Wednesday, August 18, 2010

சுயம்வரம் - பகுதி 5

 

முதல் பகுதி.. 

இரண்டாம் பகுதி..

மூன்றாம் பகுதி


உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.

திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.

வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,

"மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட." என்றான்

"நீ?"

"என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு."

"எப்படி சொல்ற?"

"ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க."

"நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை.

"டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?"

"டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல ஒருத்தன செலக்ட் ஆகி இருந்தா கூட பரவாயில்ல.ஆனா நூறு பேர்ல ரெண்டே பேரு தான்னு தெரிஞ்சவுடன் எவ்ளோ நெர்வசா இருக்கு தெரியுமா?"

"அடப் போடா.. நீ எப்படி கேவலமா செகன்ட் ரவுன்ட்ல தோத்தாலும்.. உன்ன ரன்னர்னு சொல்வாங்க."

ராஜேஷ் சிரித்துக் கொண்டே, "ஃபீல் பண்ணாதடா" என்று கண்ணடித்தான்.

யாரோ ஒரு யுவதி ராஜேஷின் பெயரை அழைத்தாள். அவன் ராஜேஷிடம் சில தாள்களை தந்து, "உள்ள கூப்பிடுறாங்கா" என்றாள்.

"ட்ரீட் ஞாபகம் இருக்கட்டும். ஆல் தி பெஸ்ட்" என்று கத்தினான் அருண்.

ராஜேஷ் அருணை திரும்பி பார்த்து புன்னகைத்தாலும் அவன் முகத்தில் வியர்வை முத்துக்கள் அவன் அனுமதியின்றி குளிரூட்டப்பட்ட அறையில் தோன்றி அவனது பதற்றத்தை அம்பலப்படுத்தியது

அந்த பெண் ஒரு அறையை காண்பித்து, "உள்ள தான் உங்களுக்கு இன்டர்வியூ சார்" என்றாள்.

இன்டர்வியூ ?? என்று கேள்வி எழுப்பினான்  ஆச்சர்யமாக.

ஆமாம் சார், இரண்டு பேர் தான் ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்கீங்க அதனால தான் குரூப் டிஸ்கஷன் கான்செல் பண்ணியாச்சி.

ஆங்கிலத்தில். அறையை பார்த்தவாறே, ".கே. தாங்க்ஸ்" என்றான்.

அந்த அறைக்குள் நுழையும் முன் கையில் இருந்த தாள்களை திருப்பி பார்த்தான். அதில் அந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் இருந்தது.

1.
சிறு வயதில் வண்ணங்கள் பற்றிய பிரக்ஞை இருக்காது. ஆக உடனிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி கையில் இருக்கும் லாலி பாப்பின் நிறம் தான் நம் கையில் இருப்பதை விட கவர்ச்சியாக தோன்றும்.

2.
அமெரிக்கா கண்டுபிடித்த புதிதில் ஐரோப்பிய துரைமார்கள் பெருமளவில் குடியேறினார்கள். அதனால் ஆதியிலிருந்தே அவர்களுக்கு குருதியில் முதலாளித்துவ மனப்பான்மை துளிர் விட்டு இப்பொழுது விருட்சமாகி விட்டது. ஆகஸ்ட் 6, 1945 ஜப்பானில் அணு குண்டு வீசியதில் இருந்து, அவர்களுக்கு உலகிலேயே தாம் தான் பெரிய வல்லரசு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டது. போர் வெறி உச்சத்திற்கு போய் விட்டது. அன்றிலிருந்து அவர்கள் அப்படி தான்.

3.
இந்திய விவசாயத்தின் தற்போதைய பிரச்சனை உலகளாவியது. புவி வெப்ப மையத்தால் சீரற்ற மழை பொழிகிறது. வானம் பார்த்த நிலங்கள் அதிகரிப்பது தான் இந்த நிலைமைக்கு காரணம். 'நதி நீர் இணைப்பு' தான் இதற்கு ஒரே தீர்வு.

