Thursday, August 12, 2010

சுயம்வரம் - பகுதி 4

முதல் பகுதி.. 

இரண்டாம் பகுதி..

மூன்றாம் பகுதி  

 

வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.

1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?

2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?

3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?

4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?

5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?

'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். 

அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,

"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ்.

ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்"
என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்து என்று கத்தினான்.

"மச்சி.. இதோ கத்துதே இது யாருன்னு தெரியுமா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இவன் தான்டா என்னை இன்டர்வியூ பண்ணான். எல்லாரும் ரிசல்ட்ட மெயில் பண்றேன் என்று தான சொல்லுவாங்க. ஆனா இவன் 'கெட் ஒவுட் யூ இடியட்' என்று கத்தினான். 
அப்பவே இவனுக்கு நாப்பது வயசு இருக்கும். காதோரமா 'டை ஊத்துது பாரேன். தாத்தா இன்டர்வியூக்கு வந்ததே தப்பு. சவுன்ட பாரேன். நீ வேணா பாரு இவனுக்கு கல்யாணமே ஆகாது" என்றான் அருண்.

பெரியவர் புன்னகைத்தவாறே, "வெளியில் போக வழி அந்த பக்கம்" என்றார்.
அருணால் சபிக்கப்பட்டவன் தொடர் ஆங்கில வசையின் சுருதியை குறைத்துக் கொண்டே வெளியில் போனான். அவனை தொடர்ந்து மேலும் சிலர் வெளியில் சென்றனர்.

'எப்பா போய் தொலைங்கடா.. காத்து வரட்டும்' என்று நினைத்துக் கொண்டான் ராஜேஷ்.

 எல்லாரும் சென்றதும், 'ச்சே.. அவ்ளோ தானா?' என்று திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் அந்த 'டை ஆசாமி அறைக்கு வந்து அந்த பெரியவரைப் பார்த்து,  
"ஐ வில் ஃபைல் எ கேஸ் ஆன் யூ கைஸ் லீகலி" என்று சொல்லி விட்டு சென்றான். மீண்டும் சிலர் வெளியில் சென்றார்கள்.

ராஜேஷ் மகிழ்ச்சியாக அருணை பார்த்தான். ஆனால் அருண் வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான். 

'அடப்பாவி!! மாங்கு.. மாங்குன்னு எழுதுறான். முதல் வேளையா நேஹாவுக்கு போன் பண்ணி சொல்லனும்' என்று எண்ணியவாறே வினாத்தாளை மீண்டும் பார்த்தான்.

'எதுக்கு இந்த அஞ்சு கேள்விக்கு.. ஒரு மணி நேரம் கொடுத்திருக்காங்க? ஒருவேள யோசிக்கனுமோ!!நேத்து படிச்சிருந்தா எல்லாம் வேஸ்ட் தான் போல!!' என்று ராஜேஷ் வருத்தப்படும் பொழுது, வினாத் தாளில் இருந்து அவனது தந்தை பத்மநாபன் இவனை பார்த்து கண்ணடித்து கடுப்பேற்றினார். ராஜேஷ் பெரு மூச்சு விட்டவாறே வினாக்களை மீண்டும் படித்தான்.

'நான் சின்ன வயசுல லாலி பாப் சாப்பிட்டிருக்கேன்?' என்று தன்னை தானே கேள்விக் கேட்டுக் கொண்டான். 'இது வேலைக்கு ஆகாது போல'  கேள்வியை விட பதில் மொக்கையாக எழுதலாம் என தீர்மானித்துக் கொண்டான்.

1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?
     --- அன்னிக்கு என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கேனோ அந்த நிற லாலி-பாப் தான் பிடிக்கும்.

2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?
     --- அமெரிக்கா எப்படி இருக்கு?

3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?
     --- கூன் விழுந்தா தான் நிமிர வைக்கனும். விவசாயம் எப்பவும் போல் தான் இருக்கு. ஆனால் விவசாயிகள் நிலைமை தான் கூன் விழுந்தது போல்  உள்ளது. இயற்கை வேளாண்மையை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, குறிப்பாக இளம் விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம். அல்லது விவசாயிகளுக்கு எல்லாம் ஐ.டி. பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி வச்சா கூட ஊக்கம் தானாக வரும்.

