Thursday, August 26, 2010

மொழியும் பழியும்

மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்ல என் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டே போகும் மாயம் நிகழத்தொடங்கியது.

அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.

ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. 

உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,"சொல்லு டா" என்றேன்.

"டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming) டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன் பண்ணுவான் பேசிக்கோ சரியா??"   

"ஹ்ம்ம் சரி பேசுறேன்".

அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.

மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.

தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கிலத்திலேயே பேச தொடங்கினான்.

அவன் பேசிய ஆங்கிலம் என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. சங்கடத்திற்கு காரணம் அவன் ஆங்கிலம் பேசிய விதம்.ஒரு வழியாக பல தவறுகளுக்கு மத்தியில் அவன் என்னிடம் கேட்க வந்த கேள்வியை புரிந்துகொண்டேன்.

அவனுக்கு நான் தமிழிலேயே பதிலை தந்தேன்.15 நிமிடங்கள் வரை சென்ற எங்கள் உரையாடல் அவன் புரிதலுக்கு பின்பு ஒரு முடிவுக்கு வந்தது.

ரத்து செய்த பயணத்தை துவக்கும் எண்ணம் மட்டுமே உண்டாக, மீண்டும் அதே அதிர்வு.

"இப்போ தான்டா அவனுக்கு பேசி புரியவச்சி டவுட்ட கிளியர் பண்ணேன்."

"ஹ்ம்ம் சொன்னான், ஆனா டவுட் கிளியர் ஆனதை இல்ல,நீ ஆங்கிலம் பேச தெரியாம தமிழ்ல பேசியதை சொன்னான்".
 
(போனா போகுது,அவனுக்கு புரியட்டுமேன்னு தமிழ்ல சொன்னா,பயபுள்ள என்ன சொல்லியிருக்கு பாரு ??)

5 comments:

senthil velayuthan said...

unmaila unaku english teriyathu thanae.................

மரா said...

ஹா ஹா ஹா...ஆனாலும் நீங்க "Bug fix " பண்றதெல்லாம் தமிழ்ல சொல்லி குடுத்தா எப்புடி :)

இரகுராமன் said...

@senthil - enna ippadi solliteenga..
you are suppressing and depressing the feeling of a true thamizhan :P

@maraa - technical terms ah english la than solli aaganum. aaana solratha thamizh la sollalaame :)

Thanks for ur valuable comments :)

ஜானகிராமன் said...

அடுத்த தபா, சைனீஸ்ல சொல்லுங்க பிரதர். பயபுள்ள, பின்னங்கால் பிடரில அடிச்சு ஓடட்டும்.

பத்மா said...

ஹஹஹா நல்லா வேணும்