Thursday, August 5, 2010

ஈஸ்வரின் சபதம்


டேய் இன்னைக்கு எங்கயும் போகாத,என்னோட ஸ்கூல் ப்ரென்டு சுகந்தி வீட்டுக்கு போனும் டா..

ஒன்றும் காதில் விழாதவன் போல டிவி பார்த்துகொண்டிருந்தான் ஈஸ்வர்.

சமையல் அறையில் இருந்தவர் சற்று சப்தமாக, "டேய் சொன்னது கேட்டுச்சா ??" என்றார்..

கேட்டுச்சி..கேட்டுச்சி ..ஆமாம்,உங்க ப்ரென்டு வீடு எல்லாம் வறண்டு போய் தான் இருக்கும்.. சுத்த வேஸ்ட் .. எதாவது கண்ணனுக்கு குளிர்ச்சியா இருக்கா ?  

என்னடா ஏதோ பொலம்பிக்கிட்டு இருக்கா மாதிரி தெரியுது ??. 

அதெல்லாம் ஒன்னும் இல்ல, எப்போ போகனும்னு சொல்லுங்க ..

இன்னும் அரை மணிநேரத்துல என்றார் அவன் தாய்.

சரி, நீங்களும் அளவா மேக்கப் போட்டுக்கிட்டு தயாரா இருங்க,நான் இதோ வெளிய போயிட்டு வரேன். 


சரி சீக்கிரம் வந்துடு டா.

சரியாக 45 நிமிடங்கள் கழித்து வந்தான்..

எரும மாடே,நான் தான் போகணும்ன்னு சொன்னேன்ல.. எல்லாத்தையும் கேட்டுட்டு லேட்டாவே வர.. 

திட்டு வாங்கிகொண்டே அவனது வாகனத்தில் அழைத்து சென்றான்.

இறுதியில் ஒரு பச்சை நிற பெயிண்ட் அடிக்கபடிருந்த அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினான்..

"ஹாய் சுதா,எத்தன வருஷம் ஆச்சி உன்ன பார்த்து, இப்போ தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா உனக்கு? " என்று வழக்கமான வசனத்துடன் வரவேற்பு இருந்தது..

ஐயோ,இவங்க பள்ளிகூட கதை, கல்லூரி கதை, கல்யாண கதை இது எல்லாத்துக்கும் பிளாஷ் பாக் (flash back) போயிட்டு இப்போதைய கதைக்கு வரதுக்குள்ள எனக்கு மண்டையே வெடிசிடுமே..

எல்லாம் விதி..காலேஜ் இருக்கும் போது கட் அடிச்சிட்டு நல்லா சுத்தினேன். இன்னைக்கு
சண்டே, லீவ் விட்டும் இப்படி அவஸ்த படனும்னு இருக்கு என்று எண்ணி நொந்துக்கொண்டான்.


"இவேன் உன் பையன்தான,சின்ன வயசுல பார்த்தது.. நல்லா வளந்துட்டான் இப்போ" என்றார் சுகந்தி.


(இதே வசனத்த போன வாரம் தான் இன்னொரு ப்ரென்டு வீட்டுல சொன்னாங்க.இந்த அம்மா கூட படிச்சவங்க எல்லாருமே இப்படி தான் போல.)

என்னப்பா படிக்கற நீ ?

"B.Tech Bio Technology இறுதியாண்டு படிக்கிறேன்"

ஓஹ் அப்படியா, நல்ல கோர்ஸ் அது. நல்லா படி,நல்ல வேலையில போய் சீக்கிரம் உட்காரு என்று சொல்லி கையில் ஒரு தட்டில் கொஞ்சம் பிஸ்கட், ஒரே ஒரு லட்டு மட்டும் வச்சி கொடுத்தாங்க..

என்ன நடு வீட்டில் கையில் தட்டை கொடுத்து சாப்பட வச்சிட்டு, இவங்க மட்டும் ரூம்க்கு போய் ஏதோ பேசிட்டு இருக்காங்களே என்று கோவம் கோவமாக வந்தது..

லட்டை ருசித்துக்கொண்டிருந்தவன், திடிரென்று கண்களை சிமிட்டாமல் வீட்டு சுவரில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு போட்டோவை பார்த்தான்.

அதில் பெரியவர்கள் இருவரும், ஒரு அழகான பெண்ணும் இருந்தனர்.. 

