Monday, August 9, 2010

அக்கரை சீமையில் -பகுதி 2

Disclaimer :  இந்த கதையில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.

 

அக்கரை சீமையில் -பகுதி 1


இன்றைய தினம் ..

இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன்.  

"வெல்கம் பேக் மிஸ்டர் இக்பால்.. 
 நீங்க மறுபடியும் இங்கே  வருவீங்கன்னு எனக்கு தெரியும்."

தேங்க்ஸ் ஆண்டர்சன்.

சில வருடங்களுக்கு முன்பு ..

இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன்.
நேரம்: 3pm
 
ஒரு அறையில்,அந்த பெரிய டேபிளை சுற்றி பதினைந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அங்கே பெரிய தொலைக்காட்சி பெட்டி போன்ற ஒன்று சுவற்றில் மாட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

முதலில் "ஆண்டர்சன்" அறையை ஒரு முறை பார்வையிட்டுவிட்டு வெளிய சென்றார்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கருப்பு கோட் அணிந்த ஒருவருடன் ஆண்டர்சன் மீண்டும் அறைக்கு வந்தார்.

(அந்த கருப்பு கோட் அணிந்திருப்பவர் தான் அண்டர்சனின் பாஸ் போலும் )

பிறகு மேலும் இருவர் அந்த அறையில் நுழைந்தனர்.   
  
அனைவரும் இருக்கையில் அமர்ந்த பின்னர், அறையின் கதவு சாத்தப்பட்டது.. கோட் அணிந்திருந்த நபர் பேச துடங்கினார்..
 
"
இது ஹய்லி கிளாஸிபைட் மேட்டர்.. நாளைக்கு லாகூர்ல இருக்கும்  இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா ஒரு ரகசிய தகவல் வந்திருக்கு. அங்க  நம்ம  டீம்  போய்  கவர்  பண்ணினா  நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்.. இஸ் தட் ஓகே வித் யு கைஸ்?? " என்றார் Mr.வில்லியம்ஸ்

"
ஆனா இந்த தகவலை உண்மைன்னு எப்படி நம்பறது.." என்று கேள்வி எழுப்பினார் ஹென்றி.

"
நல்ல கேள்வி, இதை இஸ்ரேல் உளவு துறை "மொசாத் (MOSSAD) " தான் திரட்டி இருக்காங்க..  

உலகத்துலையே சிறப்பான உளவு அமைப்பு அது..  

எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாம நம்ம  டீமை லாகூர்க்கு அனுப்புவோம். இப்படி ஒரு சம்பவம் நடக்குதோ இல்லையோ அதை பின்னாடி பார்த்துக்குவோம்" என்றார் வில்லியம்ஸ்.    

சார், Mr. ஹுசைன்  தான் பாகிஸ்தான்ல கவர் பண்ற நம்ம  ரிபோர்ட்டர்.ஆனா அவர் இப்போ 1 வீக்  லீவ்ல இருக்காரு.

சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ?

Mr.
இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா  நம்மகிட்ட வொர்க் பண்றாரு.அனுபவமுள்ள ஆளு..அவர்  போறது  பெஸ்ட்னு  தோணுது சார் என்றார் ஆண்டர்சன்.

சார் மன்னிக்கணும், தவறா எடுத்துக்க கூடாது, இக்பால் ஒரு இந்தியர். அவர இப்போ இந்த சூழ்நிலையில பாகிஸ்தான் அனுப்பறது  நல்ல ஐடியாவா எனக்கு தோணலை என்றார் ஹென்றி.

"
ஆனா,அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் நீங்க மறந்துட கூடாது  மிஸ்டர்" என்றார் ஆண்டர்சன்.

சரி  இப்போ அவர் எங்க  இருக்காரு ?

நேற்று காபுலில் நடந்த  கார்  குண்டுவெடிப்பு சம்பவத்த கவர் பண்ணது அவரும் அவர் டீமும் தான்.இப்பவும் அங்க  தான்  இருக்கார் .

ஓகே.அவர இன்னைக்கு ராத்திரிக்குள்ள லாகூர்க்கு புறப்பட சொல்லிடுங்க..நாளைக்கு மார்னிங் ஸ்பாட்ல இருக்கட்டும்.
இடம்  : லாகூர், காலை நேரம் 6.30.

அன்று வெள்ளிகிழமை,மசூதியில் நடக்கும் தொழுகையில் கலந்து கொண்டுவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பி கொண்டிருந்தார் இக்பால்.

7
மாடி கட்டிடம் அது, நான்காவது மாடியில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு படியிலேயே ஏறி சென்றார். 

அவர் நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்பவர் என்பது அந்த உடலை பார்த்தாலே புரியும். முரட்டு தேகம் அது, மாமிசம் உண்டு ஏற்றியது போலும்.உடலின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்

மாடி ஏறி அறைக்கு வந்தவர், "ஹே எட்வார்ட்ஸ்,கமான் மேன் கெட் அப்" என்றார்

"ஒஹ் காட், நாட் சோ ஏர்லி(early)"  என்றான் எட்வார்ட்ஸ்.

