Sunday, August 29, 2010

என் தோழன்

"யாரோ நாலு பேரு வீட்டுக்கு வந்தாங்க. என்னையும் அப்பாவையும் நீ எங்கன்னு கேட்டு மிரட்டினாங்க. தாத்தாவ அடிக்கப் போனாங்க. நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. எங்களுக்கு ஒன்னுமே புரியல என்னடா இதெல்லாம்? ஏதாவது லவ் விவகாரமா!! 'ஒரு காதல் பிரயாணம்'னு கதை எழுதி காட்டினப்பவே உன்ன விசாரிச்சிருக்கனும். இப்ப பாரு.. வம்ப வாங்கிட்டு வந்திருக்க.." என்று அவன் அம்மா போனில் பேசிக்கொண்டே இருக்க, பதில் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்தான் ரகு.
 
'நம்மள ஏன் தேடனும்? ம்ம்.. இதுவும் நல்லதுக்கு தான். சீக்கிரம் வீட்டுல கல்யாண பேச்ச ஆரம்பிப்பாங்க' என்று ரகு நினைக்கும் பொழுதே பின்னால் நெருக்கத்தில் யாரோ அழைப்பது கேட்டது. யார் என பார்க்க திரும்பினான் ரகு.. 

நங்.. அதுவும் இரண்டு.

ரகு கண்ணை திறந்த பொழுது, அவனது நண்பன் தினேஷ் அருகில் அமர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் பார்த்த பொழுது, மருத்துவமனை என தெரிந்தது

"என்னடா நடந்துச்சு?" என்று முனகினான் ரகு. அவன் தலையில் இருந்த கட்டு பாரத்தை தந்தது

"இரு.. ஆப்பிள் சாப்ட்டு சொல்றேன்."

"யார் வாங்கிட்டு வந்தா?"

"நான் தான்."

"நீயா!!" என்று அதிர்ந்தான் ரகு.

"என்னடா நீயான்னு வாய பொளக்குற!! ஏதோ உனக்கு அடி பட்டுடிச்சினே  

வாங்கிட்டு வந்தா.. கிண்டலா இருக்கா உனக்கு?"

"யாருக்கு வாங்கிட்டு வந்த?" என்று மீண்டும் கேட்டான் ரகு.

"ம்ம்.. உனக்கு தான்" என்று ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டே சொன்னான் தினேஷ்

"அப்புறம் ஏன்டா நீயே சாப்டுற?"

"உனக்கென்ன நீ ஜாலியா படுத்துக்கிட்டு தான இருக்க!! நான் தான் அடிக்கடி நாலு மாடி ஏறி இறங்குறேன். தெம்பு வேணாமா?"

"என்னது.. ஜாலியாவா? ஷ்ஷ்பா. ம்ம்.. சரி என்ன நடந்துச்சு?  சொல்லு" என்று கேட்டான் ரகு.

"உனக்கு ஒன்னுமே தெரியலடா!! முதல்ல முழிப்பு வந்தவுடனே, 'நான் எங்க இருக்கிறேன்?' என்று நீ கேட்கனும். அப்புறமா.. நான் தான் உன்ன "என்ன நடந்துச்சுன்னு" கேட்கனும். எல்லாம் உல்டாவா பண்ற. அடிபட்டதுல ஏதோ ஆயிடுச்சோ!!" என்று தொண்டையை சரி செய்துக் கொண்டு, "டாக்டர்" என்று திரும்பி ரகசியமாக கத்தினான்.

"டாய். நல்லா தான்டா இருக்கேன். ஆமா இப்ப நீ என்ன பண்ண?"

"டாக்டர கூப்பிட்டேன்."

"எனக்கே கேட்கலையேடா!! எப்படி டாக்டருக்கு கேட்டிருக்கும்?"

"அதுக்கு நான் என்ன பண்ண! ஹாஸ்பிட்டல் ரூல்ஸ் தெரியுமா?? சத்தம் போட்டு பேசக் கூடாது. பேஷன்ட்சுக்கு டிஸ்டர்ப் ஆகும். அப்புறம் இங்க மதார்னு ஒரு நர்ஸ் இருக்காங்க. சத்தம் போட்டா வந்து திட்டுவாங்க."

ரகுவால் பொறுக்க முடியவில்லை. 'இப்படி இவன்கிட்ட வந்து  
சிக்கிட்டேனே!!' என்று கண்ணை மூடினான்.

"ஐய்யய்யோ.. திரும்பவும் மயங்கிட்டியா?" என்று பதறினான் தினேஷ்.

ரகு கண்களை திறந்தான்.