4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?
     --- ஹி..ஹி.. அதை நான் பொண்ணுங்க காதில் தான் சொல்லுவேன்.


5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?
      --- இது அந்த பொண்ணுக்கு வர வேண்டிய கவலை.

எழுதிய பதில்களை மீண்டும் படித்துப் பார்த்தான் ராஜேஷ். மீதம் அரை மணி நேரம் இருந்தது.

அருண் இன்னும் எழுதிக் கொண்டிருந்தான். அறையில் இருந்தவர்கள் சிலர் யோசித்துக் கொண்டும், சிலர் எழுதிக் கொண்டும் இருந்தனர். பெரியவர் ராஜேஷையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. ராஜேஷ் எழுந்து விடைத் தாளை கொடுத்தான். அவர் வினாத் தாளையும் சேர்த்து வாங்கிக் கொண்டார். 

'வெளியில் போய்,இந்த கொஸ்டின் பேப்பர மறுபடியும் யூஸ் பண்ணுவாங்களோ?' என்று யோசித்துக் கொண்டான் ராஜேஷ். 

அரை மணி நேரம் கழித்து அருணும், மற்றவர்களும் வந்தனர்.

"ச்சே.. டைம்மே பத்தலடா?" என்று நொந்துக் கொண்டான் அருண்.

"என்ன நீ கொலக்காரனா ஆக்காமா விட மாட்டேன்னு நினைக்கிறேன். சரி எப்ப ரிசல்ட்டாம்?" என்று கேட்டான் ராஜேஷ்.

"இன்னும் ஒரு மணி நேரத்துல சொல்வாங்களாம். அந்த பெருசு சொல்லுச்சு. அப்புறம் இந்த ஹோட்டலுல எல்லாருக்கும் மதிய சாப்பாடு அரேஞ்சு பண்ணியிருக்காங்களாம். வா."

இருவரும் ஹோட்டலில் ஒரு டேபிளில் இடம் பிடித்தனர்.

மேசை அடியில் செல்லிடப்பேசி எடுத்து, நேஹாவின் எண்ணிற்கு தொடர்புக் கொள்ள முயன்றுக் கோன்டிருந்தான் ராஜேஷ்.

மறுபுறம் அருணிடம்,

"சரி இவ்ளோ நேரம் நீ அப்படி என்ன எழுதி கிழிச்ச?" என்றான். 

முதல் கொஸ்டின்க்கு பிங்க். ஏன்னா அது "கேர்ளி (girly) கலர்". ப்ரீத்தி ஜிந்தா கூட ஒரு விளம்பரத்துல, 'பிங்க்கி கிட்ட வச்சுக்காத'ன்னு சொல்வாங்களே.

அப்புறம் அடுத்த கொஸ்டின். அமெரிக்கா எப்பவுமே அப்படி தான்.

மூணாவது,விவச்சாயத்திற்கு  திரும்பி ஒரு பசுமைப் புரட்சி வேண்டும்.

நெக்ஸ்ட், ரகசியம் ஒன்று இருப்பதை 

கடைசியா, பிடிக்கலன்னா ஒரு கப் காஃபி சாப்ட்டு, 'பில் பே பண்ணிடுங்க' என்று சொல்லிட்டு கை குலுக்கிட்டு வந்துடுவேன்."

"இதையா மாங்கு.. மாங்குன்னு எழுதின?"

"உங்கிட்ட சிறுசா சொன்னதா அங்க பெருசா எழுதினேன்" என்று சிரித்தான் அருண்.

"ம்ம்.. நீ பண்றது மட்டும் நேஹாவுக்கு தெரிஞ்சா?"


"தெரிஞ்சா என்னடா பண்ணிடுவா?"


"அத.. நீயே கேளேன். லைன்ல தான் இருக்கா" என்று ராஜேஷ் தனது செல்போனை அருணிடம் நீட்டினான்.

-அடுத்த பாகத்தில் முடியும்.

3 comments:

Unknown said...

ஏன் இவ்வளவு தாமதம்??

இரகுராமன் said...

adutha paguthi seekirama potuduren.. thaamathathirkku mannikavum :(

மதார் said...

nice story , gud flow waiting for the climax .