(இக்பால் மற்றும் எட்வார்ட்ஸ் நெருங்கிய நண்பர்கள். எட்வார்ட்ஸின் காமெரா தான் இக்பாலுக்கு எப்பவும் உறுதுணை. எதையும் துல்லியமாக படமாக்கும் திறமையுள்ளவன். இக்கட்டான சூழ்நிலையிலும் பதட்டமின்றி காரியத்தை முடிப்பவன்)

"சீக்கிரம் தயாராகு, நாம  ஸ்பாட்ல  இன்னும்  1 மணி நேரத்துக்குள்ள இருக்கனும். நீயும்  உன்  காமெராவும் இல்லாம நான் மட்டும்  அங்க போய் தனியா என்ன பண்றது.. ஹரி  அப்".

ஓகே இக்பால்,ஜஸ்ட் கிவ் மீ 10 மினிட்ஸ்.

காலை நேரம் 7.45.

இருவரும் வாகனம் ஒன்றில் சென்று எம்பசிக்கு முன் ஒரு இடத்தில் இறங்கினார்கள்..

இக்பால் சுற்றி பார்த்தான்.பரபரப்பான காலை நேரம்.. பள்ளிக்கு செல்லும் சிறார்களும்,அலுவலகத்திற்கு செல்பவர்களும் எறும்பு போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.

"
கேன் வி கெட் சம்திங் டு ஈட்?? " என்றான் எட்வார்ட்ஸ். சரி என்பது போல் தலையசைத்தவன், அருகே இருந்த ஒரு உணவு விடுதிக்கு அவனை அழைத்து சென்றான். அங்கேயே நேரம் போக்கி கொண்டிருந்தார்கள்.  

காலை நேரம் 9.15.
 
அப்பொழுது பாகிஸ்தானுக்கான இந்திய தூதுரக அதிகாரி தூதுரகம் அருகில் காரில்  வந்துக்கொண்டிருந்தார். அவர் காரின் பின்புறம்,மற்றொரு காரில்  சில அமெரிக்க அதிகாரிகளும் வந்துக்கொண்டிருந்தனர்.
     
திடிரென்று இரண்டு வாகனத்தில் வந்த தீவரவாதிகள் இந்திய எம்பசிக்கு முன் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த துவங்கினர்..
 
நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு தீனி போடும் வகையில் இது அமைந்திருந்தது. இக்பால் உடனே லண்டனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்.அவர்கள் மேலும் நடப்பதை முழுவதுமாக கண்காணித்து செய்தியை சேகரிக்குமாறு கோரினார்கள்.

பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே,எட்வார்ட்ஸ் தனது காமெராவை ஆண் செய்தான், இக்பாலும்  நடப்பதை வர்ணிக்க தொடங்கினான்.
 
இந்த சண்டையில் இந்தியர்கள் பதினைந்து நபர்களும் மற்றும் மூன்று அமெரிக்க அதிகாரிகளும் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர்.  

மேலும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் காயங்களுடன் தூதுரகத்தின் உள்ளே தூக்கிகொண்டு செல்லப்பட்டார்.   

இதனிடையே பாகிஸ்தான் ராணுவப்படை வந்து  அங்கே குவிந்தது. தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தின் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதை கவர் செய்துகொண்டிருந்தது எட்வர்ட்ஸின் கேமரா.

சாலையெங்கும் ரத்தம், குண்டடிபட்டு இறந்த உடல்கள்,சேதமடைந்த கார்கள் என கலவரமாக காட்சியளித்தன.

துப்பாக்கி சூடு நடந்துகொண்டிருக்கும் போதே,வாகனத்தில் தீவிரவாதிகள் தப்பித்து சென்றுவிட்டார்கள்.  

அந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதியும் உயிரிழக்கவில்லை.பாகிஸ்தான் ராணுவ தரப்பிலும் உயிர் சேதமில்லை.

சிறிது நேரத்தில் பதட்டம் தணிந்து மக்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்க தொடங்கினார்கள். இவ்வாறான செயல்கள் அவர்களுக்கு பழகிவிட்டதைதான் அது காட்டியது. இக்பால் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

மீண்டும் ஹோட்டல் அறைக்கு சென்றவர்,காமெராவில் படம் பிடித்ததை ஒரு முறை பார்வையிட்டனர். அதில் ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது இக்பாலுக்கு

மீண்டும் மீண்டும் அதை பார்வையிட்ட இக்பால்,

தீவிரவாதிகளில் ஒருவன் தன்னுடைய அண்ணன் மகன் என்பதை அடையாளம் கண்டுக்கொண்டார்.
 
உண்மை என்ற போதிலும்,உடனே அவரால் நம்ப முடியவில்லை.  

தயங்காமல், குஜராத்தில் வசிக்கும் தனது அண்ணனுக்கு போன் செய்தவர்
 

"உன் மகன் எங்கே" என்றார்..

