாக்கட்டில் வைத்தேன்.
கடையில் இருந்து வீடு திரும்பிய நான், "அம்மா,பாஸ்போர்ட்குள்ள நீங்க தான் நூறு ரூபாய் வச்சீங்களா??" என்றேன்.
"ஆமாம் நான் தான் வச்சேன். இப்போ என்னடா அதுக்கு??"
"காச ஏன் அதுக்குள்ள வைக்குறீங்க, வேறு எங்கையாவது பத்திரமா வைக்கலாம்ல" என்று நான் கேட்டு முடிப்பதற்குள்,டேய் அது நீயா சம்பாதிச்ச முதல் நூறு ரூபாய்டா, அதான் பாஸ்போர்ட்குள்ள தனியா இருக்கட்டுமேனு வச்சேன்.
அப்பொழது தான் எனக்கு நியாபகத்துக்கு வந்தது,ஒரு கிளப்புக்காக நான் கால்பந்து விளையாட சென்ற போது எனக்கு கொடுக்கபட்டது அந்த நூறு ரூபாய்.
சரி சரி என்று சொல்லிக்கொண்டே இருக்க,வீட்டினுள் நுழைந்தார் அபிராமி அம்மாள்.
"எப்படி மா இருக்கீங்க ??" என்றேன் நான்.
அபிராமி அம்மாள் என் கேள்விக்கு பதில் சொல்வதற்குள்,உங்கள யாரு இப்போ வர சொன்னது?? ஏன் இப்படி அலைஞ்சிட்டு இருக்கீங்க? என்றார் என் தாய்.
தம்பி லீவ்க்கு வந்திருக்கறதா சொன்னாங்க,இதுக்கப்புறம் தம்பிய பார்ப்பேனோ இல்லையோ? அதான் வந்தேன் என்றார்.
அவரிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன்.. ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் தன இல்லத்துக்கு புறபட்டார்.
என் தாய் என்னை தனியாக அழைத்து,டேய் உன் கையாள ஒரு நூறு ரூபாய் கொடுத்து அனுப்புடா என்றார்.
நானும் பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து அபிராமி அம்மாவிடம் கொடுத்தேன்.
அபிராமி அம்மாள் சென்றபின்..
என் நியாபகார்த்தமாக அம்மா வச்சிருந்த 100 ரூபாய் தான் அவங்க கிட்ட கொடுத்தது எனக்கு புரிந்தது. இதை என் அம்மாவிடம் சொன்னேன்.
இன்னும் கொஞ்ச நாள் தான்,அதனால தான் உன்ன வந்து பார்த்துட்டு போறாங்க.
"வேலைய விட்டு நிறுத்த போறீங்களா??"
ஒரு சில வினாடி மௌனத்திற்கு பின்,
கான்செர் அவங்களுக்கு,ரொம்ப லேட்டா வந்துடீங்க இனி எங்களால ஒன்னும் செய்ய முடியாதுன்னு டாக்டர் கையை விரிச்சிட்டாங்க. மீதி இருக்க போகற நாட்களை எண்ணிக்கிட்டு இருக்காங்க.
உன்ன பாக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தாங்க. இனிஅந்த நூறு ரூபாய் உன் நியாபகத்துக்கு வரும்போதெல்லாம் அவங்க நியாபகமும், அவங்க உன் மேல வச்சி இருந்த பாசம் தான் நியாபகத்துக்கு வரணும்.
எங்களால் அவர்க்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லையே என்ற கவலையை தவிர வேறு எதுவும் அச்சமையம் என்னை உறுத்தவில்லை.
நூறு ரூபாய் தாளை பார்க்கும்போதெல்லாம் அவங்க ஞாபகம் தான் எனக்கு வருதுன்னு சொல்ல மாட்டேன் ஆனால் அப்பப்போ அவங்க ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை, நான் தவிர்க்கவும் விரும்பவில்லை.
8 comments:
இப்படித்தான் வாழ்க்கை
உருக்கமான பதிவு....
ரெம்பவே மனச சங்கட படுத்துடீங்க.....
நல்லா எழுதியிருக்கீங்க!
நூறு ரூபாய்ன்னு இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதிதம்பி எழுதியிருந்தார் fb ல அதுமாதிரியோன்னு நினைச்சேன் முதல்ல!
பட் இது வேற kind of thinking
நல்லாருக்கு!
நல்லாருக்கு!
நல்லாருக்கு
நாற்பது ஆண்டுகட்கு முன்னர் எனக்குக் கொடுக்கப்பட்ட 5 ரூ நோட்டு இன்னும் எனது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது ! அய்ந்து ரூபாய்க்கு இன்று மதிப்பில்லாமல் இருக்கலாம்,ஆனால் அந்த நோட்டிற்கு மதிப்பு மிக மிக அதிகந்தான்.
பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி :-)
Post a Comment