Monday, August 9, 2010

அக்கரை சீமையில் -பகுதி 2

Disclaimer :  இந்த கதையில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.

 

அக்கரை சீமையில் -பகுதி 1


இன்றைய தினம் ..

இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன்.  

"வெல்கம் பேக் மிஸ்டர் இக்பால்.. 
 நீங்க மறுபடியும் இங்கே  வருவீங்கன்னு எனக்கு தெரியும்."

தேங்க்ஸ் ஆண்டர்சன்.

சில வருடங்களுக்கு முன்பு ..

இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன்.
நேரம்: 3pm
 
ஒரு அறையில்,அந்த பெரிய டேபிளை சுற்றி பதினைந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அங்கே பெரிய தொலைக்காட்சி பெட்டி போன்ற ஒன்று சுவற்றில் மாட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

முதலில் "ஆண்டர்சன்" அறையை ஒரு முறை பார்வையிட்டுவிட்டு வெளிய சென்றார்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கருப்பு கோட் அணிந்த ஒருவருடன் ஆண்டர்சன் மீண்டும் அறைக்கு வந்தார்.

(அந்த கருப்பு கோட் அணிந்திருப்பவர் தான் அண்டர்சனின் பாஸ் போலும் )

பிறகு மேலும் இருவர் அந்த அறையில் நுழைந்தனர்.   
  
அனைவரும் இருக்கையில் அமர்ந்த பின்னர், அறையின் கதவு சாத்தப்பட்டது.. கோட் அணிந்திருந்த நபர் பேச துடங்கினார்..
 
"
இது ஹய்லி கிளாஸிபைட் மேட்டர்.. நாளைக்கு லாகூர்ல இருக்கும்  இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா ஒரு ரகசிய தகவல் வந்திருக்கு. அங்க  நம்ம  டீம்  போய்  கவர்  பண்ணினா  நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்.. இஸ் தட் ஓகே வித் யு கைஸ்?? " என்றார் Mr.வில்லியம்ஸ்

"
ஆனா இந்த தகவலை உண்மைன்னு எப்படி நம்பறது.." என்று கேள்வி எழுப்பினார் ஹென்றி.

"
நல்ல கேள்வி, இதை இஸ்ரேல் உளவு துறை "மொசாத் (MOSSAD) " தான் திரட்டி இருக்காங்க..  

உலகத்துலையே சிறப்பான உளவு அமைப்பு அது..  

எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாம நம்ம  டீமை லாகூர்க்கு அனுப்புவோம். இப்படி ஒரு சம்பவம் நடக்குதோ இல்லையோ அதை பின்னாடி பார்த்துக்குவோம்" என்றார் வில்லியம்ஸ்.    

சார், Mr. ஹுசைன்  தான் பாகிஸ்தான்ல கவர் பண்ற நம்ம  ரிபோர்ட்டர்.ஆனா அவர் இப்போ 1 வீக்  லீவ்ல இருக்காரு.

சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ?

Mr.
இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா  நம்மகிட்ட வொர்க் பண்றாரு.அனுபவமுள்ள ஆளு..அவர்  போறது  பெஸ்ட்னு  தோணுது சார் என்றார் ஆண்டர்சன்.

சார் மன்னிக்கணும், தவறா எடுத்துக்க கூடாது, இக்பால் ஒரு இந்தியர். அவர இப்போ இந்த சூழ்நிலையில பாகிஸ்தான் அனுப்பறது  நல்ல ஐடியாவா எனக்கு தோணலை என்றார் ஹென்றி.

"
ஆனா,அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் நீங்க மறந்துட கூடாது  மிஸ்டர்" என்றார் ஆண்டர்சன்.

சரி  இப்போ அவர் எங்க  இருக்காரு ?

நேற்று காபுலில் நடந்த  கார்  குண்டுவெடிப்பு சம்பவத்த கவர் பண்ணது அவரும் அவர் டீமும் தான்.இப்பவும் அங்க  தான்  இருக்கார் .

ஓகே.அவர இன்னைக்கு ராத்திரிக்குள்ள லாகூர்க்கு புறப்பட சொல்லிடுங்க..நாளைக்கு மார்னிங் ஸ்பாட்ல இருக்கட்டும்.
இடம்  : லாகூர், காலை நேரம் 6.30.

