Thursday, August 5, 2010

ஈஸ்வரின் சபதம்


டேய் இன்னைக்கு எங்கயும் போகாத,என்னோட ஸ்கூல் ப்ரென்டு சுகந்தி வீட்டுக்கு போனும் டா..

ஒன்றும் காதில் விழாதவன் போல டிவி பார்த்துகொண்டிருந்தான் ஈஸ்வர்.

சமையல் அறையில் இருந்தவர் சற்று சப்தமாக, "டேய் சொன்னது கேட்டுச்சா ??" என்றார்..

கேட்டுச்சி..கேட்டுச்சி ..ஆமாம்,உங்க ப்ரென்டு வீடு எல்லாம் வறண்டு போய் தான் இருக்கும்.. சுத்த வேஸ்ட் .. எதாவது கண்ணனுக்கு குளிர்ச்சியா இருக்கா ?  

என்னடா ஏதோ பொலம்பிக்கிட்டு இருக்கா மாதிரி தெரியுது ??. 

அதெல்லாம் ஒன்னும் இல்ல, எப்போ போகனும்னு சொல்லுங்க ..

இன்னும் அரை மணிநேரத்துல என்றார் அவன் தாய்.

சரி, நீங்களும் அளவா மேக்கப் போட்டுக்கிட்டு தயாரா இருங்க,நான் இதோ வெளிய போயிட்டு வரேன். 


சரி சீக்கிரம் வந்துடு டா.

சரியாக 45 நிமிடங்கள் கழித்து வந்தான்..

எரும மாடே,நான் தான் போகணும்ன்னு சொன்னேன்ல.. எல்லாத்தையும் கேட்டுட்டு லேட்டாவே வர.. 

திட்டு வாங்கிகொண்டே அவனது வாகனத்தில் அழைத்து சென்றான்.

இறுதியில் ஒரு பச்சை நிற பெயிண்ட் அடிக்கபடிருந்த அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினான்..

"ஹாய் சுதா,எத்தன வருஷம் ஆச்சி உன்ன பார்த்து, இப்போ தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா உனக்கு? " என்று வழக்கமான வசனத்துடன் வரவேற்பு இருந்தது..

ஐயோ,இவங்க பள்ளிகூட கதை, கல்லூரி கதை, கல்யாண கதை இது எல்லாத்துக்கும் பிளாஷ் பாக் (flash back) போயிட்டு இப்போதைய கதைக்கு வரதுக்குள்ள எனக்கு மண்டையே வெடிசிடுமே..

எல்லாம் விதி..காலேஜ் இருக்கும் போது கட் அடிச்சிட்டு நல்லா சுத்தினேன். இன்னைக்கு
சண்டே, லீவ் விட்டும் இப்படி அவஸ்த படனும்னு இருக்கு என்று எண்ணி நொந்துக்கொண்டான்.


"இவேன் உன் பையன்தான,சின்ன வயசுல பார்த்தது.. நல்லா வளந்துட்டான் இப்போ" என்றார் சுகந்தி.


(இதே வசனத்த போன வாரம் தான் இன்னொரு ப்ரென்டு வீட்டுல சொன்னாங்க.இந்த அம்மா கூட படிச்சவங்க எல்லாருமே இப்படி தான் போல.)

என்னப்பா படிக்கற நீ ?

"B.Tech Bio Technology இறுதியாண்டு படிக்கிறேன்"

ஓஹ் அப்படியா, நல்ல கோர்ஸ் அது. நல்லா படி,நல்ல வேலையில போய் சீக்கிரம் உட்காரு என்று சொல்லி கையில் ஒரு தட்டில் கொஞ்சம் பிஸ்கட், ஒரே ஒரு லட்டு மட்டும் வச்சி கொடுத்தாங்க..

என்ன நடு வீட்டில் கையில் தட்டை கொடுத்து சாப்பட வச்சிட்டு, இவங்க மட்டும் ரூம்க்கு போய் ஏதோ பேசிட்டு இருக்காங்களே என்று கோவம் கோவமாக வந்தது..