4.
பெண்களிடம் ரகசியம் சொல்லக் கூடாது என்ற சிந்தனையே ஆணாதிக்கம்

5.
பிடிக்காம போவதற்கு என்ன காரணம் இருக்க முடியும். என்ன தான்.. ஒருவரை விழுந்து விழுந்து காதலித்தாலும், நம்மால் மற்றவரை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாது. புரிந்து கொள்ளனும் என்ற அவசியமும் இல்லை. திருமணம் என்பது இருவரின் மன ஒப்புதல் சடங்கு. விட்டு கொடுத்து அரவணைத்தல் தான் அதன் அடிப்படை. முதலிரவு அன்று வரை கூட முகத்தை பார்த்திராத தம்பதிகள் தான் நமது மூதாதையர்கள்.

'அப்ப ஒரு கேள்விக்கு கூட.. பதிலுக்கு பக்கத்துல கூட போகாலயா? ஏன் அப்புறம் என்னை வர சொல்லியிருக்காங்க? கூப்பிட்டு வச்சு திட்டுவாங்களோ!!' என்ற பயத்துடன் கதவை தட்டினான். எந்த சத்தமும் இல்லாததால் ராஜேஷே கதவை தள்ளி திறந்தான். அறையில் எவரும் இல்லை.

'
மீ தி ஃபர்ஸ்ட்டா?'

ராஜேஷிற்கு முன் பக்க இருக்கிற கதவை திறந்துக் கொண்டு ஒருவர் வந்தார். கரு கரு வென்று இருந்த முடி தான் முதலில் கண்ணில் பட்டது. ராஜேஷை விட இரண்டு மூன்று வயது மூத்தவராக இருப்பார் என்று ராஜேஷ் யூகித்தான். பொண்ணுக்கு அண்ணன் முறை வேணும் போல என்று எடைப் போட்டான் ராஜேஷ்.

ராஜேஷ் எழுந்து நின்று, அவர் அருகில் வந்ததும் கையை நீட்டி குலுக்கி, " ஆம் ராஜேஷ்" என்றான்.

"
சக்திவேல்."

ராஜேஷ் மேசை மீது வைத்திருந்த தாள் பறந்து தரையில் விழ, அதை குனிந்து எடுத்து அந்த தாளில் இருக்கும் பதிலை வேகமாக மனப்பாடம் செய்ய முடியுமா என பார்த்தான்.

சக்திவேல் "உட்காரலாமா?" என்று கேட்க, ".. ஷ்யூர்" என்று இருவரும் அம்ர்ந்தனர்.

ராஜேஷ் சில நொடிகள் மெளனத்தை பொறுக்க முடியாமல், "அதெப்படி சிறுவர்களுக்கு.. நிறங்கள் பற்றிய பிரக்ஞை இருக்காதுன்னு சொல்ல முடியும்?" என்று கேட்டான்.

"
சிறுவர்களுக்கு அந்த நொடி தான் வாழ்க்கை. உடையோட நிறத்தை பொறுத்தி எல்லாம் லாலி பாப் சாப்பிட மாட்டாங்க. ஆனா எல்லா சிறுவர்களுக்கும் தன் கையில் சிக்காத பொருள் மேல் தான் ஆர்வம் அதிகமாகும்."

"அப்படியே பார்த்தாலும்.. தனியாக இருக்கும் சிறுவர்களுக்கு இது பொருந்தாதே!! லாலி பாப் சாப்பிடும் சிறுவர்கள் எல்லாம் எப்பவும் இருவராகவோ, கூட்டமாகவோ இருக்க மாட்டாங்க தானே?" என்று கேட்டான் ராஜேஷ்.

"
கேள்வி கேட்ட காலத்திற்கு தகுந்தவாறான பதில் அது. கிராமத்தில் கூட கூட்டு குடும்பம் குலைந்து, ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொள்ளும் விழிப்புணர்வு வந்து விட்டதே!!" என்றார் சக்திவேல்.

ராஜேஷிற்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் அமைதியாக இருந்தான்.

