Tuesday, August 3, 2010

ஆசைகள் ஆயிரம்

மதிய வேளையில்,சிக்னலின் அருகில் ஒரு கடையின் நிழலில்  நின்று கொண்டிருந்த இரண்டு "25 வயது" மதிக்கத்தக்க போக்குவரத்துத்துறை காவலர்கள்,

மகேஷ் :   டேய் முரளி,அங்க ஒன்னு போகுது பாரேன்.

முரளி    :   மச்சி சூப்பரா இருக்கு டா.செம ஸ்டைல், 
                      அட்டகாசமான லுக்குடா.இதெல்லாம் பாக்க
                      கொடுத்து வச்சிருகனும்டா  

மகேஷ்  : முன்னாடி (front look) பார்க்க அருமையா இருக்குடா

முரளி     : டேய் முன்னாடி மட்டும் இல்ல,எனக்கு              
                      எங்கயுமே குறை தெரியல.பார்த்துக்கிட்டே
                      இருக்கலாம் போல

மகேஷ் : கண்ணாடி கூட அழகு சேர்க்குது டா மச்சி.

முரளி   : அவ்ளோ ஸ்டைலா இருந்தாலும்,
 
                    எவ்ளோ அமைதியா போகுது பாரேன்.

மகேஷ்  : எனக்கு என்னமோ நான் கொஞ்சம் அவசர
                      பட்டு
ட்டேனோன்னு தோனுதுடா.
                
முரளி  :  ஏன் டா அப்படி சொல்லுற?

மகேஷ் : முன்னாடியே  என் கண்ணுல இது சிக்கி இருந்தா,
                    
வீட்டுல  சொல்லி  எப்படியாவது கரெக்ட் 
                     பண்ணியிருப்பேன் டா.

முரளி    : இப்போ
மட்டும் என்ன ஆய்டுச்சி. கொஞ்ச நாள்
                     பொறுத்துக்கோ.அப்புறம் வீட்டுல இருக்கே அத
                     எப்படியாவது கஷ்டபட்டு வெளிய வெரட்டி
                     விட்டுட்டு,இத வச்சிக்கோ.

மகேஷ் :  ஆனா நான் புதுசு ஒன்ன கரெக்ட் பண்றது வீட்டுல
                     தெரிஞ்சா அவ்ளோ தான் சாகடிச்சிருவாங்க.

முரளி  :   டேய் தெரிஞ்சா கொஞ்ச நாள் திட்டுவாங்க...
                     இருக்கிறது நல்லா இருந்தாலும்,புதுசா ஒன்ன
                     பார்த்தா அது மேல ஆசை படுறது மனுஷனுக்கு
                     இயல்பு டா.

மகேஷ் :   ஆனா வீட்டுல அவங்கள சமாளிக்க எதாவது
                      சொல்லனுமே டா..

முரளி  :   அதுவும் சரி தான்!!.
                     பிக்கப் நல்லா இருக்கும்,லிட்டர் கு நிறைய KM
                     தரும்னு சொல்லு டா நிச்சயமா ஒன்னும்
                     சொல்லமாட்டாங்க.       
 

3 comments:

ஒரு கோப்பை வாழ்க்கை said...

//மதிய வேளையில்,சிக்னலின் அருகில் ஒரு கடையின் நிழலில் நின்று கொண்டிருந்த இரண்டு "25 வயது" மதிக்கத்தக்க போக்குவரத்துத்துறை காவலர்கள்,//

நல்லாயிருக்கு ரகு, இந்த பாரா இல்லாம இருந்தா கதை இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கும்.

இரகுராமன் said...

நன்றி ஜானகிராமன் அண்ணா...

பவள சங்கரி said...

நல்லாயிருக்குங்க. நன்றி. வாழ்த்துக்கள்.