லட்டை ருசித்துக்கொண்டிருந்தவன், திடிரென்று கண்களை சிமிட்டாமல் வீட்டு சுவரில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு போட்டோவை பார்த்தான்.

அதில் பெரியவர்கள் இருவரும், ஒரு அழகான பெண்ணும் இருந்தனர்.. 

"காவேரி டெல்டா பகுதி நிலம் போல காஞ்சி போய் இருந்தவன் முகத்துல,மேட்டூர் ஆணை திறந்து விட்டது போல் சந்தோஷம்" .

ஐயோ இப்படி ஒரு பொண்ணோட அம்மா என் அம்மாக்கு தோழியா ??
இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற வீட்டுக்கு கூட்டிகிட்டு வராம,இத்தன வருஷமா
நேரத்த வேஸ்ட் பண்ணி இருகாங்க என்று எண்ணிக்கொண்டு இருந்தான்..


தட்டில் இருந்த லட்டு வயிற்றை சென்றடைய, வெளியே கேட் திறக்கும் சப்தம் கேட்டது அவனுக்கு.

வீட்டினுள் இருவர் நுழைய, நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவன் அவளை பார்த்து எழுந்தே நின்றே விட்டான்.
(நல்லவேளை யாரும் அவனை கவனிக்கவில்லை)

அம்மா,நீங்க கேட்ட அந்த பிரியாணி அரிசி கடையில இல்ல,அப்பறம் இன்னைக்கு புதுசா ஒரு மசாலா பாக்கெட் வாங்கி வந்திருக்கேன் அது எப்படி இருக்குனு பாக்கலாம்
என்று நாற்காலி அருகில் நிற்கும் ஈஸ்வரை கவனிக்காமல் பேசிகொண்டே இருந்தால்.


"நீ முதலில் அறைக்குள் வா என்று அவளது தாய் அழைக்க,அவளும் உள்ளே சென்றால்.இவங்க தான் சுதா என்னோட ஸ்கூல் தோழி. உங்கிட்ட கூட சொல்லி இருக்கேன்ல அது இவங்க தான்" என்று அறிமுகம் படுத்தி வைக்க, எனது

"அம்மாவும்,உன் பொண்ணு சந்தியாவா இது ?,சின்ன வயசுல பார்த்தது நல்லா வளந்துட்டாள் இப்போ" என்று அதே ஸ்துதியை பாடினார்.


சிரித்துக்கொண்டே நான் BSC Maths படிக்கிறேன் என்றால். 
(வளர்ந்துட்டாலாம் அதை சொல்லி காட்டுரா  )

 
"ஓஹ்ஹ் கணக்கா, என் புள்ளைக்கு சுத்தமா வராது" என்றால் ஈஷ்வரின் தாய்.

அவள் அவனை ஒரு முறை பார்த்தல், உதட்டோரம் அந்த சிரிப்பு தெரிந்தது..

அம்மாவை முறைத்துகொண்டே,சந்தியாவை கரெக்ட் பண்ண வெறியா மனதை தயாராக்கி கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

அனைவரும் அறையில் உரையாட, இவன் மட்டும் சந்தியாவுடன் கடையில் இருந்து வந்த அவள் மாமா பையனிடம் விளையாடி கொண்டிருந்தான்.


ரெண்டு மணிநேர அரட்டைக்கு பிறகு அங்கிருந்து புறப்பட, அந்த சிறுவன், இந்த மாமா இங்கயே இருகட்டுமே என்றான்..

அதற்கு சந்தியாவின் தாய்,

"இப்போ போகட்டும் டா,ஒரு வேலைக்கு போயிட்டு சேர்ந்த பிறகு மாமாவ நம்ப வீட்டுக்கே கூப்டிக்கிட்டு வந்துடலாம்" என்று சொன்னார்.

இதை கேட்ட உற்சாகத்தில், சந்தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாகனத்தின் வேகத்தை உயர்த்தினான்.