தன் கையில் இருக்கும் தாளை ஒருமுறை பார்த்தான். சக்திவேலும் அவர் கையில் இருந்த தாளை பார்த்தார்.

"
இரண்டாம் கேள்வியின் பொருள் என்ன?" என்று கேட்டார் சக்திவேல்.

"
அது மொட்டையான கேள்வி. நம் பார்வையை பொறுத்து கேள்வியின் கோணம் மாறும்."

"
அமெரிக்காவை பற்றிய பார்வை உலகம் முழுவதும் ஒரே மாதிரி தான் இருக்கு. குறிப்பா வளைகுடா மற்றும் ஆசிய நாடுகளில். இதில் கோணம் எங்கிருந்து வந்தது?"

"
அமெரிக்கவில் இருக்கும் கட்டற்ற சுதந்திரம் தரும் கவர்ச்சி தான் முதலில் அனைவரின் ஞாபகத்திற்கு வரும். போர் என்பது பதவியில் இருப்பவர்கள் பண்ணும் அரசியல். அதற்கு நாடு என்ன செய்யும்? அதுவும் இப்ப ஐரோப்ப வம்சத்தினர் ஜனாதிபதியாக இல்லை. கென்ய கறுப்பின வம்சத்தினர் ஒருவர் தான் ஜனாதிபதியாக உள்ளார்."

"
அவர் பதவிக்கு வந்ததால் உலகத்திற்கு என்ன பயன்?"

"
அது அல்ல நமது விவாதம்" என்றான் ராஜேஷ்.

"
சரி தான். ஆனால் இவருக்கு முன்னவர்கள் புகுத்திய அரசியலை தான் இவரும் கடைப்பிடித்து ஆக வேண்டும். இவர்களுக்கு முன்னால் பதவியில் இருந்தவர்கள் யார்? உலகம் முழுவதுமே அரசியல் ஒரு சாக்கடை."

'
போயா  வெண்ண' என்று நினைத்துக் கொண்டு, "அப்படி பட்ட சாக்கடையில் இருந்து இந்திய விவசாயத்திற்கு தீர்வு காண நினைப்பது விவேகமா?" என்று கேட்டான் ராஜேஷ்.

"
சாரி. புரியல?" என்றார் சக்திவேல்.

"
நதி நீர் இணைப்பு.. ப்ராக்டிகலா சாத்தியமா? சாத்தியம் தான். ஆனா அதற்கு எல்லா மாநில அரசியல்வாதிங்களும் ஒத்துழைப்பு தருவாங்க என நினைக்கிறீங்களா!!"

"
தரனும். தந்து தான் ஆகனும். அதுக்காக .டி. பொண்ணுங்கள விவசாயிங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா தீர்வு கிடைச்சுடுமா?" என்று சிரித்தார் சக்திவேல்.

கொஞ்சம் கடுப்பான ராஜேஷ்,

"கிடைக்கும். இப்ப இருக்கிற சுழ்நிலையில்.. விவசாயத்த யாரும் விரும்பறதில்லை. விவசாயத்தை மூலத் தொழிலா பண்றவங்களே பொண்ணை .டி. பையனுக்கு தர பாக்குறாங்க. விவசாயத்துல எதிர்காலம் இல்ல. வசதியான வாழ்க்கை பொண்ணுக்கு கிடைக்கனுங்கிற ஆசை தான் அதுக்கு காரணம். இந்த உளவியல் அச்சுறத்தலே விவசாயம் பக்கம் இளைஞர்களை திருப்பறதில்லை. அமெரிக்கா போர் வெறி கொண்ட நாடுன்னு யாரும் பாக்கிறதில்லை. தான் பார்த்தேயிராத அமெரிக்காவுல தான் பொண்ணு நல்லா இருப்பான்னு அமெரிக்க மாப்பிள்ளையை தேடுறாங்க. விவசாயிக்கே விவசாயி தெரியறதில்லையே!!" என்றான் சூடு குறையாமல்.

