Wednesday, April 21, 2010

நிழல்களின் நிறங்கள்

நேரம் மாலை 6 ஆனது..

"அவசியம் வீட்டுக்கு போயாகணுமா ??"
என்று எண்ணி நொந்துகொண்டான் முகேஷ்.
 

 இப்படி எண்ண வேண்டிய நிலைமை வரும் என்று அவன் கற்பனை கூட செய்ததில்லை.

இந்த வருத்தத்திற்கு காரணம் பெருசாக ஒன்றுமில்லை, அலுபூட்டும் இந்த பேருந்து பயனம் தான்.

"அதென்னமோ,நகர பேருந்தில் இந்த போக்குவரத்து நெருசலில் பயம் செய்வதற்கு பதிலாகஅலுவலகத்திலேயே தங்கிடலாம் போல" என்று  தனது பெற்றோரிடம் சொல்லி புலம்புவான். 

அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தான்.

அரைமணிநேரத்திற்கு ஒரு பேருந்து உண்டு அவனுக்கு.மாலை நேரம் என்பதால் அலுவகலம் முடிந்து வீடு திரும்புபவர்கள் அதிகம் காணப்படுவார்கள், நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.

அன்றும் வழக்கமான நெரிசலுடன் பேருந்து வந்தது. எப்படியோ சமாளித்துகொண்டு பேருந்தினுள் ஏறினான் முகேஷ்.

சிலர் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்தனர்.

ஒவ்வொரு இடத்திலும் பேருந்து நிற்க,கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது.

சிறிது தொலைவு சென்றதும், ஒரு வளைவில் பேருந்து வேகமாகதிரும்ப,படியில் பயணம் செய்த அருண், தவறி சாலையில் விழுந்தான். 

கீழே விழுந்த அருண் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தான்.. தலையில் அடிபட்டு  ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது..

முகேஷ் பேருந்திற்கு உள்ளே இருந்ததால் என்ன நடந்தது என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தான். பேருந்தில் இருந்த அனைவரும் அலறி கொண்டு அருண் அருகில் செல்ல, இவனுக்கும் அனைத்தும் விளங்கியது.

பேருந்தின் ஓட்டுனர், மற்றவர்கள் உதவியுடன் அருணை பேருந்தில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த  அரசு மருத்துவமனைக்கு பேருந்தை வேகமாக இயக்கினார்.

அதே நேரத்தில் அருனின் சட்டை பையில் இருந்த மொபைல் எடுத்து,வீட்டுக்கு தகவல் அளித்தான் முகேஷ்.

பேருந்திலிருந்த அனைவரும் அந்த பையனுக்கு ஒன்னும் ஆகா கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டே இருக்க,

"நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி, வண்டிய நிறுத்துங்க" என்றார் திருமதி.கவிதா நடராஜன்.

ஆச்சர்யத்துடன் இதை கேட்ட முகேஷ்,

"ஏன் மா ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான், இப்போ போய் என் ஸ்டாப் வந்துடுச்சி நிறுத்துங்கனு சொன்னா என்னஅர்த்தம் மா இது ?" என்றான்.

"ஆமாம் இவனுங்களுக்கு கொழுப்பு,உள்ள எவ்ளோ எடமிருந்தாலும் படியிலேயே தொங்கிட்டு வர வேண்டியது. இவன் விழுந்தது என் தப்பு இல்ல.. எனக்கு வீட்டுல ஆயிரத்தெட்டு வேல இருக்கு, நீங்க ஸ்டாப்பிங்ல நிறுத்துங்க நான் எறங்கணும்" என்றார் கவிதா.

யாராலும் ஒன்றும் பேச முடியவில்லை. மற்றவர்கள் பேச்சை கவிதா பொருட்படுத்தவுமில்லை .

வேறு வழியின்றி ஓட்டுனர் நிறுத்தி இறக்கிவிட்டார்.

பிறகு அருணை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கேயே காத்துக்கொண்டிருந்தான் முகேஷ்.

அருனின் பெற்றோர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களுக்கு முகேஷ் ஆறுதல் சொல்லிகொண்டிருக்க,மருத்துவர்கள் அவர்களை நோக்கி வந்தனர்.
 
"ரத்தம் அதிகம் வெளியேறியதால்,அவனை எங்களால்காப்பாற்ற முடியவில்லை" என்று கூறி முடிப்பதற்குள் முகேஷின் கண்களில் நீர் கசிந்தது .

பெற்றோரின் அழுகை சப்தத்தை கேட்டுக்கொண்டு இருக்க முடியாமல், வீட்டுக்கு  கிளம்பினான்.

அருண் இறப்பதற்கு கவிதாவை குறை கூற மனமில்லை,ஆனால் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டிருகலாமே என்று எண்ணினான் முகேஷ்.
 
அருண் இறந்த செய்தி அறிந்து, "நாம் தவறு செய்துவிட்டோமோ" என்று திருமதி.கவிதாநடராஜன் எண்ணாதவரை,அவர்  வாழ்க்கையில் நிம்மதிக்கு குறைவிருக்காது.

அனால்"தவறு செய்துவிட்டோமோ" என்று அவர் என்ன தொடங்கும் நொடி முதல், ஒரு குற்ற உணர்ச்சி அவரை துரத்திகொண்டே இருக்கும்.

அப்படி ஒரு நாள் கவிதாவிற்கு வந்துவிட கூடாது என்று எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தான் முகேஷ்.

2 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

இது உண்மைக்கதையா?..

இரகுராமன் said...

இல்லை கற்பனையே..