"திறக்க மறுக்கும் என் இதய கதவை,
உடைக்க துடிக்கும் கள்ளி இவள் தானோ !!"
 

வீடு திரும்பும் வழியில்,அம்மாவிடம் எப்போ மறுபடியும் வர சொன்னாங்க என்று அவன் கேட்க,வழகத்துக்கு மாறா பேசுறானே என்ற சந்தேகத்துடன் வீடு வந்து சேர்ந்தார் சுதா.

Tuesday, August 3, 2010

ஆசைகள் ஆயிரம்

மதிய வேளையில்,சிக்னலின் அருகில் ஒரு கடையின் நிழலில்  நின்று கொண்டிருந்த இரண்டு "25 வயது" மதிக்கத்தக்க போக்குவரத்துத்துறை காவலர்கள்,

மகேஷ் :   டேய் முரளி,அங்க ஒன்னு போகுது பாரேன்.

முரளி    :   மச்சி சூப்பரா இருக்கு டா.செம ஸ்டைல், 
                      அட்டகாசமான லுக்குடா.இதெல்லாம் பாக்க
                      கொடுத்து வச்சிருகனும்டா  

மகேஷ்  : முன்னாடி (front look) பார்க்க அருமையா இருக்குடா

முரளி     : டேய் முன்னாடி மட்டும் இல்ல,எனக்கு              
                      எங்கயுமே குறை தெரியல.பார்த்துக்கிட்டே
                      இருக்கலாம் போல

மகேஷ் : கண்ணாடி கூட அழகு சேர்க்குது டா மச்சி.

முரளி   : அவ்ளோ ஸ்டைலா இருந்தாலும்,
 
                    எவ்ளோ அமைதியா போகுது பாரேன்.

மகேஷ்  : எனக்கு என்னமோ நான் கொஞ்சம் அவசர
                      பட்டு
ட்டேனோன்னு தோனுதுடா.
                
முரளி  :  ஏன் டா அப்படி சொல்லுற?

மகேஷ் : முன்னாடியே  என் கண்ணுல இது சிக்கி இருந்தா,
                    
வீட்டுல  சொல்லி  எப்படியாவது கரெக்ட் 
                     பண்ணியிருப்பேன் டா.

முரளி    : இப்போ
மட்டும் என்ன ஆய்டுச்சி. கொஞ்ச நாள்
                     பொறுத்துக்கோ.அப்புறம் வீட்டுல இருக்கே அத
                     எப்படியாவது கஷ்டபட்டு வெளிய வெரட்டி
                     விட்டுட்டு,இத வச்சிக்கோ.

மகேஷ் :  ஆனா நான் புதுசு ஒன்ன கரெக்ட் பண்றது வீட்டுல
                     தெரிஞ்சா அவ்ளோ தான் சாகடிச்சிருவாங்க.

முரளி  :   டேய் தெரிஞ்சா கொஞ்ச நாள் திட்டுவாங்க...
                     இருக்கிறது நல்லா இருந்தாலும்,புதுசா ஒன்ன
                     பார்த்தா அது மேல ஆசை படுறது மனுஷனுக்கு
                     இயல்பு டா.

மகேஷ் :   ஆனா வீட்டுல அவங்கள சமாளிக்க எதாவது
                      சொல்லனுமே டா..

முரளி  :   அதுவும் சரி தான்!!.
                     பிக்கப் நல்லா இருக்கும்,லிட்டர் கு நிறைய KM
                     தரும்னு சொல்லு டா நிச்சயமா ஒன்னும்
                     சொல்லமாட்டாங்க.       
 

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம்

இது சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு  என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கோரமான சம்பவம்...

இதை உங்களுடன் வருத்தத்துடன் பகிர்ந்து
க்கொள்கிறேன் ...

அப்பொழுது எனது அக்கா ஒரிஸ்ஸா மாநிலத்தில் நக்சல்ஸ் ஆளும் ஜெய்ப்பூர் (Jeypore) என்னும் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார்...

