Monday, August 23, 2010

மதியுள்ள காதல்


 
அப்பா நான் உங்களோட கொஞ்சம் பேசணும்.


சொல்லுபா என்ன விஷயம்..
அப்பா நான் MBA படிக்க காலேஜ் சேர்ந்து ரெண்டு மாசத்துலயே என்னோடு படிச்ச ஸ்ரீலதாவ காதலிக்க ஆரம்பிச்சேன்.

ஆனா அவகிட்ட கூட என்னோட காதலை சொன்னதில்ல.
கஷ்டபட்டு படிக்க வைக்குறீங்க,காதல்னு வந்து நின்னா அது உங்களுக்கு எவ்ளோ வேதனைய கொடுக்கும்னு தெரியும்,அதான் அப்போ உங்ககிட்ட சொல்ல எனக்கு மனசு வரல.
ஆனா இப்போ வேலையில சேர்ந்து 1 வருஷம் முடிஞ்சிடுச்சி,இதுதான் உங்க கிட்ட பேச சரியான நேரம்னு எனக்கு தோனுச்சி அதான் சொன்னேன்.
நீங்க என்னோட நண்பன் போல தான் பழகுவீங்க,உங்க கிட்ட இந்த விஷயத்த மறைக்கணும்னு தோனல என்று அப்பாவிடம் கூறிமுடித்தான் சசி..


சரி எனக்கு ரெண்டு நாள் டைம் கொடு நான் கொஞ்சம் யோசிக்கணும் என்று கூறி விட்டு சென்றார்.


இரண்டு நாட்கள் கழித்து....


"ஹலோ ராமலிங்கம் சார் கிட்ட பேசலாமா?"


"சொல்லுங்க நான் ராமலிங்கம் தான் பேசுறேன் நீங்க யாருங்க ?"


"சார் என் பேரு சோமசுந்தரம் உங்க கிட்ட கல்யாண விஷயமா கொஞ்சம் பேசணும்..4 மணிக்கும் cafe day வரீங்களா?"


"சரி வரேன் சார்" என்று கூறிவிட்டு தொலைபேசியை கீழே வைத்தார் சசியின் தந்தை ராமலிங்கம்..


மாலை நேரம் 4 மணி...


சார் நான் தான் சோமசுந்தரம்,உங்களுக்கு போன் பண்ணது..

சொல்லுங்க சார் என்ன விஷயமா பேசணும்??


சார் என் பொண்ணு ஸ்ரீலதாவும் உங்க பையனும் ஒரே காலேஜ்ல MBA படிச்சிருக்காங்க..
அப்போவே என் பொண்ணுக்கு உங்க பையன் மேல காதல் வந்திருக்கு,ஆனா யார்கிட்டயும் சொல்லாம மனசுக்குள்ளையே வச்சிகிட்டா.
இப்போ அவ கல்யாணத்துக்கு மாப்ளை பாக்க ஆரம்பிச்சோம்,உடனே என்கிட்ட இந்த விஷயத்த சொன்னா.
இத்தனை நாள் கழுச்சி இப்போ சொல்றியேமானு கேட்டேன்..படிக்கும்போது காதல்னு சுத்துறது மனசுக்கு சரியா படலன்னு சொன்னா..
இப்போ ஒரு தகப்பன் என்கிற முறையில என் பொண்ணு ஆசை பட்டதை அவளுக்கு செய்யனும்னு உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் என்றார் சோமசுந்தரம்..


இதை கேட்டுக்கொண்டே இருக்க ராமலிங்கம் கண்களின் ஓரத்தில் சிறிது கண்ணீர் எட்டிபார்த்து,இப்படி ஒரு நல்ல மருமகள பாத்திருக்கானே பையன் என்று.. 

4 comments:

Unknown said...

ஹலோ யாரு? லதாவா? பாத்தியா நான் சொன்ன மாதிரியே நடந்துருச்சி. நீ சொன்ன மாதிரி லவ் பண்றோம் சேத்து வைங்கன்னு சொல்லியிருந்தா ரென்டு பேரோட அப்பவும் தைய்யா தக்கான்னு குதிச்சிருப்பாங்க.

இரகுராமன் said...

@ முகிலன் - MBA படிச்சிட்டு இந்த அறிவு கூட இல்லாட்டி எப்புடி ??

Jey said...

இத யாரும் திருடி படம் எடுத்துராம..., பயபுள்ளக செஞ்சாலும் செய்வானுக...

இரகுராமன் said...

@Jey - யாராவது திருடும் அளவுக்கு கதை நல்லா இருக்கா ??


Thanks :)