"
ஒரு விவசாயம் பண்ற இளைஞனுக்கு வர வேண்டிய கோபம் உங்களுக்கு வருதே.. நீங்க விவசாயியா சார்?" என்று சிரித்தார்.

"
இல்ல."

"
நீங்க ஏன் விவசாயம் பண்ணல?"

"
நிலம் இல்ல. எங்கப்பா காலம் முதல் பொழப்பு படிப்பு சம்பந்தமா தான் இருக்கு."

"
என்ன சொல்ல வர்றீங்க?"

"
விழிப்புணர்வு ஏற்படனும். .டி. பொண்ணுங்கள் விவசாயிக்கு தர பெற்றோர் முன் வரனும். மாற்றங்கள் சிறு பொறியில் தான் தொடங்குது. திசை மாறும் பருவத்தை கணித்து காலத்தற்கு தகுந்தாற் போல் பயிரிடனும். மழையே பெய்யாதுன்ற நிலைமை வர்றப்ப.. நீரே இல்லாம விளையக் கூடிய உணவுப் பொருட்களின் பரிணாமம் தோன்றும். அதற்கு நம்மல தயார் படுத்திக்கனும்."

"
எப்பவுமே புரட்சி கரமா பேசுறது சுலபம் சார். உங்களுக்கு நான் நிலம் குத்தகைக்கு தந்தா.. விவசாயம் பண்ணுவீங்களா?"

"
கண்டிப்பா பண்ணுவேன்."

"
ம்ம்" என்று நம்பாமல் தலையசைத்தார் சக்திவேல்.

"
நீங்க தர மாதிரி இருந்தா.. நான் இன்னைக்கே வேலைய விட்டுடுறேன்."

"
விவசாயத்த பத்தி உங்களுக்கு என்ன சார் தெரியும்?" என்று கேட்டார் சக்திவேல்.

"
அதென்ன ஏழு கடலுக்கு அப்புறம் ஒளிந்திருக்கிற ரகசியமா?" என்று சிரித்தான் ராஜேஷ்.

"
நான் அப்படி சொல்லல. சொல்லவும் மாட்டேன். ரகசியம் என்பது கிசுகிசு பாணி,இழி செயலா தான் எனக்கு தெரியுது."

"
இராணுவ ரகசியமும் கிசுகிசு தானா?" என்று கேட்டான் ராஜேஷ்.

"
இராணுவத்திற்குள் மட்டும் பாதுகாக்க பட வேண்டிய ஒரு செய்தி கசியும் பொழுது.. ரகசியம் என அது பெயரிடபடுகிறது. என்வரையில் எல்லாமே செய்தி தான். அதுவும் நம்முடன் பழகும் பெண்களிடம் ஒரு செய்தி சொல்ல கூடாதென்பது ஆணாதிக்கத்தின் உச்சம்."

"
ஆணாதிக்கம்னா என்ன?"

"
ஆணாதிக்கம்னா தெரியாதா? அட கடவுளே!!" என்று தலையில் கை வைத்த சக்திவேல், "நீங்க சிக்மன்ட் ப்ராயிட் படிச்சதில்லையா? உளவியல் பத்தியெல்லாம் பேசுறீங்க?" என்று கேட்டார்.

'
ஆகா.. வட போச்சா? இன்டர்வியூக்கு வந்து வாய கொடுத்து மாட்டிக்கிட்டேனே!!' என்று ஒருமாதிரி புன்னகைத்து மழுப்ப முயன்றான் ராஜேஷ்.

"
நீங்க தமிழ்ல ஒரு ப்ளாக் ஆரம்பியுங்க. ஆணாதிக்கம்னா என்னன்னு நீங்க வினவாமலே புரிய வைப்பாங்க."

'விவசாயம் போய் தமிழ் ப்ளாக் வந்துடுச்சா? அப்படி அதுல என்ன இருக்கும்!!' என்ற யோசனையில் இருந்த ராஜேஷை, "சாரி.. நான் உங்கள குழப்பிட்டனா?" என்று கேட்டார் சக்திவேல்.