அன்று வெள்ளிகிழமை,மசூதியில் நடக்கும் தொழுகையில் கலந்து கொண்டுவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பி கொண்டிருந்தார் இக்பால்.

7
மாடி கட்டிடம் அது, நான்காவது மாடியில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு படியிலேயே ஏறி சென்றார். 

அவர் நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்பவர் என்பது அந்த உடலை பார்த்தாலே புரியும். முரட்டு தேகம் அது, மாமிசம் உண்டு ஏற்றியது போலும்.உடலின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்

மாடி ஏறி அறைக்கு வந்தவர், "ஹே எட்வார்ட்ஸ்,கமான் மேன் கெட் அப்" என்றார்

"ஒஹ் காட், நாட் சோ ஏர்லி(early)"  என்றான் எட்வார்ட்ஸ்.

(இக்பால் மற்றும் எட்வார்ட்ஸ் நெருங்கிய நண்பர்கள். எட்வார்ட்ஸின் காமெரா தான் இக்பாலுக்கு எப்பவும் உறுதுணை. எதையும் துல்லியமாக படமாக்கும் திறமையுள்ளவன். இக்கட்டான சூழ்நிலையிலும் பதட்டமின்றி காரியத்தை முடிப்பவன்)

"சீக்கிரம் தயாராகு, நாம  ஸ்பாட்ல  இன்னும்  1 மணி நேரத்துக்குள்ள இருக்கனும். நீயும்  உன்  காமெராவும் இல்லாம நான் மட்டும்  அங்க போய் தனியா என்ன பண்றது.. ஹரி  அப்".

ஓகே இக்பால்,ஜஸ்ட் கிவ் மீ 10 மினிட்ஸ்.

காலை நேரம் 7.45.

இருவரும் வாகனம் ஒன்றில் சென்று எம்பசிக்கு முன் ஒரு இடத்தில் இறங்கினார்கள்..

இக்பால் சுற்றி பார்த்தான்.பரபரப்பான காலை நேரம்.. பள்ளிக்கு செல்லும் சிறார்களும்,அலுவலகத்திற்கு செல்பவர்களும் எறும்பு போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.

"
கேன் வி கெட் சம்திங் டு ஈட்?? " என்றான் எட்வார்ட்ஸ். சரி என்பது போல் தலையசைத்தவன், அருகே இருந்த ஒரு உணவு விடுதிக்கு அவனை அழைத்து சென்றான். அங்கேயே நேரம் போக்கி கொண்டிருந்தார்கள்.  

காலை நேரம் 9.15.
 
அப்பொழுது பாகிஸ்தானுக்கான இந்திய தூதுரக அதிகாரி தூதுரகம் அருகில் காரில்  வந்துக்கொண்டிருந்தார். அவர் காரின் பின்புறம்,மற்றொரு காரில்  சில அமெரிக்க அதிகாரிகளும் வந்துக்கொண்டிருந்தனர்.
     
திடிரென்று இரண்டு வாகனத்தில் வந்த தீவரவாதிகள் இந்திய எம்பசிக்கு முன் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த துவங்கினர்..
 
நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு தீனி போடும் வகையில் இது அமைந்திருந்தது. இக்பால் உடனே லண்டனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்.அவர்கள் மேலும் நடப்பதை முழுவதுமாக கண்காணித்து செய்தியை சேகரிக்குமாறு கோரினார்கள்.

பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே,எட்வார்ட்ஸ் தனது காமெராவை ஆண் செய்தான், இக்பாலும்  நடப்பதை வர்ணிக்க தொடங்கினான்.
 
இந்த சண்டையில் இந்தியர்கள் பதினைந்து நபர்களும் மற்றும் மூன்று அமெரிக்க அதிகாரிகளும் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர்.  

மேலும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் காயங்களுடன் தூதுரகத்தின் உள்ளே தூக்கிகொண்டு செல்லப்பட்டார்.   

இதனிடையே பாகிஸ்தான் ராணுவப்படை வந்து  அங்கே குவிந்தது. தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தின் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதை கவர் செய்துகொண்டிருந்தது எட்வர்ட்ஸின் கேமரா.

சாலையெங்கும் ரத்தம், குண்டடிபட்டு இறந்த உடல்கள்,சேதமடைந்த கார்கள் என கலவரமாக காட்சியளித்தன.