"
இதை கேட்கவா போன் செய்தாய்.. அவன் துபாயில் பணிபுரிகிறான் என்று உனக்கு தான் தெரியுமே.. இந்த மாதம் கூட 50 ஆயிரம் என் அக்கவுண்டிற்கு அனுப்பிவைத்தான்" என்றார் அவர்.

மனம் சாந்தமடையவில்லை.. " கம்பெனி நேம் " என்றார் அண்ணனிடம்.

"EMCA Technologies"
என்று பதில் வந்தது.

அழைப்பை துண்டித்தவர், அந்த கம்பனியின் பெயரை "கூகிலிட்டு" தேடினார்..

அதிலிருந்த கம்பனியின் தொலைபேசிக்கு அழைத்தார்.

ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து "EMCA Technologies, May I help you" என்றாள்.

"
கேன் ஸ்பீக் வித் முஹமத் அஸ்மத் ?? " என்றார்.

"
ப்ளீஸ் வெயிட் சார்" என்றவள், 1 நிமிடத்திற்கு பிறகு "அப்படி யாரும் இங்கே வேலை செய்யவில்லை" என்றாள்.

"
ப்ளீஸ் செக் அகைன், ஹி ஈஸ் வொர்கிங் ஹியர் பார் லாஸ்ட் 1 இயர் " என்றார்.

மறுபடியும் 1 நிமிட மௌனத்திற்கு பிறகு, இல்லை என்றே பதில் வந்தது..

அனைத்தும் புரிந்துவிட்டது.

குஜராத் கலவரத்தினால் அவனது தங்கையின் உயிரிழப்பு ஏற்படுத்திய தாக்கம் இது.. கூடாத நட்பினால், தடம் மாறி தீவிரவாதிகள் அமைப்பில் சேர்ந்து கடந்த ஒரு வருட காலமாக பயிற்சி எடுத்துக்கொண்டு, தன் குடும்பத்தையும் ஏமாற்றி பணம் அனுப்பி கொண்டிருக்கிறான்.
 
ஆனால் இனி நான் என்ன செய்ய ?? அண்ணன் மகன் வேறு, ஒன்றும் தெரியாதவன்போல் இருந்துவிடவா?? ஆனால் உண்மை தெரிந்தும் அமைதியாக இருப்பது தவறில்லையா ??
 
இப்படி பல கேள்விகள்,தன்னை தானே கேட்டுக்கொண்டவர்,இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.
 
அன்று மதியமே லண்டன் புறப்பட்டார்.. மனதை கல்லாக்கி கொண்டவர் ஆண்டர்சனிடம்,

"I need a favor, Please accept my resignation"
என்றார்.

இதனை எதிர்பார்க்காத ஆண்டர்சன்,

"But why ? Got any better opportunities ??"
என்றார் ..

"EMCA Technologies"
என்று பதில் வந்தது..


Friday, August 6, 2010

எங்க வீட்டு ராஜா



டேய் சீக்கிரமா அந்த டாக்டர்க்கு போன் போடுடா,அவனுக்கு ரத்தம் அதிகமா வருது ..
நம்பர் போட்டுட்டு தான் இருக்கேன் கொஞ்சம் இருங்க... பதட்டபடாதீங்க .


நான் என்னோட மொபைல்ல இருந்து உன் அப்பாவுக்கு தகவல் சொல்றேன்..

சரி சரி, நீங்க அப்பாகிட்ட சொல்லுங்க,ஆனா அவர டென்ஷன் ஆகவேனாம்னு சொல்லுங்க..

ஹலோ, நான் தான் வீட்டுல இருந்து பேசுறேன், நம்ப வீட்டுல இருக்கானே ஒரு
பொறுக்கி அவன் இன்னைக்கு தெருவுல சண்ட போட்டான்.. ரொம்ப அடிபட்டு இருக்குங்க ..ஒரே ரத்தமா வருது ..
 
ரமேஷ் டாக்டர்
க்கு போன் பண்ணிட்டு இருக்கான், உங்களுக்கும் தகவல் சொல்லலாம்னு தான் கூப்பிட்டேன் .. 

தகவல் மட்டும் பொறுப்பா என்கிட்ட சொல்லிடு.. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் அவன் இப்படி பொறுக்கி தனம் பண்ணிக்கிட்டு திரியறான்..

நான் மட்டும் என்ன பண்றது.எத்தன தடவ அவன கூப்பிட்டேன் தெரியுமா, சொல்ல சொல்ல மதிக்காம போனான், இப்போ இப்படி ரத்த காயத்தோட வந்து நிக்கறான்.. ரமேஷ் கூட அவன் பக்கத்துல போகவே பயந்துகிட்டு பொறுமையா இருந்துட்டான்.. மொரடனா இருக்கான் ..

அய்யோ ஒவ்வொரு நாளும் இப்படியே எதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தா,எங்க போய் முடிய போகுதோ எனக்கு பயமா இருக்கு டி..அக்க
ம்பக்கம் இருக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது,,

பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என் மடியில வந்து அமைதியா படுத்துட்டு இருக்கான். பாக்க பாவமாவும் இருக்கு.

