இது சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கோரமான சம்பவம்...
இதை உங்களுடன் வருத்தத்துடன் பகிர்ந்துக்கொள்கிறேன் ...
அப்பொழுது எனது அக்கா ஒரிஸ்ஸா மாநிலத்தில் நக்சல்ஸ் ஆளும் ஜெய்ப்பூர் (Jeypore) என்னும் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார்...
ஒரிஸ்ஸா சென்று எனது தமக்கையை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.
நானும் அங்கே சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டு,அக்காவுடன் தமிழகம் திரும்ப ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் ..
ரயில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது .. நானும் எனது அக்காவும் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தோம்..
ரயில் புறப்பட்டது, ஒரு மணி நேரம் கழித்து விசாகபட்டினம் வந்து சேர்ந்தது.. அரை மணி நேரம் அங்கே நின்ற ரயில் மறுபடியும் திருச்சியை நோக்கி பயணத்தை துவக்கியது..
அன்று ஏனோ ரயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
அப்பொழுது தான் அந்த கோரமான சம்பவம் நிகழ்ந்தது..
ரயில் சென்று கொண்டிருக்க,ஒரு உருவம் தூரத்தில் இருந்து எங்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தது..
பக்கத்தில் வர வர அந்த உருவம் ஒரு திருநங்கை என்பது தெரிய வந்தது..
எங்கள் அருகில் வந்து நின்ற அந்த திருநங்கை காசு கொடு என்று கேட்டு எரிச்சலூட்ட தொடங்கியது..
வெறுத்து போன நான் "காசெல்லாம் தர முடியாது போ" என்று வேண்டுமென்றே தமிழில் சொன்னேன்.. ஆந்திர மாநிலத்தில் இருப்பவர்கள் அதனால் இந்த திருநங்கைக்கு தமிழ் தெரியாது என்று நம்பினேன்..
ஆனால் எங்களுக்கு சொந்த ஊரு குவாகம் தான் என்று கூறி தமிழிலும் பேசி காசு கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கியது..
அதிலும் நாமாக கொடுத்தால் 1 ரூபாய் அல்லது 50 காசுகள் தான் கொடுப்போம் என்று தெரிந்து எனக்கு 5 ரூபாய் கொடு என்று கேட்டது..
கோவத்தின் உச்சிக்கு சென்ற நான் தர முடியாது போ என்று விரட்ட ஆரம்பித்தேன்.அருகில் எனது அக்கா வேறு...
அப்பொழுது அந்த திருநங்கை
"காசு கொடுத்தா உனக்கு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு மனைவியா வருவா இல்லை என்றால் என்னை போல் ஒருத்தி தான் சிக்குவா மனைவியா" என்று கூற தலையே சுற்றியது எனக்கு ...
"இவகிட்ட பட்டது போதும்டா சாமி" என்று 5 ரூபாய் எடுத்து கொடுத்து அனுப்ப, பக்கத்தில் ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருந்தது..
யார் அது என்று பார்த்தால் எனது அக்கா ...
அட அக்கா தான வேற யாரும் கேட்கலையேன்னு சந்தோசமா இருந்தா,அதே பெட்டியில் மறு பக்கம் அமர்ந்து இருந்த அந்த அழகான பெண்ணும் சிரிச்சிக்கிட்டே இருந்தா..
பார்க்க மகாலக்ஷ்மி மாதிரி தான் இருந்தா....
6 comments:
நிறைய பேருக்கு விஜயவாடா, வைசாக் போன்ற நிறுத்தங்களுக்கு அருகில் இந்த அனுபவம் இருக்கும். ஆனால் எல்லா பயணங்களிலும் அருகில் அழகிகள் இருப்பதில்லை....
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா அப்படின்னு தட்டிவிட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்..
innum ட்ரைசெய்திருந்தா ஒரு நல்ல சிறுகதை கிடைச்சிருக்கும்
@ கலாநேசன்
அப்போ இந்த சங்கடத்திலும் ஒரு சந்தோசம் இருக்குன்னு சொல்லுறீங்க.. சரி தான் :-)
@ இராகவன் நைஜிரியா
தட்டிவிட்டு தட்டிவிட்டு கை வலிக்குது தல :)
@ கேபிள்ஜி
இது எனக்கு உண்மையாகே நடந்த சம்பவம் என்பதால் மசாலா சேர்க்காமல் அப்படியே எழுதிவிட்டேன்...
ஆனா இன்னும் ஒழுங்கா படைத்திருக்கலாமோ :(
ஸ் அப்பாடா..கோரம் அப்படி என்றதும் என்னவோ ஏதோ என்று பயத்துடன் தான் படிக்க ஆரம்பித்தேன். அப்படி எதுவும் இல்லை.ஏன் இந்த கொல வெறி..
@ அமுதா கிருஷ்ணா
அப்போ எனக்கு நிகழ்ந்தது கோரமான சம்பவம் இல்லையா ??
சரி விடுங்க..எனக்கு நடந்தா மட்டும் அது காமெடி தான் போல
Post a Comment