"
அதெல்லாம் இல்ல!! கடைசி கேள்வியை பத்தி யோசிக்கிட்டு இருக்கேன்" என்றான் ராஜேஷ்.

"
அப்ப இன்னும் ஒரு கேள்வி தான் இருக்குன்னு சொல்றீங்களா?"

'
ஆகா!! என் வாய் சும்மா இருக்காது போல' என்று மிரண்டு, "அப்படி இல்ல சார்.. இதுவரைக்கும் வரிசையா வந்துடுச்சே!! அடுத்து அது தான" என்று புன்னகைத்தான் ராஜேஷ்.

"
யெஸ். யெஸ். பிடிக்கலன்னு மணப்பெண் எப்படி சொல்லுவாங்க. முதல் சுற்றுக்கு பார்த்து பார்த்து தானே ஆளை எடுத்தாங்க. பிடிக்கலைன்னா இங்க வந்தேயிருக்க முடியாதே!!"

"
சார். போட்டோவுல பாக்குறது வேற. நேர்ல பாக்குறதுங்கறது வேற. 'ஆப்ரேஷன் சக்சஸ்.. பேஷன்ட் ஃபெயிலியர்' மாதிரி தேர்வுல ஜெயிச்சாலும், பொண்ணுக்கு பிடிக்காம போச்சுன்னா?"

"
ஏன் பிடிக்கனும்? தகுதியானவனான்னு தெரிஞ்சா போதாதா? சுயம்வரம் அதுக்கு தான!! இல்லைன்னா.. ஆணழகன் போட்டி வைக்கலாமே!!"

'
ஷ்ஷ்ஷ்பா.. இனி இவன்கிட்ட பேசி புண்ணியமில்ல' என்று சிரித்து மட்டும் வைத்தான் ராஜேஷ். அப்பொழுது அறைக்குள் ஒரு சிவப்பு விளக்கு எரிந்து, மணியோசை வந்தது.

"
இன்டர்வியூ முடிஞ்சிடுச்சா?" என்று கேட்டார் சக்திவேல்.

'
அப்புறம் சினிமா தியேட்ட்ர்ல டிக்கெட் கொடுக்கிற பெல்லா இது!' என நினைத்து, "அப்படி தான் நினைக்கிறேன்" என்றான் ராஜேஷ்.

சில நொடிகள் மெளனத்திற்கு பிறகு, "அப்ப நான் போகலாமா?" என்று கேட்டார் சக்திவேல்.

ராஜேஷ் எழுந்து நின்று கை கொடுத்தான். சக்திவேல் கை குலுக்கி விட்டு வேகமாக வந்த வழியே வெளியேறினார்.

'
பாவம்.. அவசரம் போலிருக்கு' என்று ராஜேஷும் வெளியில் வந்தான்.

வெளியில் வந்ததும் அருணை பார்த்து, "வாடா போயிடலாம். ஊத்திக்கிச்சு" என்று கையில் இருந்த விடைத் தாளை கொடுத்தான் ராஜேஷ்.

அருண் அதை வேகமாக படித்து விட்டு, "இது ஃபர்ஸ்ட் ரவுன்ட் கொஸ்டின்டா. செகன்ட் ரவுன்ட்ல என்ன கேட்டாங்க?" என்று கேட்டான் அருண்.

"
அதையே தான்டா திருப்பி கேட்டாங்க."

"
வாழ பழ கதையால்ல இருக்கு. ஹி..ஹி.. நான் சொன்ன மாதிரியே நீ ரன்னர் தானா?"

ராஜேஷ் ஒன்றும் சொல்லவில்லை. ராஜேஷை உள்ளே அழைத்து சென்ற யுவதி மீண்டும் வந்தாள்.

"
தோ கிளம்பிடுறோம். நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எல்லாம் இவனே சொல்லிட்டான்" என்றான் அருண்.

யுவதி ஒன்றும் புரியாமல், "நீங்க ஏன் கிளம்பனும்?" என்று கேட்டாள்.