அம்மா, பேசினது போதும் டாக்டர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டாரு. 

 
சரீங்க டாக்டர் வருவாரு போல இப்போ. மத்தத நீங்க வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்..

வாங்க டாக்டர், உங்கள வீட்டுக்கு வர வச்சதுக்கு மன்னிச்சிடுங்க,ரத்தம் அதிகமா போகுது இல்லனா அவன கூட்டிகிட்டு நானே வந்து இருப்பேன் உங்க வீட்டுக்கு..

ராஜாவை பார்த்த டாக்டர்,


ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் மருந்து எழுதி தரேன் அதை ஒரு வாரம் ஒழுங்கா போடுங்க எல்லாம் சரியாய் போய்டும் அவனுக்கு. பயப்பட ஒன்னும் இல்ல என்று ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார் ..
 

டாக்டர் சென்றவுடன் ராஜாவிடம்,

பிரச்சனை எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரு.. இப்போ மனசுக்கு ஆறுதலா இருக்கு.. இல்லனா நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பேன் .நீ இன்னைக்கு பண்ணதுக்கு தண்டனையா உனக்கு ரெண்டு நாள் சாப்பாடு கெடையாது.






அப்பறம் இந்த வாரம் உனக்கு non veg கூட இல்ல.. டேய் அவன புடிச்சி ரெண்டு நாள் கட்டி போடு டா,அப்போ தான் புத்தி வந்து நம்ப சொல்ற பேச்ச கேட்பான் இல்லனா போய் யார்கிட்டையாவது கடி வாங்கிட்டு வருவான் என்று கோவத்துடன் சொன்னார் அவர்..

இவரது கோபத்தைப் பார்த்து குழைவாய் வால் ஆட்டியது ராஜா.

கார்ப்பரெட் சந்தை

காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.ஆனால் என்றும் நேரம் தவறாமல் வரும் பரத் அன்று ஏனோ பதினைந்து நிமிடம் தாமதமாக வந்தான்.

அலுவலகத்தின் நுழைவாயிலில் சிலர் கையில் கோப்புகளுடன் அமர்ந்திருந்தனர்.

அதை பார்த்துக்கொண்டே அவனது இருக்கைக்கு சென்றவன்,அருகில் அமர்ந்திருந்தஅர்ஜுனிடம்,

"டேய் மச்சி இன்னைக்கு எத்தன மாடு வாங்க போறாங்க??" என்றான்.

அதற்கு அலட்சியமாக,

"என்னமோ மூனு மாடு வேணும்னு பேசிட்டு இருந்தாங்க " என்றான் அர்ஜுன்.

"எரும மாடா இல்ல பசு மாடா ??"
"எரும மாடு ரொம்ப முட்டுதாம்,அதனால பசு மாடே வாங்கலாம்ன்னு இருக்காங்க போல" என்றான் அர்ஜுன்

இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, பரத்தின் மறுபக்கம் அமர்ந்திருந்த லதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

"
டேய் என்னங்க டா இங்க வந்து உட்கார்ந்துகிட்டு எரும,கன்னுக்குட்டின்னு பேசிட்டு இருக்கீங்க.. அதுவும் காலையில வந்தவுடனே!!" என்றாள் அவள்.

"ஹா ஹா... உனக்கு விஷயமே தெரியாதா?? இன்னைக்கு கம்பெனில வேலைக்கு  ஆள் எடுக்குறாங்க."

"அதுக்கும் எருமைக்கும் என்னடா சம்மந்தம் வெண்ணைங்களா??"

"டேய் பரத், இவள எல்லாம் எப்படி டா வேலைக்கு சேர்த்தாங்க...."


இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, மேலதிகாரி லதாவை தன் அறைக்குஅழைத்தார்.

லதா அவர் அறைக்கு சென்று நின்றதுதான்,ஆங்கிலத்தில் ஆசை தீர திட்டஆரம்பித்தவர் ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு,

"மாடு மாதிரி மச மசன்னு நிக்காம,போய் சொன்ன வேலைய சீக்கிரமா முடி" என்றார்.

Thursday, August 5, 2010

ஈஸ்வரின் சபதம்


டேய் இன்னைக்கு எங்கயும் போகாத,என்னோட ஸ்கூல் ப்ரென்டு சுகந்தி வீட்டுக்கு போனும் டா..

ஒன்றும் காதில் விழாதவன் போல டிவி பார்த்துகொண்டிருந்தான் ஈஸ்வர்.

சமையல் அறையில் இருந்தவர் சற்று சப்தமாக, "டேய் சொன்னது கேட்டுச்சா ??" என்றார்..

கேட்டுச்சி..கேட்டுச்சி ..ஆமாம்,உங்க ப்ரென்டு வீடு எல்லாம் வறண்டு போய் தான் இருக்கும்.. சுத்த வேஸ்ட் .. எதாவது கண்ணனுக்கு குளிர்ச்சியா இருக்கா ?  