"முழிச்சிட்டியா? எங்க ஓவர்- ஆக்டிங் பண்றியோன்னு பார்த்தேன். சின்ன அடி தானாம். இரண்டு நாளுல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்க. அதனால தான் உங்க வீட்டுல கூட சொல்லல." 

இவனிடம் வாய் கொடுத்து சிக்கி கொள்ளக் கூடாதென ரகு மெளனமாக இருந்தான் ஆனால்  முடியவில்லை,

என்ன யார் டா  கொண்டு வந்து அட்மிட் பண்ணது ?? 

அதுவா ஜானகிராமனும் அவரோட நண்பர் கலாநேசனும் அந்த வழியா   போன  போது உன்ன பாத்திருக்காங்க. உடனே  உன்னோட  மொபைல்  எடுத்து  எனக்கு  தகவல்  சொன்னாங்க

"ச்சே,போயும்  போயும்  உனக்கு  பண்ணி இருக்காங்க பாரு."

"கடைசியா நான் தான் உனக்கு ஃபோன் பண்ணி இருந்தேன். அதான் எனக்கு ஃபோன் வந்துச்சு. சரி.. பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ண சொன்னா.. ஃபோலீஸ் கேசாயிடும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஆட்டோவுல நீ விழுந்து கிடந்த இடத்துக்கு போனேன். தண்ணிலாம் தெளிச்சு பார்த்தேன். நீ எழுந்திருக்கவே இல்ல. ஹாஸ்பிட்டலுக்கு போலாம்னா போலீஸ் பயம். டாஸ்மாக்ல நிறுத்தி சரக்கு வாங்கி உன் வாயில ஊத்தி ரூமுக்கு கூட்டிட்டு போனோம். உன்ன பாத்ரூமுக்கு கை தாங்கலா கூட்டிட்டு போயிட்டு, உன்ன செங்குத்த நிக்க வச்சு கைய எடுத்துட்டேன். நீ தொபக்கடீர்னு விழுந்த!! குடிச்சுட்டு பாத்ரூம்ல விழுந்துட்டான்னு சொல்லி அட்மிட் பண்ணிட்டேன்கையில இருக்கிற சிராய்ப்ப பார்த்துட்டு டாக்டரும் நம்பிட்டாரு.எப்பூடி??"

"த்தூ!! என் தலையெழுத்து.. கடைசியா உங்கிட்ட பேசி தொலைச்சுட்டேன்" என்று சொல்லும் பொழுதே செவிலியர் மதார் உள்ளே வந்தார்.

"பேஷன்ட்டுக்கு முழிப்பு வந்துடுச்சுன்னு.. ஏன் வந்து சொல்லல?" என்று கோபமாக தினேஷை கேட்டார் மதார்.

 "நான் நீங்க சொன்ன மாதிரியே சத்தம் போடாம டாக்டர கூப்பிட்டேன். உங்களுக்கு தான் கேட்கல போல" என்றான் தினேஷ்.

"சரியான மண்ணுய்யா நீ!! வேற நல்ல ப்ரென்ட்டே கிடைக்கலியா உங்களுக்கு?" என்று கேட்டு விட்டு வெளியில் போனார் மதார். ரகு புன்னகைத்தான்.

"என்னடா இளிப்பு வேண்டி கிடக்கு உனக்கு? என்ன பத்தி சொன்னதும் உனக்கு ரத்தம் கொதிச்சு இருக்க வேண்டாம்!?!"

 "இவ்ளோ நேரம் கொதிச்சுக்கிட்டு தான் இருந்துச்சு. இப்ப தான் திருப்தியா இருக்கு!!"

 "எப்படி இருக்கு ரகு?" என்று கேட்டு கொண்டே உள்ள வந்தார் மருத்துவர் சாந்தி.

 அருகில் வந்ததும் தன் கையில் இருக்கும் பேனாவால் ரகுவின் கட்டை அழுத்தி பார்த்த்வர், "வலி இருக்கா?" என மீண்டும் கேட்டார் சாந்தி.
"வலி இல்ல. ஆனா இந்த கட்டு தான் கொஞ்சம் உறுத்துது, சொறியனும் போல இருக்கு"

"நோ நோ..அதெல்லாம் கூடாது..நாளைக்கு கட்டை எடுத்துடலாம். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. அப்புறம் இனிமே நிதானம் தவர்ற மாதிரி டிரிங்ஸ் எடுத்துக்காதீங்க" என்று புன்னகைத்தார் சாந்தி. ரகு தினேஷை திரும்பி முறைத்தான்.

"விடுங்க டாக்டர். இனிமே இவன் நிறைய குடிக்காம நான் பாத்துக்குறேன்" என்றான் தினேஷ். (சமாளிக்கிறாராமாம்.)

