Wednesday, August 25, 2010

சைட்டும் ஷேப்ட்டியும்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் ஹைதராபாத்..

அங்கே வாகனங்கள் தரையில் ஓடாது,மற்றவர் தலையில் தான் ஓடும் ..

சரி சொல்ல வந்தத மறந்துட போறேன் ...
 
நானும் என் நண்பனும் தினமும் அலுவலகத்திற்கு பைக்கில் செல்வது வழக்கம்..

15 கிமீ தொலைவில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு குறைந்தது ஒரு  மணி நேரம் ஆகும்.

அப்படியே எங்கையாவது பெராக் பார்துக்கிட்டே பைக் பின்னாடி நான் உட்கார்ந்திருப்பேன்,என் நண்பன் வாகனத்தை இயக்குவான்..

நான்கு நாட்கள் தொடர்ந்து அவன் வாகனம் ஓட்டுவதை கவனித்து வந்தேன்..

ஒவ்வொரு முறையும், சாலையில் ஏதாவது ஆட்டோவை முந்தும்போது ஒரு முறை ப்ரேக் அழுத்தி ஆட்டோவின் உள்ளே பார்பான்,பிறகு மறுபடியும் வாகனத்தை எப்பவும் போல் வேகமாக இயக்கி செல்ல தொடங்குவான்..

அட இவன் என்னடா எப்ப பாரு பிரேக் அழுத்தி எட்டி எட்டி பார்க்குறானே மனசுல என்ன நெனைச்சிக்கிட்டு பார்க்குரான்னு எரிச்சல் மிக்க ஆர்வம் வந்தது..

ஒரு நாள் பொறுமையை இழந்த நான்,டேய் அப்படி என்னடா ஆட்டோ குள்ள எட்டி எட்டி பார்குற அப்படின்னு கேட்டேன்..

அதுக்கு அவன் என்னை பார்த்து நீ வேஸ்ட் டா, இதுகூட தெரியாம என்றான்.

ஏற்கனவே இருந்த எரிச்சல் இன்னும் அதிகமாச்சி.. கூடவே காரணத்த தெரிஞ்சிக்கணும்னு எண்ணமும் அதிகமாச்சி..

சொல்லிதொல
என்றேன்...

அது ஒண்ணுமில்ல மச்சி ஆட்டோல பெரும்பாலும் பொண்ணுங்க இல்லனா வயசானவங்க தான் போவாங்க. அதான் எதாவதுஅழகான பொண்ணுங்க போகுதான்னு  பார்த்துக்கிட்டே போறேன்னு சொன்னான்...

அடேடே என்னமா யோசிக்கிரானுங்க ..

இவன் இப்படி ஆட்டோக்குள்ள எட்டி பார்த்துக்கிட்டே வண்டி ஓட்டினா,நம்பல எல்லாரும் கடைசில லாரிக்கு அடியில தான் எட்டி பார்பாங்கனு நெனைச்சிக்கிட்டு அடுத்த நாள்ல இருந்து பேருந்தில் பையனம் செய்ய ஆரம்பித்தேன்..

பைக்ல போகும்போது கண்ணனுக்கு தெரிஞ்ச பொண்ணுங்கள விட பஸ்ல அதிகமாவே தெரிஞ்சாங்க ....

சைட் (sight) க்கு சைட்டும் ஆச்சி .. சேப்டி (safety) க்கு சேப்டியும் ஆச்சி ... பேருந்தின் ஓட்டுனர் எட்டி எட்டி பார்க்காதவரை

1 comment:

ப.கந்தசாமி said...

பெராக்குப் பாத்துட்டே போயி சோப்பில இருக்கறத எவனாச்சும் எடுத்துட்டுப் போயிடப் போறானுங்கோ.