என்னடா ஏதோ பொலம்பிக்கிட்டு இருக்கா மாதிரி தெரியுது ??. 

அதெல்லாம் ஒன்னும் இல்ல, எப்போ போகனும்னு சொல்லுங்க ..

இன்னும் அரை மணிநேரத்துல என்றார் அவன் தாய்.

சரி, நீங்களும் அளவா மேக்கப் போட்டுக்கிட்டு தயாரா இருங்க,நான் இதோ வெளிய போயிட்டு வரேன். 


சரி சீக்கிரம் வந்துடு டா.

சரியாக 45 நிமிடங்கள் கழித்து வந்தான்..

எரும மாடே,நான் தான் போகணும்ன்னு சொன்னேன்ல.. எல்லாத்தையும் கேட்டுட்டு லேட்டாவே வர.. 

திட்டு வாங்கிகொண்டே அவனது வாகனத்தில் அழைத்து சென்றான்.

இறுதியில் ஒரு பச்சை நிற பெயிண்ட் அடிக்கபடிருந்த அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினான்..

"ஹாய் சுதா,எத்தன வருஷம் ஆச்சி உன்ன பார்த்து, இப்போ தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா உனக்கு? " என்று வழக்கமான வசனத்துடன் வரவேற்பு இருந்தது..

ஐயோ,இவங்க பள்ளிகூட கதை, கல்லூரி கதை, கல்யாண கதை இது எல்லாத்துக்கும் பிளாஷ் பாக் (flash back) போயிட்டு இப்போதைய கதைக்கு வரதுக்குள்ள எனக்கு மண்டையே வெடிசிடுமே..

எல்லாம் விதி..காலேஜ் இருக்கும் போது கட் அடிச்சிட்டு நல்லா சுத்தினேன். இன்னைக்கு
சண்டே, லீவ் விட்டும் இப்படி அவஸ்த படனும்னு இருக்கு என்று எண்ணி நொந்துக்கொண்டான்.


"இவேன் உன் பையன்தான,சின்ன வயசுல பார்த்தது.. நல்லா வளந்துட்டான் இப்போ" என்றார் சுகந்தி.


(இதே வசனத்த போன வாரம் தான் இன்னொரு ப்ரென்டு வீட்டுல சொன்னாங்க.இந்த அம்மா கூட படிச்சவங்க எல்லாருமே இப்படி தான் போல.)

என்னப்பா படிக்கற நீ ?

"B.Tech Bio Technology இறுதியாண்டு படிக்கிறேன்"

ஓஹ் அப்படியா, நல்ல கோர்ஸ் அது. நல்லா படி,நல்ல வேலையில போய் சீக்கிரம் உட்காரு என்று சொல்லி கையில் ஒரு தட்டில் கொஞ்சம் பிஸ்கட், ஒரே ஒரு லட்டு மட்டும் வச்சி கொடுத்தாங்க..

என்ன நடு வீட்டில் கையில் தட்டை கொடுத்து சாப்பட வச்சிட்டு, இவங்க மட்டும் ரூம்க்கு போய் ஏதோ பேசிட்டு இருக்காங்களே என்று கோவம் கோவமாக வந்தது..

லட்டை ருசித்துக்கொண்டிருந்தவன், திடிரென்று கண்களை சிமிட்டாமல் வீட்டு சுவரில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு போட்டோவை பார்த்தான்.

அதில் பெரியவர்கள் இருவரும், ஒரு அழகான பெண்ணும் இருந்தனர்.. 

"காவேரி டெல்டா பகுதி நிலம் போல காஞ்சி போய் இருந்தவன் முகத்துல,மேட்டூர் ஆணை திறந்து விட்டது போல் சந்தோஷம்" .

ஐயோ இப்படி ஒரு பொண்ணோட அம்மா என் அம்மாக்கு தோழியா ??
இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற வீட்டுக்கு கூட்டிகிட்டு வராம,இத்தன வருஷமா
நேரத்த வேஸ்ட் பண்ணி இருகாங்க என்று எண்ணிக்கொண்டு இருந்தான்..


தட்டில் இருந்த லட்டு வயிற்றை சென்றடைய, வெளியே கேட் திறக்கும் சப்தம் கேட்டது அவனுக்கு.

வீட்டினுள் இருவர் நுழைய, நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவன் அவளை பார்த்து எழுந்தே நின்றே விட்டான்.
(நல்லவேளை யாரும் அவனை கவனிக்கவில்லை)

அம்மா,நீங்க கேட்ட அந்த பிரியாணி அரிசி கடையில இல்ல,அப்பறம் இன்னைக்கு புதுசா ஒரு மசாலா பாக்கெட் வாங்கி வந்திருக்கேன் அது எப்படி இருக்குனு பாக்கலாம்
என்று நாற்காலி அருகில் நிற்கும் ஈஸ்வரை கவனிக்காமல் பேசிகொண்டே இருந்தால்.


