Sunday, August 1, 2010

கட்டாயத்தின் மாற்றம்

முதல் செமஸ்டர் பரீட்சை முடிந்து,விடுமுறைக்காக கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான்  கிருஷ்ணன்.

"அவன் வந்துட்டானா??  எக்ஸாம் எப்படி எழுதியிருகானாம் ??" என்றார் அவன் தந்தை.
 

"இன்னும் பேசல,வெளிய பசங்க கூட சுத்திட்டு இருப்பான்" என்றார் அவன் தாய்.

மேலும் கணவரிடம், "அவனுக்கு ஹாஸ்டல் எல்லாம் பழகிடுச்சா, இல்ல எதாவது வேணுமான்னு கேளுங்க. போன தடவை வந்த போதே பொலம்பிக்கிட்டு இருந்தான்"  என்றார் சித்ரா.


"லீவ் விடுறதே கொஞ்ச நாள்,அதுலயும் பசங்க கூடவே வெளிய சுத்திட்டு இருந்தா,நாம எப்போ அவனோட நேரம் செலவிடுறது ?? .சரி வரட்டும் பேசலாம்" என்றார் குமரேசன்.

ஒரு மணி நேரம் கழித்து,கைபேசியில் நண்பனுடன் பேசியே படியே வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணன்.


"ஆமாம் டா இன்னும் மூணு நாள் தான் இருப்பேன்,அதுக்குள்ள உன்ன பாக்க வரேன்டா, சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்"  என்று கூறி நேராக அம்மாவிடம் சென்று பசிக்குது என்ன இருக்கு என்றான்.

அங்க எடுத்து வச்சி இருக்கேன் போய் எடுத்து போட்டு சாப்டுகோ என்றார் அவர்.

சாப்பிட அமர்ந்தவன்,

" என்ன எப்பவும் சுப்ரபாதம், கந்தஷஷ்டி கவசமும்  ஓடுற வீட்டுல திடுர்னு கிறிஸ்துமஸ் பஜனை  நடக்குது ??"  என்றான்.

யார் வீட்டுல டா சொல்லுற என்று அவன் தாய் கேட்க அதான் மா, நம்ம தெருவுல இருக்காரே அன்பு சார்,அவர் வீட்டுல தான் சொல்றேன்.

ஓஹ் அவுங்களா. அவங்க கிறிஸ்டின் மதத்துக்கு மாறிட்டாங்க டா.

"என்னமா சொல்றீங்க, திடிர்னு ஏன் மாறனும்??" என்று அவன் கேட்க, அன்பு இறந்துட்டார் டா இரண்டு மாசத்துக்கு முன்னாடி என்றார் அவன் தந்தை.

இறந்துட்டாரா? எப்படி ?

 அவருக்கு மாரடைப்பு.

ஓஹ், ஆனா அதுக்கும் மதம் மாறுவதற்கும்  என்ன சம்மந்தம்? ஏன் மாறனும்?


போனவரு ஏகபட்ட கடன் வாங்கி வச்சிட்டு போய்ட்டாரு. அதனால அவங்க உறவுக்காரர்களும் இவங்களுக்கு துணையா உதவி பண்ண தயங்கி விட்டுடாங்க.

அன்பு மனைவிக்கோ எதுவும் வேலையுமில்லை. அவங்களுக்கு ரெண்டு கொழந்தை வேற இருக்குடா. இப்படி இருக்க, அவங்களுக்கு ஒரு வேலை கொடுத்து, பசங்களோடபடிப்புக்கு உதவ தயாரா இருக்கோம்னு "சிஸ்டர்ஸ்" வந்து சொல்ல, அவங்களும் சந்தோஷமா மதம் மாறிட்டாங்க என்றார் அவன் தாய்.


ஆனா இது தப்பு தான ?? என்றான் கிருஷ்ணன்.

கட்டாய மத மாற்றம் தான் தப்பு, ஆனா இதுல என்ன தப்பு இருக்கு. 

உனக்கு உன் வாழ்க்கை ஓடனும். பசங்க படிப்பு முக்கியம் அவங்க எதிர்காலம் முக்கியம். உறவுகாரங்க கை விட்டுடாங்க,நீ கும்பிட்ட மதமும் இந்த மாதிரி நேரத்துல கை கொடுக்க போறதில்ல. அதனால அவங்களோட குடும்ப சூழ்நிலை காரணமா மதம் மாறினதுல தப்பே இல்ல என்றார் அவன் தந்தை.

இதுவும் ஒரு கட்டாயம் தான். அவங்களுக்கு அவங்க பசங்கள நல்லா
வளர்க்கணுமே ஒரு கட்டாயம். அதனால மாறினாங்க என்றார் சித்ரா.

வெளிய இருந்து பாக்குற நமக்கு, இப்படி காசு கொடுத்து ஆசை காட்டி மதம் மாத்துராங்னு கோவம் வருது.
 

ஆனா அவங்களுக்கோ,இப்படி நமக்கு கடவுள் மாதிரி உதவிண்றாங்களேன்னு தோணுது. இத தப்புன்னு சொல்ல முடியாதே டா என்றார் அவர்.
 

இவை அனைத்தும் கேட்டு,இந்த மதம் மாற்றம் தவறில்லை என்று தோன்றினாலும்,மனசுக்குள் எதோ ஒரு பக்கம் இது தவறு தான் என்ற எண்ணம் அவனுக்குஇருந்துகொண்டே இருந்தது.


 --மத மாற்றத்தை மனதளவில் எதிர்க்கும் பலருள் ஒருவன் நான் --

No comments: