Friday, August 6, 2010

கார்ப்பரெட் சந்தை

காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.ஆனால் என்றும் நேரம் தவறாமல் வரும் பரத் அன்று ஏனோ பதினைந்து நிமிடம் தாமதமாக வந்தான்.

அலுவலகத்தின் நுழைவாயிலில் சிலர் கையில் கோப்புகளுடன் அமர்ந்திருந்தனர்.

அதை பார்த்துக்கொண்டே அவனது இருக்கைக்கு சென்றவன்,அருகில் அமர்ந்திருந்தஅர்ஜுனிடம்,

"டேய் மச்சி இன்னைக்கு எத்தன மாடு வாங்க போறாங்க??" என்றான்.

அதற்கு அலட்சியமாக,

"என்னமோ மூனு மாடு வேணும்னு பேசிட்டு இருந்தாங்க " என்றான் அர்ஜுன்.

"எரும மாடா இல்ல பசு மாடா ??"
"எரும மாடு ரொம்ப முட்டுதாம்,அதனால பசு மாடே வாங்கலாம்ன்னு இருக்காங்க போல" என்றான் அர்ஜுன்

இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, பரத்தின் மறுபக்கம் அமர்ந்திருந்த லதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

"
டேய் என்னங்க டா இங்க வந்து உட்கார்ந்துகிட்டு எரும,கன்னுக்குட்டின்னு பேசிட்டு இருக்கீங்க.. அதுவும் காலையில வந்தவுடனே!!" என்றாள் அவள்.

"ஹா ஹா... உனக்கு விஷயமே தெரியாதா?? இன்னைக்கு கம்பெனில வேலைக்கு  ஆள் எடுக்குறாங்க."

"அதுக்கும் எருமைக்கும் என்னடா சம்மந்தம் வெண்ணைங்களா??"

"டேய் பரத், இவள எல்லாம் எப்படி டா வேலைக்கு சேர்த்தாங்க...."


இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, மேலதிகாரி லதாவை தன் அறைக்குஅழைத்தார்.

லதா அவர் அறைக்கு சென்று நின்றதுதான்,ஆங்கிலத்தில் ஆசை தீர திட்டஆரம்பித்தவர் ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு,

"மாடு மாதிரி மச மசன்னு நிக்காம,போய் சொன்ன வேலைய சீக்கிரமா முடி" என்றார்.

3 comments:

குகன் said...

Super... good comedy :)

இராகவன் நைஜிரியா said...

இது மாதிரி வாக்குமூலம் எல்லாம் கொடுக் கூடாது...

ஆபிசில் திட்டு வாங்கினா ஆபிசோட போயிடணும்..

இரகுராமன் said...

raghavan anna namma sogathai nanbargal kita thaane pagirnthuka mudiyum :)