"நீ முதலில் அறைக்குள் வா என்று அவளது தாய் அழைக்க,அவளும் உள்ளே சென்றால்.இவங்க தான் சுதா என்னோட ஸ்கூல் தோழி. உங்கிட்ட கூட சொல்லி இருக்கேன்ல அது இவங்க தான்" என்று அறிமுகம் படுத்தி வைக்க, எனது

"அம்மாவும்,உன் பொண்ணு சந்தியாவா இது ?,சின்ன வயசுல பார்த்தது நல்லா வளந்துட்டாள் இப்போ" என்று அதே ஸ்துதியை பாடினார்.


சிரித்துக்கொண்டே நான் BSC Maths படிக்கிறேன் என்றால். 
(வளர்ந்துட்டாலாம் அதை சொல்லி காட்டுரா  )

 
"ஓஹ்ஹ் கணக்கா, என் புள்ளைக்கு சுத்தமா வராது" என்றால் ஈஷ்வரின் தாய்.

அவள் அவனை ஒரு முறை பார்த்தல், உதட்டோரம் அந்த சிரிப்பு தெரிந்தது..

அம்மாவை முறைத்துகொண்டே,சந்தியாவை கரெக்ட் பண்ண வெறியா மனதை தயாராக்கி கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

அனைவரும் அறையில் உரையாட, இவன் மட்டும் சந்தியாவுடன் கடையில் இருந்து வந்த அவள் மாமா பையனிடம் விளையாடி கொண்டிருந்தான்.


ரெண்டு மணிநேர அரட்டைக்கு பிறகு அங்கிருந்து புறப்பட, அந்த சிறுவன், இந்த மாமா இங்கயே இருகட்டுமே என்றான்..

அதற்கு சந்தியாவின் தாய்,

"இப்போ போகட்டும் டா,ஒரு வேலைக்கு போயிட்டு சேர்ந்த பிறகு மாமாவ நம்ப வீட்டுக்கே கூப்டிக்கிட்டு வந்துடலாம்" என்று சொன்னார்.

இதை கேட்ட உற்சாகத்தில், சந்தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாகனத்தின் வேகத்தை உயர்த்தினான்.


"திறக்க மறுக்கும் என் இதய கதவை,
உடைக்க துடிக்கும் கள்ளி இவள் தானோ !!"
 

வீடு திரும்பும் வழியில்,அம்மாவிடம் எப்போ மறுபடியும் வர சொன்னாங்க என்று அவன் கேட்க,வழகத்துக்கு மாறா பேசுறானே என்ற சந்தேகத்துடன் வீடு வந்து சேர்ந்தார் சுதா.

Tuesday, August 3, 2010

ஆசைகள் ஆயிரம்

மதிய வேளையில்,சிக்னலின் அருகில் ஒரு கடையின் நிழலில்  நின்று கொண்டிருந்த இரண்டு "25 வயது" மதிக்கத்தக்க போக்குவரத்துத்துறை காவலர்கள்,

மகேஷ் :   டேய் முரளி,அங்க ஒன்னு போகுது பாரேன்.

முரளி    :   மச்சி சூப்பரா இருக்கு டா.செம ஸ்டைல், 
                      அட்டகாசமான லுக்குடா.இதெல்லாம் பாக்க
                      கொடுத்து வச்சிருகனும்டா  

மகேஷ்  : முன்னாடி (front look) பார்க்க அருமையா இருக்குடா

முரளி     : டேய் முன்னாடி மட்டும் இல்ல,எனக்கு              
                      எங்கயுமே குறை தெரியல.பார்த்துக்கிட்டே
                      இருக்கலாம் போல

மகேஷ் : கண்ணாடி கூட அழகு சேர்க்குது டா மச்சி.

முரளி   : அவ்ளோ ஸ்டைலா இருந்தாலும்,
 
                    எவ்ளோ அமைதியா போகுது பாரேன்.

மகேஷ்  : எனக்கு என்னமோ நான் கொஞ்சம் அவசர
                      பட்டு
ட்டேனோன்னு தோனுதுடா.
                
முரளி  :  ஏன் டா அப்படி சொல்லுற?

மகேஷ் : முன்னாடியே  என் கண்ணுல இது சிக்கி இருந்தா,
                    
வீட்டுல  சொல்லி  எப்படியாவது கரெக்ட் 
                     பண்ணியிருப்பேன் டா.

முரளி    : இப்போ
மட்டும் என்ன ஆய்டுச்சி. கொஞ்ச நாள்
                     பொறுத்துக்கோ.அப்புறம் வீட்டுல இருக்கே அத
                     எப்படியாவது கஷ்டபட்டு வெளிய வெரட்டி
                     விட்டுட்டு,இத வச்சிக்கோ.

மகேஷ் :  ஆனா நான் புதுசு ஒன்ன கரெக்ட் பண்றது வீட்டுல
                     தெரிஞ்சா அவ்ளோ தான் சாகடிச்சிருவாங்க.