ஒரிஸ்ஸா சென்று எனது தமக்கையை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.

நானும் அங்கே சென்று இரண்டு  நாட்கள் தங்கி விட்டு,அக்காவுடன் தமிழகம்  திரும்ப ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் ரயில் நிலையத்தில்  காத்துக்கொண்டிருந்தேன் ..

ரயில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது .. நானும் எனது அக்காவும் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தோம்..

ரயில் புறப்பட்டது, ஒரு மணி நேரம் கழித்து விசாகபட்டினம் வந்து சேர்ந்தது.. அரை மணி நேரம் அங்கே நின்ற ரயில் மறுபடியும் திருச்சியை நோக்கி பயணத்தை துவக்கியது..

அன்று ஏனோ ரயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

அப்பொழுது தான் அந்த கோரமான சம்பவம் நிகழ்ந்தது..
 
ரயில் சென்று கொண்டிருக்க,ஒரு உருவம்  தூரத்தில் இருந்து எங்கள்  இருவரையும்  நோக்கி நடந்து வந்தது..

பக்கத்தில் வர வர அந்த உருவம் ஒரு திருநங்கை என்பது தெரிய வந்தது..

எங்கள் அருகில் வந்து நின்ற அந்த திருநங்கை காசு கொடு என்று கேட்டு எரிச்சலூட்ட தொடங்கியது..

வெறுத்து போன நான் "காசெல்லாம் தர முடியாது போ" என்று வேண்டுமென்றே தமிழில் சொன்னேன்.. ஆந்திர மாநிலத்தில் இருப்பவர்கள் அதனால் இந்த திருநங்கைக்கு தமிழ் தெரியாது என்று நம்பினேன்..

ஆனால் எங்களுக்கு சொந்த ஊரு குவாகம் தான் என்று கூறி தமிழிலும் பேசி காசு கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கியது..

அதிலும் நாமாக கொடுத்தால் 1 ரூபாய் அல்லது 50 காசுகள் தான் கொடுப்போம் என்று தெரிந்து எனக்கு 5 ரூபாய் கொடு  என்று கேட்டது..

கோவத்தின் உச்சிக்கு சென்ற நான் தர முடியாது போ என்று விரட்ட ஆரம்பித்தேன்.அருகில் எனது அக்கா வேறு...

அப்பொழுது அந்த திருநங்கை

"காசு கொடுத்தா உனக்கு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு மனைவியா வருவா இல்லை என்றால் என்னை போல் ஒருத்தி தான் சிக்குவா மனைவியா" என்று கூற தலையே சுற்றியது எனக்கு ...

"இவகிட்ட பட்டது போதும்டா சாமி" என்று 5 ரூபாய் எடுத்து கொடுத்து அனுப்ப, பக்கத்தில் ஏதோ  ஒரு சிரிப்பு சத்தம் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருந்தது..

யார் அது  என்று பார்த்தால் எனது அக்கா ...

அட அக்கா தான வேற யாரும் கேட்கலையேன்னு  சந்தோசமா இருந்தா,அதே பெட்டியில் மறு பக்கம் அமர்ந்து இருந்த அந்த அழகான பெண்ணும்  சிரிச்சிக்கிட்டே இருந்தா..

பார்க்க மகாலக்ஷ்மி மாதிரி தான் இருந்தா....  

Sunday, August 1, 2010

கட்டாயத்தின் மாற்றம்

முதல் செமஸ்டர் பரீட்சை முடிந்து,விடுமுறைக்காக கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான்  கிருஷ்ணன்.

"அவன் வந்துட்டானா??  எக்ஸாம் எப்படி எழுதியிருகானாம் ??" என்றார் அவன் தந்தை.
 

"இன்னும் பேசல,வெளிய பசங்க கூட சுத்திட்டு இருப்பான்" என்றார் அவன் தாய்.