"குட். இப்படி தான் நான் ஒரு தடவ அர்ஜென்ட்டினாவுக்கு கான்ஃபிரான்சுக்கு போயிருக்கிறப்ப ஏழு வயசு குழந்தை ரோட்ல விளையாடிட்டி இருக்கிறப்பவே விழுந்துடுச்சு. நல்ல வேள நான் அப்ப கார்ல போயிட்டு இருந்தேன். பார்த்துட்டு உடனே ஃபர்ஸ்ட்- எயிட் கொடுத்துட்டு விசாரிச்சா.. தாகமா இருக்குன்னு விளையாட்டு நடுவுல வீட்டுக்குள்ள ஓடி அவங்க அப்ப மிச்சம் வச்ச சாம்ப்யின் குடிச்சுட்டான்" என்றார் மருத்துவர் சாந்தி.

"இதெல்லாம் இப்போ ஏன் இவங்க சொல்லுறாங்க??" என்று தினேஷ் என்னிகொண்டிருக்கும் போதே,

"சரியா சொன்னீங்க டாக்டர். இப்படி தான் எங்க ஊர்ல ஒரு தடவ.. எங்க வீட்டு எதிர்த்த வீட்டு அண்ணன மாடு முட்டிடுச்சு.அலட்சியம் தான் காரணம். அப்புறம் நான் தான் அந்த மாட்ட கட்டி போட்டுட்டு, அவருக்கு மருந்து போட்டேன்" என்றார் செவலியர் மதார்.

"இவன் கூட நல்லா கத எழுதுவானுங்க" என்று தினேஷ் ரகுவை காட்டி சொன்னான். இருவரும் தினேஷை முறைத்தனர்.

"டாக்டர்.. எனக்கு விசிட்டர் எல்லாம் வேணாம். நான் தனியா மேனேஜ பண்ணிப்பேன்" என்றான் ரகு.

"அதெல்லாம் நான் போக மாட்டேன்" என்றான் தினேஷ் அவசரமாக.

"அத நீங்களே பேசி முடிவு பண்ணிக்குங்க. தூக்கம் வரலன்னா சொல்லுங்க. வந்து இஞ்செக்ஷன் பண்றேன்" என்றார் சாந்தி.

"இவங்க எங்க இருந்து வந்து சொல்லப் போறாங்க. நான் நடுவுல வந்து பார்த்துட்டு பார்த்துட்டு கூப்பிடுறேன் டாக்டர்" என்றார் மதார்.

மருத்துவரும், செவிலியரும் வெளியில் சென்றவுடன், "ம்ம்.. ஹாஸ்பிட்டலே இவங்க தலைல இருக்கிற மாதிரி ஒரு நினைப்பு. சரி விடு. யாரு உன்ன அடிச்சா!! அத சொல்லு முதல்ல" என்றான் தினேஷ்.

ரகு சிறிது நேரம் யோசித்து விட்டு, "தெரியல" என்றான்.

"இத நீ யோசிக்கமாலே சொல்லி இருக்கலாம்."

"அடிக்கிறதுக்கு முன்னாடி.. யாரோ யாரையோ தோழர்னு கூப்பிடுற மாதிரி இருந்துச்சு. யார்னு பார்க்க திரும்பினேன். அடிச்சுட்டாங்க."

"ம்ம்" என்று தினேஷும் யோசிக்க ஆரம்பித்தான்.

"கடைசியா என்றும் இனிய தமிழ் உணர்வுன்னு ஏதோ கேட்டுச்சு. அப்புறம் கூட என்னமோ சொன்னாங்க" என்று நெற்றியை தட்டி நினைவுகளை வெளியில் தள்ள முயன்றுக் கொண்டிருந்தான் ரகு.

"எனக்கு தெரிஞ்சுப் போச்சு. உன்னை அடிச்சது இரும்புத் திரை அரவிந்த்தும், பிதற்றல்கள் முகிலனும் தான்."

"அவங்க ஏன்டா என்னை அடிக்கனும்?"

"நீ கதை எழுதுறங்கிற பேர்ல கொடுமை பண்ற இல்ல. சிக்னல்ல நின்னேன்... பைக்ல போனேன்னு. அதான் போட்டுட்டாங்க."

"அதுக்கு ஏன்டா அடிக்கனும்?"

"ச்சே போடா. உனக்கு எல்லாம் விளக்கமாவா சொல்லுவாங்க.நீ யாரு.. மொக்கை போடுறவன். மொக்கைகளை பதிவுலகில் இருந்து நீக்கிட்டா.. நாடு உருப்படும் இல்ல?"

"உருப்படும்?"

"தெர்ல. கொஞ்சம் சந்தேகம் தான் !!"

ரகு,"எனக்கு ஞாபகம் வந்துடுச்சு. 'இனிமே மொக்க போடுவியா.. போடுவியான்னு கேட்டு கேட்டு அடிச்சாங்க'. ஆனா என்னால எழுதாம இருக்க முடியாதே!! எனக்கு இப்ப நிறைய ஃபேன்ஸ் உருவாகிட்டாங்க" என்றான்.

"அப்ப ஒரே வழி தான். புரட்சி."

"நோ!!"

"புரட்சி பத்தி எழுது."

"எனக்கு தெரியாதே!!"
"அட நீ வேற,ப்ராஜெக்ட் மேனேஜர் பத்தி எழுதுறப்ப முதலாளித்துவம்னு சேர்த்துக்க. சிக்னல நிக்கிற போலீஸ்காரர பத்தி எழுதுறப்ப ஆதிக்க சக்தியின் வன்முறை அராஜகம்னு போடு. ப்ரென்ட்ஸ் பத்தி எழுதனும்னா.. தோழர்களின் ஒற்றுமை ஓங்குக அப்படின்னு எழுதிடு."

"அவ்ளோ தானா? ரொம்ப சுலபமா இருக்கு."

"அவ்ள தான்டா. நடு நடுவுல.. ஆணாதிக்கம், பார்ப்பீனியம், ரஷ்யா, மார்க்ஸ் அப்படின்னு கூட சேர்த்துக்கோ" என்று சிரித்தான் தினேஷ்.

"எனக்கு என்னமோ நீ சிரிக்கிறத பார்த்தா.. கொஞ்சம் டவுட்டாவே இருக்கு, இதுக்கு பின்னாடி சதி திட்டம் ஒன்னும் இல்லையே??" என்றான் ரகு.

"ச்சே.. நானே எப்பவாவது தான் சீரியசா பேசுறேன். நம்ப மாட்டேங்கிறியே!!" என்று வருந்தினான் தினேஷ்.

"அட.. உங்கள போய் நான் நம்பாம இருப்பேனா தோழரே!!"

"ஆ!!"
 
டிஸ்கி:
1. புனைவுன்னு நெனைச்சி தான்  நான் எழுதி இருக்கேன், நீங்களும் அப்படியே நெனைச்சி படிக்கணும்.
2. இந்த பதிவு,ஒரு வாரத்திற்கு முன்பே யோசித்து நிதானமாக எழுதப்பட்ட ஒன்று இப்பொழுது நிலவும் சூழ்நிலைக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
3. முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வை மட்டுமே கொண்டு எழுதப்பட்ட பதிவு இது.
4. இந்த பதிவில்  இடம்பெற்றுள்ள பதிவர்கள் அனைவரும் எனது நண்பர்கள் என்கிற ஒரு உரிமையில் தான் அவர்கள் பெயரை உபயோகித்துள்ளேன். மனதிற்கு சங்கடம் தரும்படியாக ஏதேனும் பதிவில் இருந்தால் என்னை மன்னிக்கவும்
5.படிச்சிட்டு சிரிங்க,சிந்திக்காதீங்க

6 comments:

ஜானகிராமன் said...

அப்புறம் எப்ப ஹாஸ்பெடலல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனீங்க?

கலாநேசன் said...

இப்போ எப்படி இருக்கு....
Get well soon.

கலாநேசன் said...

பாத்து எழுதுங்க. இப்படியே மொக்கை போட்டால் இன்னும் அடி விழலாம்.....

வயதான வாலிபன் said...

அட அடா!
அடிக்கிறது தெரிஞ்சிருந்தா நானும் வந்து .......

சாம்ராஜ்ய ப்ரியன் said...

ஒன்னு தெரியுதுடே!!

நீ மொக்க போடுறேன்னு.. அனைவரும் ஏக மனதா ஒப்புக் கொள்கிறார்கள்.

பார்த்துடே. எப்படா சிக்குவான்னு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக்கு,
கதையில் வரும் அப்பாவி தினேஷ்.

இரகுராமன் said...

@ஜானகிராமன் - உங்களுக்கு கொடி சரியா இருந்துச்சா அண்ணே

@ கலாநேசன் - நீங்களே என்ன அடிக்க முந்திகிட்டு வந்து நிப்பீங்க போல. ரைட்டு ..

@வயதான வாலிபன் - //அடிக்கிறது தெரிஞ்சிருந்தா நானும் வந்து...//

உங்களுக்கு வயசானதால கூப்பிடல போல.. எப்போ ப்ரீயா இருக்கீங்களோ சொல்லுங்க நானே வீட்டுக்கு வந்து வாங்கிக்குறேன் :)

@சாம்ராஜ்ய ப்ரியன் - நீ இருக்கும்போது எனக்கென்ன நண்பா பயம்..