"காவேரி டெல்டா பகுதி நிலம் போல காஞ்சி போய் இருந்தவன் முகத்துல,மேட்டூர் ஆணை திறந்து விட்டது போல் சந்தோஷம்" .

ஐயோ இப்படி ஒரு பொண்ணோட அம்மா என் அம்மாக்கு தோழியா ??
இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற வீட்டுக்கு கூட்டிகிட்டு வராம,இத்தன வருஷமா
நேரத்த வேஸ்ட் பண்ணி இருகாங்க என்று எண்ணிக்கொண்டு இருந்தான்..


தட்டில் இருந்த லட்டு வயிற்றை சென்றடைய, வெளியே கேட் திறக்கும் சப்தம் கேட்டது அவனுக்கு.

வீட்டினுள் இருவர் நுழைய, நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவன் அவளை பார்த்து எழுந்தே நின்றே விட்டான்.
(நல்லவேளை யாரும் அவனை கவனிக்கவில்லை)

அம்மா,நீங்க கேட்ட அந்த பிரியாணி அரிசி கடையில இல்ல,அப்பறம் இன்னைக்கு புதுசா ஒரு மசாலா பாக்கெட் வாங்கி வந்திருக்கேன் அது எப்படி இருக்குனு பாக்கலாம்
என்று நாற்காலி அருகில் நிற்கும் ஈஸ்வரை கவனிக்காமல் பேசிகொண்டே இருந்தால்.


"நீ முதலில் அறைக்குள் வா என்று அவளது தாய் அழைக்க,அவளும் உள்ளே சென்றால்.இவங்க தான் சுதா என்னோட ஸ்கூல் தோழி. உங்கிட்ட கூட சொல்லி இருக்கேன்ல அது இவங்க தான்" என்று அறிமுகம் படுத்தி வைக்க, எனது

"அம்மாவும்,உன் பொண்ணு சந்தியாவா இது ?,சின்ன வயசுல பார்த்தது நல்லா வளந்துட்டாள் இப்போ" என்று அதே ஸ்துதியை பாடினார்.


சிரித்துக்கொண்டே நான் BSC Maths படிக்கிறேன் என்றால். 
(வளர்ந்துட்டாலாம் அதை சொல்லி காட்டுரா  )

 
"ஓஹ்ஹ் கணக்கா, என் புள்ளைக்கு சுத்தமா வராது" என்றால் ஈஷ்வரின் தாய்.

அவள் அவனை ஒரு முறை பார்த்தல், உதட்டோரம் அந்த சிரிப்பு தெரிந்தது..

அம்மாவை முறைத்துகொண்டே,சந்தியாவை கரெக்ட் பண்ண வெறியா மனதை தயாராக்கி கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

அனைவரும் அறையில் உரையாட, இவன் மட்டும் சந்தியாவுடன் கடையில் இருந்து வந்த அவள் மாமா பையனிடம் விளையாடி கொண்டிருந்தான்.


ரெண்டு மணிநேர அரட்டைக்கு பிறகு அங்கிருந்து புறப்பட, அந்த சிறுவன், இந்த மாமா இங்கயே இருகட்டுமே என்றான்..

அதற்கு சந்தியாவின் தாய்,

"இப்போ போகட்டும் டா,ஒரு வேலைக்கு போயிட்டு சேர்ந்த பிறகு மாமாவ நம்ப வீட்டுக்கே கூப்டிக்கிட்டு வந்துடலாம்" என்று சொன்னார்.

இதை கேட்ட உற்சாகத்தில், சந்தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாகனத்தின் வேகத்தை உயர்த்தினான்.


"திறக்க மறுக்கும் என் இதய கதவை,
உடைக்க துடிக்கும் கள்ளி இவள் தானோ !!"
 

வீடு திரும்பும் வழியில்,அம்மாவிடம் எப்போ மறுபடியும் வர சொன்னாங்க என்று அவன் கேட்க,வழகத்துக்கு மாறா பேசுறானே என்ற சந்தேகத்துடன் வீடு வந்து சேர்ந்தார் சுதா.

1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

அம்மாவிடம் எப்போ மறுபடியும் வர சொன்னாங்க என்று அவன் கேட்க

------

லொள்ளு ? ஹ வேலைய தேட சொல்லுங்க ..