மேலும் கணவரிடம், "அவனுக்கு ஹாஸ்டல் எல்லாம் பழகிடுச்சா, இல்ல எதாவது வேணுமான்னு கேளுங்க. போன தடவை வந்த போதே பொலம்பிக்கிட்டு இருந்தான்"  என்றார் சித்ரா.


"லீவ் விடுறதே கொஞ்ச நாள்,அதுலயும் பசங்க கூடவே வெளிய சுத்திட்டு இருந்தா,நாம எப்போ அவனோட நேரம் செலவிடுறது ?? .சரி வரட்டும் பேசலாம்" என்றார் குமரேசன்.

ஒரு மணி நேரம் கழித்து,கைபேசியில் நண்பனுடன் பேசியே படியே வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணன்.


"ஆமாம் டா இன்னும் மூணு நாள் தான் இருப்பேன்,அதுக்குள்ள உன்ன பாக்க வரேன்டா, சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்"  என்று கூறி நேராக அம்மாவிடம் சென்று பசிக்குது என்ன இருக்கு என்றான்.

அங்க எடுத்து வச்சி இருக்கேன் போய் எடுத்து போட்டு சாப்டுகோ என்றார் அவர்.

சாப்பிட அமர்ந்தவன்,

" என்ன எப்பவும் சுப்ரபாதம், கந்தஷஷ்டி கவசமும்  ஓடுற வீட்டுல திடுர்னு கிறிஸ்துமஸ் பஜனை  நடக்குது ??"  என்றான்.

யார் வீட்டுல டா சொல்லுற என்று அவன் தாய் கேட்க அதான் மா, நம்ம தெருவுல இருக்காரே அன்பு சார்,அவர் வீட்டுல தான் சொல்றேன்.

ஓஹ் அவுங்களா. அவங்க கிறிஸ்டின் மதத்துக்கு மாறிட்டாங்க டா.

"என்னமா சொல்றீங்க, திடிர்னு ஏன் மாறனும்??" என்று அவன் கேட்க, அன்பு இறந்துட்டார் டா இரண்டு மாசத்துக்கு முன்னாடி என்றார் அவன் தந்தை.

இறந்துட்டாரா? எப்படி ?

 அவருக்கு மாரடைப்பு.

ஓஹ், ஆனா அதுக்கும் மதம் மாறுவதற்கும்  என்ன சம்மந்தம்? ஏன் மாறனும்?


போனவரு ஏகபட்ட கடன் வாங்கி வச்சிட்டு போய்ட்டாரு. அதனால அவங்க உறவுக்காரர்களும் இவங்களுக்கு துணையா உதவி பண்ண தயங்கி விட்டுடாங்க.

அன்பு மனைவிக்கோ எதுவும் வேலையுமில்லை. அவங்களுக்கு ரெண்டு கொழந்தை வேற இருக்குடா. இப்படி இருக்க, அவங்களுக்கு ஒரு வேலை கொடுத்து, பசங்களோடபடிப்புக்கு உதவ தயாரா இருக்கோம்னு "சிஸ்டர்ஸ்" வந்து சொல்ல, அவங்களும் சந்தோஷமா மதம் மாறிட்டாங்க என்றார் அவன் தாய்.


ஆனா இது தப்பு தான ?? என்றான் கிருஷ்ணன்.

கட்டாய மத மாற்றம் தான் தப்பு, ஆனா இதுல என்ன தப்பு இருக்கு. 

உனக்கு உன் வாழ்க்கை ஓடனும். பசங்க படிப்பு முக்கியம் அவங்க எதிர்காலம் முக்கியம். உறவுகாரங்க கை விட்டுடாங்க,நீ கும்பிட்ட மதமும் இந்த மாதிரி நேரத்துல கை கொடுக்க போறதில்ல. அதனால அவங்களோட குடும்ப சூழ்நிலை காரணமா மதம் மாறினதுல தப்பே இல்ல என்றார் அவன் தந்தை.

இதுவும் ஒரு கட்டாயம் தான். அவங்களுக்கு அவங்க பசங்கள நல்லா
வளர்க்கணுமே ஒரு கட்டாயம். அதனால மாறினாங்க என்றார் சித்ரா.