முரளி  :   டேய் தெரிஞ்சா கொஞ்ச நாள் திட்டுவாங்க...
                     இருக்கிறது நல்லா இருந்தாலும்,புதுசா ஒன்ன
                     பார்த்தா அது மேல ஆசை படுறது மனுஷனுக்கு
                     இயல்பு டா.

மகேஷ் :   ஆனா வீட்டுல அவங்கள சமாளிக்க எதாவது
                      சொல்லனுமே டா..

முரளி  :   அதுவும் சரி தான்!!.
                     பிக்கப் நல்லா இருக்கும்,லிட்டர் கு நிறைய KM
                     தரும்னு சொல்லு டா நிச்சயமா ஒன்னும்
                     சொல்லமாட்டாங்க.       
 

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம்

இது சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு  என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கோரமான சம்பவம்...

இதை உங்களுடன் வருத்தத்துடன் பகிர்ந்து
க்கொள்கிறேன் ...

அப்பொழுது எனது அக்கா ஒரிஸ்ஸா மாநிலத்தில் நக்சல்ஸ் ஆளும் ஜெய்ப்பூர் (Jeypore) என்னும் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார்...

ஒரிஸ்ஸா சென்று எனது தமக்கையை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.

நானும் அங்கே சென்று இரண்டு  நாட்கள் தங்கி விட்டு,அக்காவுடன் தமிழகம்  திரும்ப ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் ரயில் நிலையத்தில்  காத்துக்கொண்டிருந்தேன் ..

ரயில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது .. நானும் எனது அக்காவும் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தோம்..

ரயில் புறப்பட்டது, ஒரு மணி நேரம் கழித்து விசாகபட்டினம் வந்து சேர்ந்தது.. அரை மணி நேரம் அங்கே நின்ற ரயில் மறுபடியும் திருச்சியை நோக்கி பயணத்தை துவக்கியது..

அன்று ஏனோ ரயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

அப்பொழுது தான் அந்த கோரமான சம்பவம் நிகழ்ந்தது..
 
ரயில் சென்று கொண்டிருக்க,ஒரு உருவம்  தூரத்தில் இருந்து எங்கள்  இருவரையும்  நோக்கி நடந்து வந்தது..

பக்கத்தில் வர வர அந்த உருவம் ஒரு திருநங்கை என்பது தெரிய வந்தது..

எங்கள் அருகில் வந்து நின்ற அந்த திருநங்கை காசு கொடு என்று கேட்டு எரிச்சலூட்ட தொடங்கியது..

வெறுத்து போன நான் "காசெல்லாம் தர முடியாது போ" என்று வேண்டுமென்றே தமிழில் சொன்னேன்.. ஆந்திர மாநிலத்தில் இருப்பவர்கள் அதனால் இந்த திருநங்கைக்கு தமிழ் தெரியாது என்று நம்பினேன்..

ஆனால் எங்களுக்கு சொந்த ஊரு குவாகம் தான் என்று கூறி தமிழிலும் பேசி காசு கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கியது..

அதிலும் நாமாக கொடுத்தால் 1 ரூபாய் அல்லது 50 காசுகள் தான் கொடுப்போம் என்று தெரிந்து எனக்கு 5 ரூபாய் கொடு  என்று கேட்டது..

கோவத்தின் உச்சிக்கு சென்ற நான் தர முடியாது போ என்று விரட்ட ஆரம்பித்தேன்.அருகில் எனது அக்கா வேறு...

அப்பொழுது அந்த திருநங்கை

"காசு கொடுத்தா உனக்கு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு மனைவியா வருவா இல்லை என்றால் என்னை போல் ஒருத்தி தான் சிக்குவா மனைவியா" என்று கூற தலையே சுற்றியது எனக்கு ...

"இவகிட்ட பட்டது போதும்டா சாமி" என்று 5 ரூபாய் எடுத்து கொடுத்து அனுப்ப, பக்கத்தில் ஏதோ  ஒரு சிரிப்பு சத்தம் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருந்தது..

யார் அது  என்று பார்த்தால் எனது அக்கா ...

அட அக்கா தான வேற யாரும் கேட்கலையேன்னு  சந்தோசமா இருந்தா,அதே பெட்டியில் மறு பக்கம் அமர்ந்து இருந்த அந்த அழகான பெண்ணும்  சிரிச்சிக்கிட்டே இருந்தா..

பார்க்க மகாலக்ஷ்மி மாதிரி தான் இருந்தா....  

Sunday, August 1, 2010

கட்டாயத்தின் மாற்றம்

முதல் செமஸ்டர் பரீட்சை முடிந்து,விடுமுறைக்காக கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான்  கிருஷ்ணன்.

"அவன் வந்துட்டானா??  எக்ஸாம் எப்படி எழுதியிருகானாம் ??" என்றார் அவன் தந்தை.
 

"இன்னும் பேசல,வெளிய பசங்க கூட சுத்திட்டு இருப்பான்" என்றார் அவன் தாய்.

