Friday, April 16, 2010

ஒரே கூத்து தான் போங்க

மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி .

அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.

ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள். 

யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,

"ம.மு.க (மக்கள் முன்னேற்ற கட்சி ) கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க" என்றால்.

பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி, 

"எப்போ வந்தாங்க வீட்டுக்கு" என்று கேட்டான் கோவமாக.

கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.

தட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.

நாலு தெரு தாண்டி ஒருவரிடம், "ம.மு.க  கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா" என்று கேட்டான்.

அவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.

சிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி, கோவத்துடன் அவர்களை பார்த்து,

"யோவ் இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா? கட்சி நிதியிலிருந்து மக்களுக்கு ஒதுக்கும் பணத்தை கட்சி காரங்க நீங்க ஆட்டையபோடுறீங்களே ? இது  நியாயமா ??" என்றான் நல்லதம்பி.

ஒன்னும் புரியாமல் குழப்பத்தில் இருந்த கட்சி காரர் ஒருவர், "ஏனுங்க அண்ணா என்ன ஆச்சி, ஏன் கோவிசிக்குறீங்க " என்று கேட்க,

பின்ன என்னயா, ஒரு வோட்டுக்கு 1000 ரூபாய்ன்னு என் வீட்டுக்குபக்கத்துக்கு தெருவுல கொடுத்துட்டு, இப்போ எங்க வீட்டுக்கு 750 மட்டும்கொடுத்து இருக்கீங்க.

"சும்மா இல்ல, நாலு வோட் இருக்கு என் வீட்டுல யோசிச்சிபாருங்க"
 
என்று நல்லதம்பி கூறியதும் அதிர்ந்து போனார்கள் கட்சி காரர்கள், ஐயோ இந்தாங்கதெரியாம தப்பு நடந்துடுச்சி என்று கூறி சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இன்னொருவர்

"போன தேர்தல் போதும் இதே 1000 தான் கொடுத்தீங்க, இப்பவும் இதேதானா. விலை வாசி எல்லாம் ஏறி போச்சி  கொஞ்சம் கூட போட்டு கொடுத்து இருக்கலாம்" என்று சொல்ல,

கட்சி காரர்களுள் ஒருவர், இப்படியே போனா,இனி நம்ம நிலைமை ரொம்ப கஷ்டம் தான் என்று புலம்பியபடி நடையை கட்டினார்கள்.

2 comments:

caroline mary said...

Andha nalla thambi nee dhana da???

இரகுராமன் said...

நான் நல்லவன் இல்லையே :P