துப்பாக்கி சூடு நடந்துகொண்டிருக்கும் போதே,வாகனத்தில் தீவிரவாதிகள் தப்பித்து சென்றுவிட்டார்கள்.  

அந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதியும் உயிரிழக்கவில்லை.பாகிஸ்தான் ராணுவ தரப்பிலும் உயிர் சேதமில்லை.

சிறிது நேரத்தில் பதட்டம் தணிந்து மக்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்க தொடங்கினார்கள். இவ்வாறான செயல்கள் அவர்களுக்கு பழகிவிட்டதைதான் அது காட்டியது. இக்பால் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

மீண்டும் ஹோட்டல் அறைக்கு சென்றவர்,காமெராவில் படம் பிடித்ததை ஒரு முறை பார்வையிட்டனர். அதில் ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது இக்பாலுக்கு

மீண்டும் மீண்டும் அதை பார்வையிட்ட இக்பால்,

தீவிரவாதிகளில் ஒருவன் தன்னுடைய அண்ணன் மகன் என்பதை அடையாளம் கண்டுக்கொண்டார்.
 
உண்மை என்ற போதிலும்,உடனே அவரால் நம்ப முடியவில்லை.  

தயங்காமல், குஜராத்தில் வசிக்கும் தனது அண்ணனுக்கு போன் செய்தவர்
 

"உன் மகன் எங்கே" என்றார்..

"
இதை கேட்கவா போன் செய்தாய்.. அவன் துபாயில் பணிபுரிகிறான் என்று உனக்கு தான் தெரியுமே.. இந்த மாதம் கூட 50 ஆயிரம் என் அக்கவுண்டிற்கு அனுப்பிவைத்தான்" என்றார் அவர்.

மனம் சாந்தமடையவில்லை.. " கம்பெனி நேம் " என்றார் அண்ணனிடம்.

"EMCA Technologies"
என்று பதில் வந்தது.

அழைப்பை துண்டித்தவர், அந்த கம்பனியின் பெயரை "கூகிலிட்டு" தேடினார்..

அதிலிருந்த கம்பனியின் தொலைபேசிக்கு அழைத்தார்.

ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து "EMCA Technologies, May I help you" என்றாள்.

"
கேன் ஸ்பீக் வித் முஹமத் அஸ்மத் ?? " என்றார்.

"
ப்ளீஸ் வெயிட் சார்" என்றவள், 1 நிமிடத்திற்கு பிறகு "அப்படி யாரும் இங்கே வேலை செய்யவில்லை" என்றாள்.

"
ப்ளீஸ் செக் அகைன், ஹி ஈஸ் வொர்கிங் ஹியர் பார் லாஸ்ட் 1 இயர் " என்றார்.

மறுபடியும் 1 நிமிட மௌனத்திற்கு பிறகு, இல்லை என்றே பதில் வந்தது..

அனைத்தும் புரிந்துவிட்டது.

குஜராத் கலவரத்தினால் அவனது தங்கையின் உயிரிழப்பு ஏற்படுத்திய தாக்கம் இது.. கூடாத நட்பினால், தடம் மாறி தீவிரவாதிகள் அமைப்பில் சேர்ந்து கடந்த ஒரு வருட காலமாக பயிற்சி எடுத்துக்கொண்டு, தன் குடும்பத்தையும் ஏமாற்றி பணம் அனுப்பி கொண்டிருக்கிறான்.
 
ஆனால் இனி நான் என்ன செய்ய ?? அண்ணன் மகன் வேறு, ஒன்றும் தெரியாதவன்போல் இருந்துவிடவா?? ஆனால் உண்மை தெரிந்தும் அமைதியாக இருப்பது தவறில்லையா ??
 
இப்படி பல கேள்விகள்,தன்னை தானே கேட்டுக்கொண்டவர்,இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.
 
அன்று மதியமே லண்டன் புறப்பட்டார்.. மனதை கல்லாக்கி கொண்டவர் ஆண்டர்சனிடம்,

"I need a favor, Please accept my resignation"
என்றார்.

இதனை எதிர்பார்க்காத ஆண்டர்சன்,

"But why ? Got any better opportunities ??"
என்றார் ..

"EMCA Technologies"
என்று பதில் வந்தது..