மேலும் கணவரிடம், "அவனுக்கு ஹாஸ்டல் எல்லாம் பழகிடுச்சா, இல்ல எதாவது வேணுமான்னு கேளுங்க. போன தடவை வந்த போதே பொலம்பிக்கிட்டு இருந்தான்"  என்றார் சித்ரா.


"லீவ் விடுறதே கொஞ்ச நாள்,அதுலயும் பசங்க கூடவே வெளிய சுத்திட்டு இருந்தா,நாம எப்போ அவனோட நேரம் செலவிடுறது ?? .சரி வரட்டும் பேசலாம்" என்றார் குமரேசன்.

ஒரு மணி நேரம் கழித்து,கைபேசியில் நண்பனுடன் பேசியே படியே வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணன்.


"ஆமாம் டா இன்னும் மூணு நாள் தான் இருப்பேன்,அதுக்குள்ள உன்ன பாக்க வரேன்டா, சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்"  என்று கூறி நேராக அம்மாவிடம் சென்று பசிக்குது என்ன இருக்கு என்றான்.

அங்க எடுத்து வச்சி இருக்கேன் போய் எடுத்து போட்டு சாப்டுகோ என்றார் அவர்.

சாப்பிட அமர்ந்தவன்,

" என்ன எப்பவும் சுப்ரபாதம், கந்தஷஷ்டி கவசமும்  ஓடுற வீட்டுல திடுர்னு கிறிஸ்துமஸ் பஜனை  நடக்குது ??"  என்றான்.

யார் வீட்டுல டா சொல்லுற என்று அவன் தாய் கேட்க அதான் மா, நம்ம தெருவுல இருக்காரே அன்பு சார்,அவர் வீட்டுல தான் சொல்றேன்.

ஓஹ் அவுங்களா. அவங்க கிறிஸ்டின் மதத்துக்கு மாறிட்டாங்க டா.

"என்னமா சொல்றீங்க, திடிர்னு ஏன் மாறனும்??" என்று அவன் கேட்க, அன்பு இறந்துட்டார் டா இரண்டு மாசத்துக்கு முன்னாடி என்றார் அவன் தந்தை.

இறந்துட்டாரா? எப்படி ?

 அவருக்கு மாரடைப்பு.

ஓஹ், ஆனா அதுக்கும் மதம் மாறுவதற்கும்  என்ன சம்மந்தம்? ஏன் மாறனும்?


போனவரு ஏகபட்ட கடன் வாங்கி வச்சிட்டு போய்ட்டாரு. அதனால அவங்க உறவுக்காரர்களும் இவங்களுக்கு துணையா உதவி பண்ண தயங்கி விட்டுடாங்க.

அன்பு மனைவிக்கோ எதுவும் வேலையுமில்லை. அவங்களுக்கு ரெண்டு கொழந்தை வேற இருக்குடா. இப்படி இருக்க, அவங்களுக்கு ஒரு வேலை கொடுத்து, பசங்களோடபடிப்புக்கு உதவ தயாரா இருக்கோம்னு "சிஸ்டர்ஸ்" வந்து சொல்ல, அவங்களும் சந்தோஷமா மதம் மாறிட்டாங்க என்றார் அவன் தாய்.


ஆனா இது தப்பு தான ?? என்றான் கிருஷ்ணன்.

கட்டாய மத மாற்றம் தான் தப்பு, ஆனா இதுல என்ன தப்பு இருக்கு. 

உனக்கு உன் வாழ்க்கை ஓடனும். பசங்க படிப்பு முக்கியம் அவங்க எதிர்காலம் முக்கியம். உறவுகாரங்க கை விட்டுடாங்க,நீ கும்பிட்ட மதமும் இந்த மாதிரி நேரத்துல கை கொடுக்க போறதில்ல. அதனால அவங்களோட குடும்ப சூழ்நிலை காரணமா மதம் மாறினதுல தப்பே இல்ல என்றார் அவன் தந்தை.

இதுவும் ஒரு கட்டாயம் தான். அவங்களுக்கு அவங்க பசங்கள நல்லா
வளர்க்கணுமே ஒரு கட்டாயம். அதனால மாறினாங்க என்றார் சித்ரா.

வெளிய இருந்து பாக்குற நமக்கு, இப்படி காசு கொடுத்து ஆசை காட்டி மதம் மாத்துராங்னு கோவம் வருது.
 

ஆனா அவங்களுக்கோ,இப்படி நமக்கு கடவுள் மாதிரி உதவிண்றாங்களேன்னு தோணுது. இத தப்புன்னு சொல்ல முடியாதே டா என்றார் அவர்.
 

இவை அனைத்தும் கேட்டு,இந்த மதம் மாற்றம் தவறில்லை என்று தோன்றினாலும்,மனசுக்குள் எதோ ஒரு பக்கம் இது தவறு தான் என்ற எண்ணம் அவனுக்குஇருந்துகொண்டே இருந்தது.


 --மத மாற்றத்தை மனதளவில் எதிர்க்கும் பலருள் ஒருவன் நான் --