Friday, August 6, 2010

எங்க வீட்டு ராஜா



டேய் சீக்கிரமா அந்த டாக்டர்க்கு போன் போடுடா,அவனுக்கு ரத்தம் அதிகமா வருது ..
நம்பர் போட்டுட்டு தான் இருக்கேன் கொஞ்சம் இருங்க... பதட்டபடாதீங்க .


நான் என்னோட மொபைல்ல இருந்து உன் அப்பாவுக்கு தகவல் சொல்றேன்..

சரி சரி, நீங்க அப்பாகிட்ட சொல்லுங்க,ஆனா அவர டென்ஷன் ஆகவேனாம்னு சொல்லுங்க..

ஹலோ, நான் தான் வீட்டுல இருந்து பேசுறேன், நம்ப வீட்டுல இருக்கானே ஒரு
பொறுக்கி அவன் இன்னைக்கு தெருவுல சண்ட போட்டான்.. ரொம்ப அடிபட்டு இருக்குங்க ..ஒரே ரத்தமா வருது ..
 
ரமேஷ் டாக்டர்
க்கு போன் பண்ணிட்டு இருக்கான், உங்களுக்கும் தகவல் சொல்லலாம்னு தான் கூப்பிட்டேன் .. 

தகவல் மட்டும் பொறுப்பா என்கிட்ட சொல்லிடு.. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் அவன் இப்படி பொறுக்கி தனம் பண்ணிக்கிட்டு திரியறான்..

நான் மட்டும் என்ன பண்றது.எத்தன தடவ அவன கூப்பிட்டேன் தெரியுமா, சொல்ல சொல்ல மதிக்காம போனான், இப்போ இப்படி ரத்த காயத்தோட வந்து நிக்கறான்.. ரமேஷ் கூட அவன் பக்கத்துல போகவே பயந்துகிட்டு பொறுமையா இருந்துட்டான்.. மொரடனா இருக்கான் ..

அய்யோ ஒவ்வொரு நாளும் இப்படியே எதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தா,எங்க போய் முடிய போகுதோ எனக்கு பயமா இருக்கு டி..அக்க
ம்பக்கம் இருக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது,,

பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என் மடியில வந்து அமைதியா படுத்துட்டு இருக்கான். பாக்க பாவமாவும் இருக்கு.

அம்மா, பேசினது போதும் டாக்டர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டாரு. 

 
சரீங்க டாக்டர் வருவாரு போல இப்போ. மத்தத நீங்க வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்..

வாங்க டாக்டர், உங்கள வீட்டுக்கு வர வச்சதுக்கு மன்னிச்சிடுங்க,ரத்தம் அதிகமா போகுது இல்லனா அவன கூட்டிகிட்டு நானே வந்து இருப்பேன் உங்க வீட்டுக்கு..

ராஜாவை பார்த்த டாக்டர்,


ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் மருந்து எழுதி தரேன் அதை ஒரு வாரம் ஒழுங்கா போடுங்க எல்லாம் சரியாய் போய்டும் அவனுக்கு. பயப்பட ஒன்னும் இல்ல என்று ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார் ..
 

டாக்டர் சென்றவுடன் ராஜாவிடம்,

பிரச்சனை எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரு.. இப்போ மனசுக்கு ஆறுதலா இருக்கு.. இல்லனா நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பேன் .நீ இன்னைக்கு பண்ணதுக்கு தண்டனையா உனக்கு ரெண்டு நாள் சாப்பாடு கெடையாது.






அப்பறம் இந்த வாரம் உனக்கு non veg கூட இல்ல.. டேய் அவன புடிச்சி ரெண்டு நாள் கட்டி போடு டா,அப்போ தான் புத்தி வந்து நம்ப சொல்ற பேச்ச கேட்பான் இல்லனா போய் யார்கிட்டையாவது கடி வாங்கிட்டு வருவான் என்று கோவத்துடன் சொன்னார் அவர்..

இவரது கோபத்தைப் பார்த்து குழைவாய் வால் ஆட்டியது ராஜா.

7 comments:

ஜானகிராமன் said...

ஆகா இதுவும் கைப்புள்ள தானா...

இராகவன் நைஜிரியா said...

பயங்க லொள்.... ளு அய்யா உங்களுக்கு..

இராகவன் நைஜிரியா said...

// ஜானகிராமன் said...
ஆகா இதுவும் கைப்புள்ள தானா... //

இது கைப்புள்ள மட்டுமல்ல ... லொள்ளு பிள்ளையும் கூட...

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் சேர்த்தால் மட்டும் போதாது... நீங்களும் ஒரு ஓட்டு போடலாம்...

இரகுராமன் said...

இது வாலுப்புள்ள :-)
நல்ல பாருங்க வாலு இருக்கும் :P

நானே எழுதி நானே வோட் போடுறது நல்லவா இருக்கும் ?? :(

இருவருக்கும் நன்றி :)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்லாயிருக்கு இரகுராமன்.

இரகுராமன் said...

நன்றி மணி அண்ணா :)