வெளிய இருந்து பாக்குற நமக்கு, இப்படி காசு கொடுத்து ஆசை காட்டி மதம் மாத்துராங்னு கோவம் வருது.
 

ஆனா அவங்களுக்கோ,இப்படி நமக்கு கடவுள் மாதிரி உதவிண்றாங்களேன்னு தோணுது. இத தப்புன்னு சொல்ல முடியாதே டா என்றார் அவர்.
 

இவை அனைத்தும் கேட்டு,இந்த மதம் மாற்றம் தவறில்லை என்று தோன்றினாலும்,மனசுக்குள் எதோ ஒரு பக்கம் இது தவறு தான் என்ற எண்ணம் அவனுக்குஇருந்துகொண்டே இருந்தது.


 --மத மாற்றத்தை மனதளவில் எதிர்க்கும் பலருள் ஒருவன் நான் --

Saturday, July 31, 2010

புகைச்சல்

டேய் பிடி டா... 
 
மாட்டேன் என்ன கட்டாயபடுத்தாதீங்க ..

டேய் சொன்னா கேளுடா..  எனக்காக ப்ளீஸ்..

நீங்களே இப்படி சொன்னா நான் என்ன செய்ய ??   

டேய் இப்படி சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி?? நீ என் பையன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடா..

காலையில இருந்து போன் மேல போன்..நான் பையன் கிட்ட பேசி சமாதான படுத்துறேன்னு சொல்லி இருக்கேன் அவங்ககிட்ட..

உன்ன நாலு பேரு பாராட்டனும்னு எண்ணம் இருந்தா சிகரெட் பிடிச்சி தான் ஆகணும்.. அதான் டா பந்தா..

தண்ணி  கூட வேணாம்னு விட்டுடலாம்,ஆனா தம் விஷயத்துல முடியாது டா...

நீ ஸ்டைலா தம் அடிச்சி நடி
க்கனும், உனக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகணும்.. வாழ்க்கைல என்ன மாதிரி பெரிய எடத்துக்கு போகணும் ..

இது தான் எனக்கு சந்தோசம்..   

தலைக்கு மேல் கத்தி


லட்டுக்கு பிரியப்பட்டு, உலகில் சுயநலவாதிகள் இரண்டாவதாக அதிகம் வரும் இடம் அது.
அங்கே ஒரு முக்கியமான பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.. தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த நபர் பேசி கொண்டிருந்தார்..
அங்கே மயான அமைதி நிலவியது..
 

"தினமும் நம்மை நம்பி,பல பேரு பல எடத்துல இருந்து வராங்க. நாமும் அவங்களுக்காக நம்ப நேரத்த முழுசா செலவழைக்கிறோம்.
இதுல நமக்கு கிடைப்பது ரொம்ப சொற்பமான தொகை தான்.மத்தவங்க சுய
த்துகாக நாம் கஷ்ட படுகிறோம்,இன்று முதல் நம்ப சுயத்தோட இருந்தா தான் நம்ப புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

கைல கத்தி எடுக்கணும்னா இனி நம்ப கேட்கறத அவங்க கொடுத்தே ஆகணும்.
எவ்ளோ பெரிய மயிரா இருந்தாலும் நம்ப கத்திக்கு பதில் சொல்லி தான் ஆகணும் ..
அரசாங்க தரப்பில் நிச்சயம் எதிர்ப்பு எழும்,அதுக்கு நாம அவங்க கழுத்துல வைக்கும் கத்தி தான் பதில் சொல்லணும்.
நம் கொள்கையில் இருந்து நாம் பின் வாங்கவே கூடாது..
நமக்காக,நம்ப குடும்பத்துக்காக, நாம தான் போராடனும்..
இதையெல்லாம் மீறி எனக்கு தெரியாம யாரவது ஆயுதத்த கைல எடுத்தீங்க, அவங்களுக்கு நானே மொட்ட போட வேண்டியது வரும்.. புரியுதா ?? "

என்று கூறி அவர் உரையை முடிச்சதும் பலமான கரகோஷம் எழுந்தது ...