"
சார தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க உள்ள கூட்டிட்டு போனீங்க. அங்க இவர பன்ச்சர் பண்ணி அனுப்பிட்டாங்க. அதை ஒட்டறதுக்கு தான் போறோம்" என்று ராஜேஷை பார்த்து சிரித்தான் அருண்.

"
பேச்ச குறைடா" என்று அருண் தோளில் கை போட்டுக் கொண்ட ராஜேஷ் அவனையும் வாசல் பக்கமாக திருப்பி சோர்வாக நடக்கத் தொடங்கினான்.

"
நீங்க மணப்பையனா செலக்ட் ஆயிட்டீங்க" என்றாள்.

"
நானா?" என்று சந்தேகமாக கேட்டான் ராஜேஷ்.

"
நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன். உன்னையே போய் செலக்ட் பண்ணியிருக்குன்னா அந்த பொண்ணு எவ்ளோ பெரிய லூசா இருக்கும்?" என்று கேட்டான் அருண்.

"
எனக்கும் அதே டவுட் தான்" என்றான் ராஜேஷ் கண்ணத்தில் கை வைத்து யோசித்தவாறு.

"
நான் தான் அந்த லூசு." என்றது அந்த அழகிய பெண்ணின் குரல்

முற்றும்...

"இவன போய் எப்படிங்க செலக்ட் பண்ணீங்க? சரி அத விடுங்க.. என்னை ஏன் ஃபர்ஸ்ட் ரவுன்டிலேயே கழட்டி விட்டீங்க?" என்றான் அந்த பெண்ணை நோக்கி

"
டாய்.. ட்ரீட்ல கூடவா வாய் மூடாம பேசிட்டே இருப்ப."

"
நான் அதை சொல்ல ஆரம்பிச்சன்னா ஆறாவது பாகம் போட வேண்டிய சூழல் வந்துடும். அப்புறம் எல்லாரும்  திட்டுவாங்களே!!"  .

டிஸ்கி: சக்திவேல் மற்றும் ராஜேஷ் இருவரும் தான் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டவர்கள். இருவர் கையிலும் மற்றவர்கள் எழுதிய விடையை அச்சடித்து பதில்கள் என தலைப்பிட்டு கொடுத்து விட்டனர்.

முதல் கேள்விக்கு நிறத்தின் பெயர் எழுதிய 67 % பேரும் அப்படியே நிராகரிக்கப்பட்டனர். மீதமுள்ள 31 % பேரும் நான்கு கேள்விகளுக்கு அடிஷனல் ஷீட் எல்லாம் வாங்கி வளைத்து வளைத்து எழுதினர்.

தேர்வு எழுத வந்தவர்களில் சக்திவேல் மட்டும் படித்து விட்டு விவசாயம் பண்ணுபவர். அவரே விவசாய குடும்பங்களில் பெண் எடுக்கக் கூடாது என வீட்டில் உத்தரவு போட்டுள்ளார் (Source - Off the record by selection committee).

கொள்கை ஒன்று. பேச்சு ஒன்றாய் இருப்பதால் அவர் கடைசி சுற்றில் நிராகரிக்கப்பட்டார். மேலும் அரைகுறை கேள்விக்கு எதிர்மறையான பதிலை அலசி சொன்னது மற்றுமொரு காரணம்.

நாக்-அவுட் முறையில் இரண்டு கேள்விகளில் ராஜேஷ் சக்திவேலை மடக்கியதும் ஒரு காரணம்.

கதைப்படி  நாயகன்  தானே  நாயகியை  மணக்க  வேண்டும்  (இது மற்றுமொரு  காரணம்)

4 comments:

Unknown said...

'மீ தி ஃபர்ஸ்ட்டா?'

Unknown said...

சுபம்

இரகுராமன் said...

கலாநேசன் அண்ணா,பின்னூட்டமிட்டு என்னை ஒவ்வொரு பகுதியுலும் ஊக்கபடுத்தியமைக்கு மிக்க நன்றி...

மதார் said...

congrats ................