Thursday, July 29, 2010

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.

வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.

பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வகையில் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.

அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.

மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.

அதை கண்டவர், ஒரே வாரத்தில் மூன்று வித்தாயசமான வகையில் விளம்பர பலகையை தயாரித்த ஊழியர்களுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள எண்ணினார்.

அன்று அலுவலகத்தில், தனது விளம்பர குழுவின் ஊழியர்களை அவரது அறைக்கு அழைத்தார்.

ஏன் எதற்கு என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் நிற்க,  
யார் இந்த விளம்பர பலகைக்கான வித விதமான ஐடியா கொடுத்தது. எதனை பேரு இந்த விளம்பர பலகைக்கான வேளையில் இருந்தீர்கள் 
என்று ராஜசேகர் கேட்டார்.

குழப்பத்தில் இருந்தவர்களுக்கு மேலும் குழப்பமே உண்டானது.

"அய்யா எந்த விளம்பர பலகை பத்தி கேட்குறீங்க" என்று மேனேஜர் கேட்க, "மவுண்ட் ரோடு ல இருக்கே அத தான் சொன்னேன்" என்றார் ராஜசேகர்.

அப்படி எதுவும் பலகை நாம அங்க வைகலையே என்றார் மேனேஜர்.

சிரித்துகொண்டே  ராஜசேகர்,

"யோவ் உன்ன போய் என் மேனேஜரா வச்சி இருக்கேன் பாரு, தினமும் அந்த வழியா வரேன், எனக்கு தெரியாதா"  என்றார் அவர்.

"ஐயோ சார் உண்மையா சொல்றேன்,நம்ம ஆளுங்க வைக்கல அந்த பலகையை" என்று கூறியதும் ராஜசேகர் குழப்பத்தின் உச்சிக்கு சென்றார்.

சரி அப்படி என்றால் அத அந்த எடத்துல வச்சது யார்னு எனக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க என்றார்.

எப்படியோ கண்டு பிடிச்சி ரவி என்ற ஒருவன் தான் இந்த வேலைய பண்ணி இருக்கான் சார் என்று மேனேஜர் ராஜசேகரிடம் கூறினார்.

உடனே அவர், நான் அவனை பார்க்கணும், அவன கொஞ்சம் வர சொல்லுங்க ஆபீஸ்கு என்றார்.

அன்று மாலை 4 மணிக்கு ரவி அவர் அறைக்கு வந்தான்..

வா உட்கார் என்றார் ராஜசேகர்.

அவரது அழைப்பு வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது போல மிடுக்குடன் இருந்தான் ரவி.

நீ யார் ? என் கம்பெனி தயாரித்த வாகனத்திற்கு நீ ஏன் விளம்பர பலகை தயாரித்து நகரத்தின் முக்கியமான எடத்துல வைக்கணும் ? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு தயாராக பதில் வைத்திருந்த ரவி, 

சார் ஒரு மாதத்திற்கு முன்பு உங்க கம்பெனில விளம்பர குழுவிக்கு (advertisement team) ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க.
 
MBA முடிச்ச  நானும் அதற்காக அப்லை பண்ணினேன்.
 
ஆனால் முன் அனுபவம் இல்லாத ஒரே காரணத்தினால எனக்கு வேளை  இல்லன்னு சொல்லி அனுபிட்டாங்க.
 
முன் அனுபவம் மட்டும்தான் முக்கியம் என்றில்லை... திறமையும்,உழைப்பும் கூட முக்கியம் தான்..
 
என்னோட திறமையை நிருபிக்க தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று அவன் சொல்ல,நாளை முதல் காலை 10 மணிக்கு மறக்காம ஆபீஸ்க்கு வந்துடனும் என்று கூறி அனுப்பினார் ராஜசேகர் ..